உங்க "தொப்பை" குறையணுமா.. இந்த 3 ஜூஸையும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்.. நல்ல ரிசல்ட் கிடைக்குதாமே
சென்னை: உடல் எடையை குறைப்பது இன்றைய பிஸியான காலகட்டத்தில் பெரும் சவாலாக உள்ளது.. இதற்கு எளிய முறையில், அதுவும் இயற்கை முறையிலேயே சில டிப்ஸ்களும் சொல்லப்படுகின்றன.
இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களால், உடல் பருமன் பெரும் பிரச்சனையாகிவிட்டது... உடல் பருமனால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல நோய்கள் எளிதாக நம்மை கவ்வி கொள்கின்றன. இதனால் உடல் எடையை குறைக்க படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
ஜிம், யோகா, மற்றும் உடற்பயிற்சி போன்றவையெல்லாம் தவிர்க்க முடியாத விஷயங்களாகிவிட்டன.. எனினும், இந்த பரபரப்பான வாழ்க்கை முறையில், உடற்பயிற்சிக்கு போதிய நேரத்தை ஒதுக்க பெரும்பாலானோரால் முடிவதில்லை.

முதல் சாறு: அப்படிப்பட்ட சூழ்நிலையில், இயற்கையான வழியில் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. அதிலும் தொப்பை கொழுப்பை குறைப்பது பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. சில ஜூஸ்களை சாப்பிட்டால், உடல்நலத்துக்கு நல்லது என்பதுடன், தொப்பை குறைக்கவும் உதவுதாக சொல்கிறார்கள். அதில் 3 சாறுகள் முக்கியமானவையாம். முதலாவதாக தனியா சாறு.
1 தேக்கரண்டி தனியா விதைகள், 1 தேக்கரண்டி சோம்பு, 1 ஏலக்காய், 200 மில்லி தண்ணீர்.. இவைகளை கொண்டு தயாரிக்கலாம்..
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். பிறகு, மற்ற பொருட்கள் அனைத்தையும் சூடான நீரில் போட்டு கொதிக்க விடவும், தண்ணீர் பாதியாகக் குறையும்வரை கொதிக்க வேண்டும். விருப்பமிருந்தால், சுவைக்கு 1-1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கலாம்... அவ்வளவுதான்.. தினமும் காலையில் வெறும்வயிற்றில் இதை குடித்தாலே போதும்.. ஒரு நாளைக்கு 2-3 முறையாவது குடிக்கலாம். உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்க செய்வதுடன், உடல் எடையும் குறைவதுடன், தொப்பையையும் குறைக்க உதவுமாம்.
அதேபோல, இஞ்சி வெள்ளரிச்சாறு உடல்எடையை குறைக்க உதவி செய்கிறது.. வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கவும் செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் இஞ்சி வெள்ளரி சாறு குடிக்கலாம்.

2வது சாறு: எலுமிச்சை - 1, வெள்ளரி - 1, இஞ்சி - 1 சிறிய துண்டு, தண்ணீர் - 1 கப் இவைகளை கொண்டு இந்த சாறை தயாரிக்கலாம்.. வெள்ளரிக்காய், இஞ்சி இரண்டையுமே தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்து, இறுதியாக எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் போதுமாம்.
மூன்றாவதாக, வைட்டமின்கள் + நார்ச்சத்து + ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சாறு பெரும்பங்கை வகிகின்றன.. செல்களை புத்துயிர் பெற செய்து, உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற இந்த சாறு உதவுகின்றது... ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், செரிமானம், கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கிறதாம்.
3வது சாறு: கேரட், பீட்ரூட், ஆப்பிள் மூன்றையும் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கொண்டு, மிக்ஸர் ஜாரில், தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பானத்தை வடிகட்டாமல், சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.. இந்த சாறில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் என்பதால் ஒரு சிலருக்கு வாயு தொந்தரவு ஏற்படலாம்...
அப்படி வாயு பிரச்சனைகள் இருந்தால் இந்த சாறு அரைக்கும் பொழுது சிறிதளவு இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம். இதுவும் உடல்எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள். இதெல்லாம் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு சொல்லப்படும் சாறுகள் என்றாலும், இவற்றை பின்பற்றுவதற்கு முன்பு, டாக்டர்களின் ஆலோசனையையும் கட்டாயம் பெற வேண்டும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications