வெறும் "இது" மட்டுமே குடிங்க.. சர்ன்னு உடல் எடை குறையும்.. ஜப்பான்காரர்களின் மேஜிங் டிரிங்ஸ் இதுதான்
சென்னை: "அன்பே வா" படத்தில் எம்ஜிஆர் காஷ்மீரில் போய் இறங்கி காலெடுத்து வைத்ததுமே, அப்படியே குஜாலாக "உலகம்" என்று சொல்ல.. அது அப்படியே காஷ்மீர் முழுக்க எதிரொலிக்கும் பாருங்க.. அதேபோலத்தான் ஜப்பானில் போய் நீங்க இறங்கியதில் இருந்து, மறுபடியும் உங்க ஊருக்கு வண்டி ஏறுவது வரை உங்க காதுகளை விட்டு "மட்சா" என்று விடாமல் ரீங்காரமிட்டபடி இருக்கும். அதென்ன மட்சா?
வழக்கமாக ஜப்பானியர்களின் ஆயுட்காலம் என்பது சற்று நீண்டது.. இவர்களின் ஆரோக்கியத்துக்கும், நீண்ட ஆயுளுக்கும் காரணம், அவர்களது உணவுப்பழக்க முறைகள்தான்.

முக்கியமாக, ஜப்பானியர்கள் நகரத்தை சுற்றி நிறைய நடப்பார்களாம்.. எங்கே செல்வதானாலும், பெரும்பாலும் நடந்தே போவார்களாம்.. அல்லது சைக்கிளில் செல்வார்களாம்.. லிப்ட்களை உபயோகிக்காமல், எத்தனை உயர மாடிகள் என்றாலும், படிக்கட்டுகளில் ஏறிவிடுவார்கள்..
காய்கறிகள்: முக்கியமாக, சர்க்கரை அளவை உணவில் அவர்கள் குறைத்தே பயன்படுத்துகிறார்கள்.. மீன், பீன்ஸ், கடற்பாசி, காய்கறிகள் இப்படி நிறைய எடுத்து கொள்வார்கள். அதிலும், மிசோ என்று ஒரு உணவு உள்ளது. இது புளிக்க வைக்கப்பட்ட பீன்ஸ் பேஸ்ட்டாகும். இதை நிறைய சமையலுக்கு பயன்படுத்துவார்களாம். இன்னும் எத்தனையோ உணவுமுறைகளை இவர்கள் கடைப்பிடிப்பதாக சொல்கிறார்கள்.
இதில் காலை உணவாக இவர்கள் எடுத்து கொள்வது என்ன தெரியுமா? அதன் பெயர் "மட்சா" என்கிறார்கள்.. "மச்சான்" தெரியும்.. அதென்ன "மட்சா".. வாங்க அடுத்த பாராவுக்குப் போவோம்.
நம்ம ஊரில் பலரும் இப்போது கிரீன் டீக்கு மாறி வருகின்றனர். காரணம் உடல் நலம் குறித்த அக்கறை மட்டுமல்லாமல், டீ காபியால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களும்தான். ஜப்பானிலும் கூட கிரீன் டீ ரொம்ப பிரபலம்.. ஆனால் அங்கு அதன் பெயரே வேற.. அதன் ரேஞ்சும் வேற வேற!.. அதுதான் "மட்சா"
மட்சா டீ: மட்சா டீ, மட்சா ஐஸ்கிரீம், மட்சா டோனட்ஸ், மச்சா ஸ்மூத்தி என்று மட்சா இல்லாத உணவு சமாச்சாரமே அங்கில்லை.. அந்த அளவுக்கு மட்சா பைத்தியம் பிடித்துக் கிடக்கிறது மொத்த ஜப்பானும்...
ஆனா பாருங்க, எந்த மட்சாவை எடுத்து சாப்பிட்டாலும் அதோட டேஸ்ட் நுனித்தொண்டையில் ஆரம்பித்து அடி வயிறு வரை பாய்ந்து போய் நம்மை புளகாங்கிதப்படுத்தும்.. அப்படி ஒரு டேஸ்ட்!
