உங்களுக்கு "பெரிய தொடை"களா? டோன்ட் ஒர்ரி பெண்களே.. நன்மைகளை பாருங்க.. அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே
சென்னை: பெரிய தொடைகள் உள்ள பெண்கள் கவலையேப்பட வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள்.. என்ன காரணம்? இதுகுறித்து சில பாசிட்டிவ் விஷயங்கள் வெளியாகி உள்ளன.
பல பெண்களுக்கு பெரிய அகலமான தொடைகள் அமைந்துவிடுவதால் பல சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.. உடல்எடையை குறைக்க நினைக்கும் பெண்களுக்கு, இந்த பெரிய தொடையை மட்டும் முதலில் குறைத்தால் போதும் என்றாகிவிடுகிறது.. அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய சேலஞ்சாகவும் அமைந்துவிடுகிறது...

அதேபோல, ஜீன்ஸ், ஷார்ட்ஸ் உள்ளிட்ட மார்டன் டிரஸ்களை அணியவும் அசௌகரியமாக நினைப்பார்கள்.. பெரிய தொடைகள் காரணமாக, இப்படி சங்கடங்கள் நிறைய இருந்தாலும், சில நன்மைகளும் இருப்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கொழுப்பு சத்து: உதாரணத்துக்கு கொழுப்புச்சத்தை எடுத்துக் கொண்டால், ஆண்கள், பெண்கள் இவர்களில் யாருக்கு அதிக கொழுப்பு உடம்பில் சேர்ந்தாலும் அது பிரச்சனைதான்.. ஆனால், பெண்களை பொறுத்தவரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை. ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு இந்த கொழுப்புகள், தொப்புளை சுற்றித்திரளும்.. இது மிகவும் ஆபத்தானது.. இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் அவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் டாக்டர்கள்.
இதுவே, பெண்களுக்கு, கொழுப்புகள், பிட்டங்களிலும், தொடைகளிலும் சேர்ந்துவிடுகிறது.. அங்கே தோலுக்கு சற்று கீழே மட்டுமே கொழுப்புகள் திரளும்... எனினும், அவைகள் என்னென்ன தெரியுமா? நம் உடலில் உள்ள தசைகளிலேயே மிகப்பெரியது தொடைதான்.. பரம்பரை, வயது, சில சமயங்களில் உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் தொடைகள் பெரியதாக உணர வைக்கும். ஆனால், இந்த பெரிய தொடையின் உதவியால்தான், நம் உடல் எடையை நம்மால் பராமரிக்க முடிகிறது..
தொடைகள் எடை: ஹார்வர்ட் ஹெல்த்படி, பெண்களின் தொடைகளில் எடை அதிகரிப்பதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் முக்கிய காரணம். இந்த ஹார்மோன் பெண்களின் கொழுப்பு செல்களை அதிகரிக்க செய்கிறதாம்.. இதனால் தொடைகளைச் சுற்றி கொழுப்பு சேரும்... பருவமடையும்போது பெண் ஹார்மோன்களின் அளவுகள் அதிகரிக்க துவங்குவதாக சொல்கிறார்கள். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சர்ச்சில் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்..
அதில் உடலின் மற்ற உறுப்புகளை விட, தொடை அல்லது பிட்டம் அதிக எடை கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள்.. கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எடை அதிகரிக்கும்.. அவர்களுக்கு உண்டாகும் பெரிய தொடைகள் உடல் எடையை சுமக்க உதவுகின்றன.. மேலும், பிரசவ காலத்திலும், குழந்தை பம்ப் செய்வதில் அதிக சிரமம் இருக்காது.. பிரசவத்தின்போது பெரிய தொடைகள் பெரிதும் உதவுகின்றன. கர்ப்பத்திற்குப் பிறகு உடல் பலவீனமடைய தொடங்கிவிடும்.. அப்போதும்கூட, கீழ் உடலை தாங்கி பிடிப்பது, பெரிய தொடைகள்தான் என்கிறார்கள்..
தடைகள் இயக்கம்: வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற பயிற்சிகளை செய்வதால், தொடைகள் வலுவாக இருக்கும்... இதைத்தவிர, தினமும் ஸ்குவாட் (squad), லஞ்சஸ் (lunges) சிறிது நேரம் செய்வதால் தொடை தசைகளின் இயக்கம் ஏற்படுகிறது... இது நீண்ட நேரம் உட்கார்ந்த பிறகும் அவர்களை உறுதியாக வைத்திருக்கும்... அதேபோல, மாடிப்படி ஏறுதல் கூட தொடைகளை பலப்படுத்துகிறதாம்.. ஆக, பெரிய தொடைகள் இருந்தால் பெண்கள் கவலையேப்படவேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள்.. அதேசமயம், வாக்கிங், ஜாக்கிங்கும், முக்கியம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications