கேன்சர் டேஞ்சர்.. புற்றுநோய் வர முக்கிய காரணமே இதுதான்.. நீங்க வெயிட் அதிகமாக இருக்கீங்களா.. இதை படிங்க
சென்னை: உடல்பருமன் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகின்றன என்றாலும், அதில் தலையாய ஆபத்தாக உள்ளது புற்றுநோய்தான் என்கிறார்கள் நிபுணர்கள்.
உடம்பில் வெயிட் போட்டுவிட்டால், அது நம் அழகை குறைத்து விடுகிறது என்று நினைக்கிறோம்.. அதாவது உடல் பருமனை, வெறும் அழகுடன் மட்டுமே தொடர்பு படுத்தி பார்க்கிறோம்..
அது பல்வேறு பிரச்சனைகளின் அறிகுறிகள் என்பதை சிந்திக்க மறந்து விடுகிறோம்.. உடல் பருமன் இருந்தால், கேன்சர் நோய் தாக்கும் ஆபத்தும் உள்ளது.. 13 வகையான புற்றுநோயுடன் தொடர்புடையதாக இருக்கிறது இந்த
உடல்பருமன்.

பித்தப்பை: குறிப்பாக, உணவுக் குழாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், வயிற்று புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கணையப் புற்றுநோய்,தைராய்டு புற்றுநோய், மெனிங்கியோமா (ஒரு வகை மூளை புற்றுநோய்), மைலோமா (எலும்பு மஜ்ஜை புற்றுநோய் வகை), ஆகிய புற்றுநோய்கள் வருவதற்கான ஆபத்துகள் மிக அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.
ஆனால் நாம், சிகரெட் பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக நினைத்து கொண்டிருக்கிறோம்.. சிகரெட் எப்படி பெரும்பான்மையான புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறதோ அதுபோலவே, உடல் பருமனும் பெரும்பாலான புற்றுநோய்க்கு காரணமாகின்றன.. இதற்கெல்லாம் ஒரே வழி, உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இருப்பது மட்டுமே... 25 மற்றும் 30க்கு இடையில் பிஎம்ஐ அளவு உள்ள நபர்கள் அதிக எடை கொண்டவர்களாகவும், 30க்கு மேல் இருந்தால் அவர்கள் உடல் பருமனுடையவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்..

உடல் பருமன் மற்றும் அதிக எடையுடன் இருப்பது புற்றுநோய்க்கு வழிவகுப்பதுடன், உடலில் ஏகப்பட்ட மாற்றங்களை தூண்டிவிடும்.. அதாவது, அடிவயிற்றின் உள்ளே இருக்கும் கொழுப்பு செல்கள் (உள்ளுறுப்பு கொழுப்பு) அடர்த்தியானவை. இவை உடலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவைக் குறைக்க செய்துவிடும். இதன்காரணமாகவும் உடல் வீக்கங்கள் ஏற்படும். இவையெல்லாம் புற்றுநோயுடன் தொடர்புடைய பிரச்சினைகளாக இருக்கின்றன என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்,
ஆபத்து, ஆபத்து: அதனால், சிகரெட் பிடிப்பதைவிட, உடல் பருமன்தான் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.. இங்கிலாந்தை சேர்ந்த ஒரு மருத்துவ நிறுவனம் பல வருடங்களாகவே, புற்றுநோய் குறித்து ஆய்வு செய்து இந்த தகவலை தற்போது வெளியிட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு பால் புட்டியால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை உலகிற்கு பறைசாற்றியதும் இந்த நிறுவனம்தான்..
வார்னிங்: குடல், சிறுநீரகம், கல்லீரல், கருப்பை புற்றுநோய் உட்பட 13 வகையான புற்றுநோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பதும் உடல் பருமன் தான் என்கிறது இந்த ஆய்வு... உலகம் முழுவதும் உடல் பருமன் காரணமாக 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனராம்.
'புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்' என்று நாம் தினம் தினம் சொல்கிறோம்.. ஆனால், அதே அளவுக்கு "அதிகமான உடல் பருமனும் புற்றுநோயை உண்டாக்கும்" என்று நாம் ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்ற கேள்வியை முன்வைக்கிறது அந்த ஆய்வு.. இதில் என்ன ஒரு ஆறுதலான விஷயமென்றால், உடல் பருமன் உடைய எல்லோரையுமே புற்றுநோய் தாக்காது என்பதுதான்.. ஆனால், தேவையில்லாமல் உடல் பருமன் அதிகரிக்கும்போது, புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்று ஆலோசனை தருகிறார்கள் மருத்துவர்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications