"இது சிகிச்சை இல்லை.. சட்டவிரோத போலீஸ் காவல்!" உயர் நீதிமன்ற படியேறிய சோனம் வாங்சுக் மனைவி! பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவர் இப்போது டெல்லி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே வாங்சுக் சட்டவிரோதமாக மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சொல்லி அவரது மனைவி கீதாஞ்சலி வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை வலியுறுத்திக் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கெல்லாம் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

Sonam Wangchuk Delhi neet protest

சோனம் வாங்சுக்

இதில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். உண்ணாவிரதத்தின் 21வது நாளில் அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் ஜந்தர் மந்தரில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்து கொள்ள மறுப்பதாக கூறப்படுகிறது.

வழக்கு

இதற்கிடையே சோனம் வாங்சுக் மனைவி திடீரென டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது வாங்சுக் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் மாறாக சட்டவிரோதமாக போலீசார் அவரை தடுப்பு காவலில் வைத்திருப்பதாக சொல்லி அவரது மனைவி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குடும்பத்தினர் சொல்லும் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அரசு அனுமதிக்க மறுப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், வாங்சுக்கிற்கு இத்தனை நாட்கள் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் அவரை சந்திக்க முழு அனுமதி வழங்க வேண்டும் என்றும் மருத்துவ அறிக்கைகள் மற்றும் பரிசோதனை முடிவுகளை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மனைவி கீதாஞ்சலி

இது தொடர்பாக கீதாஞ்சலி ஆங்மோ கூறுகையில், "சஃப்தர்ஜங் மருத்துவமனை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. வாங்சுக்கின் பொட்டாசியம் அளவு 2.9ஆக குறைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. இது உயிருக்கு ஆபத்தான நிலை. ஆனால், அந்த நம்பரை சொல்லாமல் வெறுமன பொட்டாசியம் அளவு குறைந்துள்ளது என்று மட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால், வெளியே நாங்கள் செய்த ஆய்வில் பொட்டாசியம் அளவு 3.5 இயல்பான வரம்பிற்குள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இப்படி பல முரண்பாடுகள் இருப்பதால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால், அதை ஏற்க மறுக்கிறார்கள். மருத்துவமனையில் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ள தளத்தில் மட்டும் 30 போலீசார் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். இது மருத்துவ சிகிச்சை இல்லை.. சட்டவிரோத தடுப்புக் காவல்.

Sonam Wangchuk Delhi neet protest

எனவே, அவரது உடல்நிலை மேலும் மோசமடைவதற்கு முன்பாக அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம்.. எங்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதற்காகக் கூட நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை வரக்கூடாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றம்

மறுபுறம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படியே வாங்சுக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக டெல்லி போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சஃப்தர்ஜங் மருத்துவமனை உயர்தர சிகிச்சை வழங்கக்கூடியவை என்றும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பிறகு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+