பதார்த்தம்: உண்மையிலேயே வேற லெவல் தாங்க இந்த மட்சா.. மட்சா என்று பெயர் கொண்ட எந்த பதார்த்தையும் கண்ணை மூடிக்கொண்டு வாயில் போட்டுக்கலாம்.. டேஸ்ட் 200% உத்தரவாதம். என்ன ஒரு விசேஷம்னா. இந்த மட்சா கொஞ்சம் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் மருத்துவ பலன்கள் வழக்கமான கிரீன் டீயில் கிடைப்பதை விட பல மடங்கு அதிகமாம். மட்சா கசப்பாக இருக்கும் என்பதால்தான் அதை ஐஸ்கிரீம் உள்ளிட்ட இனிப்பான மேட்டர்களில் கலந்து அவர்கள் சாப்பிடுகிறார்கள்..!!
மட்சா என்பது சாதாரண பச்சைத் தேயிலைதான்... வழக்கமாக நாம் இங்கு குடிக்கும் பச்சை தேயிலையில் உள்ள கசப்பை விட ஜப்பானில் பயன்படுத்தும் இந்த மட்சா தேயிலையில் கசப்புத்தன்மை ரொம்ப அதிமாக இருக்கும். அதேசமயம், இதன் பலன்கள் எக்கச்சக்கமாக இருக்கும்.. 10 மடங்கு சத்து அதிகம் இருக்குமாம். பெரும்பாலும் மில்க்ஷேக், ஐஸ்கிரீம், ஸ்மூத்திஸ், டோனஸ்ட் போன்றவற்றில் மச்சாவைக் கலந்து சாப்பிடுகிறார்கள் ஜப்பானியர்கள்.
சரி மட்சா-வை பத்தி பார்த்தாச்சு.. அடுத்து அதை வச்சு ஒரு பானம் தயாரிச்சு குடிக்கலாமா? வாங்க.. ரொம்ப ஈஸிதான்.. உடம்புக்கும் ரொம்ப ரொம்ப நல்லதும் கூட.
தேங்காய்ப்பால் ருசி: இதுக்குப் பெயர் மட்சா லட்டே.. இதை தயாரிக்க மூனே மூனு பொருட்கள்தான் தேவை.. மட்சா பவுடர், சூடான தண்ணீர் மற்றும் தேங்காய் பால். அவ்வளவுதான்.
முதலில் மட்சா பவுடரை எடுத்து ஒரு பவுலில் போட்டுக்குங்க. அதில் காய்ச்சிய சுடுதண்ணீரை சேருங்கள்.. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சேர்க்க வேண்டும்... முதலில் தண்ணீரை ஊற்றிய பிறகு, மெதுவாக கலக்க வேண்டும்.. மட்சா பவுடர், நன்றாக தண்ணீரில் கரையும் வரை அதைக்கலக்க வேண்டும்... நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்... கிளாக்வைஸில் கலக்கிட்டே இருங்க...
சூப்பர் பானம்: நன்றாக கலந்த பிறகு, தயாராக வைத்துள்ள தேங்காய்ப்பாலை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்ற வேண்டும்.. பாதாம்பாலும் கூட சேர்க்கலாம்.. அது இன்னும் செம டேஸ்ட்டா இருக்கும். தேங்காய்ப்பாலை ஊற்றிகலந்த பிறகு, டம்பளரில் ஊற்றி சர்வ் பண்ணி குடிக்க வேண்டியதுதான்.. தேவைப்பட்டால் ஸ்வீட்னர் சேர்த்து கொள்ளலாம். அதைச்சேர்க்காமலும் கூட குடிக்கலாம்.. செஞ்சு பார்த்து குடிச்சுட்டு டேஸ்ட் எப்படி இருந்துச்சுன்னு வந்து மறக்காம சொல்லுங்க. ஆனா, ஜப்பான்காரன் மூளையே மூளை..!!
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications