நீங்க உடல் எடையை குறைக்கணுமா.. அப்ப வெயிட் லாஸுக்கு இந்த 2 ஜூஸையும் ட்ரை பண்ணுங்க.. ரொம்ப ரொம்ப ஈஸி
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், தவிர்க்கவே முடியாத விஷயம் உடற்பயிற்சிகள்தான்.. கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றாலும், உடல்எடை குறைய பக்கபலமாக இருப்பது ஒருசில பானங்கள்தான்.. அந்தவகையில் 2 எளிமையான பானங்களை, வைத்து ஜூஸ் தயார் செய்யலாம்.
அதில் ஒன்று சுரைக்காய் ஜூஸ், மற்றொன்று இஞ்சி ஜூஸ்.. இவை இரண்டையுமே 5 நிமிடத்தில் நாமே எளிமையாக வீட்டில் தயார் செய்துவிடலாம்.
சுரைக்காய் ஜூஸ்: சுரைக்காயையும், சிறிது புதினா இலைகளையும் குட்டி குட்டி துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.. பிறகு, சுரைக்காய், சிறிது இஞ்சி, புதினா இலைகள், ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் என அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும்... ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 நிமிடங்கள் கலக்கி, அதையும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.. இறுதியில், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது கல்உப்பு சேர்த்து, வடிகட்டி குடிக்கலாம்..

பலன்கள்: சுரைக்காயை பொறுத்தவரை, நீர்க்காய் எனப்படுகிறது.. சுமார் 92% சதவீதம் நீர் + தாதுக்கள் உள்ளன.. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இந்த காய் அவசியம் தேவை.. சுரைக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, இரும்பு, போலேட், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளதால், இதயத்தை பராமரிக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த சுரைக்காய் மிகவும் நல்லது.. ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. இதில் நார்ச்சத்துக்களும் நிறைய உள்ளன.. சுரைக்காய் கூட்டு, பொரியலைவிட, ஜூஸ் தயாரித்து குடித்தால், உடலில் இருக்கும் நச்சுகள் எளிதாக வெளியேறும்.. சருமம் பளபளப்பாக இருக்க உதவும்..
2வது ஜூஸ்: இதுபோலவே இஞ்சி ஜூஸ் செய்யலாம்.. இஞ்சியை தோல் சீவி, கழுவி சுத்தம் செய்து விட்டு, அதை துருவிக்கொள்ள வேண்டும்.. ஒரு கண்ணாடி பாட்டிலில், இந்த துருவிய இஞ்சி, சீரகப்பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.. இந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்தால், அதுவே இஞ்சி ஜூஸ்.. காலை, மதியம், இரவு என 3 வேளையும் உணவு எடுத்துக் கொள்வதற்கு, அரை மணி நேரத்திற்கு முன்னதாக இதை குடிக்க வேண்டும்.
பலன்கள்: இதை குடித்து வந்தால், அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வு தொல்லை நீங்கி, ஜீரண சக்தி அதிகரிக்கும்.. உடலில் கெட்ட கொழுப்புகள் தேங்காது.. உடல் எடையைக் குறைத்து பேருதவி செய்யும்.. காரணம், இஞ்சி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை போக்கும் அருமருந்தாகும்.. ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிரால் சேராது.. முக்கியமாக தொப்பையில் கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கப்படும்.. அதனால்தான் சீன உணவில், இஞ்சிக்கு ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு. இஞ்சிக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.












Click it and Unblock the Notifications