நாலஞ்சு "துண்டு".. குட்டி பழத்தில் இவ்ளோ மேட்டரா.. உடல்எடை குறையுதே.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா
சென்னை: ஒரே ஒரு பழம் இத்தனை மருத்துவத்தை தனக்குள் வைத்திருக்கிறதா? என்ற ஆச்சரியத்தை கிளப்புகிறது பேரீச்சம்பழம்.. விலை மலிவாக, அதேசமயம், நிறைந்த சத்துக்கள் தேவைப்படுவோருக்கு இந்த பழம் பெஸ்ட் சாய்ஸ்.
சமீபத்தில், "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன்" ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதன்படி, பேரிச்சம்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை கூறி ஆச்சரியத்தை கிளப்பியிருந்தது.
வெறும், 100 கிராம் பேரீச்சம்பழத்தில் 311 கலோரிகள், 9 கிராம் நார்ச்சத்து, 1 முதல் 3 கிராம் புரதம் மற்றும் செலினியம், மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பேட் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாம்.. உலர்ந்த அடர் பழுப்பு பேரிச்சம்பழங்கள் ரத்த சோகைக்கு மிகவும் என்கிறது அந்த ஆய்வு.. காரணம், 100 கிராம் பேரீச்சம்பழத்திற்கு 4.70 மி.கி. இரும்புசத்து இருக்கிறதாம்..

ஆய்வுகள்: பேரீச்சம்பழத்தில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அதாவது ஃபிளாவனாய்டுகள், பினாலிக் அமிலங்கள், ஐசோஃப்ளேவோன்கள், குர்குமின், ஐசோதியோசயனேட்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உள்ளன என்றும் ஆய்வு கூறுகிறது.
வைட்டமின் A குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சத்துக்கள் கிடைப்பதுடடன், கண் பார்வை கோளாறுகளும் நீங்கும்.
வைட்டமின் A: பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலை போக்குகிறது.. செரிமானத்தை அதிகரிக்க செய்கிறது.. நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். வெயில் காலங்களை விட குளிர், காலங்களில் நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும். அந்த வகையில், ஆரோக்கிய உணவுகளை குளிர் காலத்தில் எடுத்து கொண்டால் நோய் கிருமிகள் நம்மை அண்டாமல் தடுக்கலாம்.
குறிப்பாக, பேரீச்சம்பழத்தில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் என அத்தனை ஊட்டசத்துக்களும் உண்டு.. இவைதவிர, வைட்டமின் D, காப்பர் போன்ற சத்துக்களும் உண்டு.. இவை அத்தனையும் எலும்புகளுக்கு வலு சேர்ப்பதாகும்... அத்துடன் பற்கள் வலுவாக இருக்கவும் உதவக்கூடியது.
மாரடைப்பு: குளிர் காலங்களில் மூட்டு வலி உள்ளோருக்கு, பேரீச்சம் சிறந்த தீர்வாகும்.. மெக்னீஷியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் தன்மை இதில் உள்ளதால், உள்ளதால் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.
கொலஸ்ட்ரால்: பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.. இந்த பழத்துடன், பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு, பிரசவம் முடிந்த பிறகு உடல் எடையை குறைக்க உதவியாக இருப்பது பழம்தான்..

பெண்கள்: அதேபோல உடல்எடையை குறைக்க நினைக்க அனைவருக்குமே, இந்த பழம் பேருதவி புரிகிறது. பேரிச்சம்பழத்தை நட்ஸ்-வுடன் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் பலம் கிடைக்கும்.. அதேபோல, ஆரோக்கியமான உணவுகளுடன் இதை சேர்த்து சாப்பிடுவதால், அதிக பசி எடுக்காமல் தடுக்கும் என்றும், உடல் பருமன் ஏற்படமாமல் தடுக்கும் என்கிறார்கள்.
குழந்தைகள் சாப்பிடுவதால், மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.. நினைவுத்திறன் கூடும்.. சளி அல்லது இருமல் இருந்தால், பேரீச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும். நீரழிவு நோயாளிகள் தினமும் இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். ஆனால், நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாமா ? என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.
உடல் எடை: பேரிச்சம் பழங்களை சாப்பிடுவது ரத்த குளுக்கோஸ், கொழுப்பு, உடல் எடை அல்லது இரத்த அழுத்தம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.. அதில் கலோரிகள் மிகவும் அதிகமாக சரியான வகையான பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தடுக்கலாம் என்கிறார்கள்..
ஆனால், தினமும் இரண்டு முதல் 3 பழங்கள் மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றும், அப்படியே பேரீச்சம்பழம் சாப்பிட்டாலும் இருக்கிறது. தேவையான அளவு உடற்பயிற்சி செய்து கலோரிகளை கரைத்துவிட்டால், எந்த பிரச்சனையும் இருக்காதாம். எனினும், டாக்டர்களின் அனுமதியுடன், அவர்களின் பரிந்துரையுடன் அளவுடன், எடுத்து கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.!!












Click it and Unblock the Notifications