ஜாதிக்காய்.. அந்த தொல்லையை தீர்க்கும் ஜாதிக்காய்.. பாலியல் சிக்கலுக்கு தீர்வு தந்து "சாதிக்கும் காய்"
சென்னை: பாலியல் உணர்வை தூண்டக்கூடிய ஜாதிக்காய் பற்றி தெரியுமா? இதை ஊறுகாய் போட்டு சாப்பிடும்போது, அதனால் ஏற்படும் பலன்களை பற்றி தெரியுமா?
ஜாதிக்காய் இல்லாத பிரியாணி கிடையாது.. வாசனைக்கு இந்த ஜாதிக்காயை பயன்படுத்துவார்கள்.. ஆனால், வெறும் நறுமணத்துக்கு மட்டுமல்லாமல், மருத்துவத்துக்கும் இந்த ஜாதிக்காய் பயன்படுகிறது. காரமும் + துவர்ப்பும் கொண்டது இந்த ஜாதிக்காய்..
ஜாதிக்காயை சாப்பிடும்போது, நினைவாற்றல் பெருகும். ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து, அதனுடன் டபுள் மடங்கு சீரகத்தை சேர்த்து தூளாக்கி, உணவுக்கு முன்பு, மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வாயுத்தொல்லை நீங்கும் என்பார்கள்.. செரிமானகோளாறு நீக்குகிறது..

கெட்ட கொழுப்பு: இதனால், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, போன்ற அனைத்து குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சீராகும்.. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கக்கூடியது இந்த ஜாதிக்காய்.
"இயற்கையின் வயாகரா" என்பார்கள் இந்த ஜாதிக்காயை.. காரணம், பால் உணர்வை இந்த காய் தூண்டக்கூடியது.. சித்த மருத்துவத்தில், இந்த ஜாதிக்காய்க்கு தனி இடம் உண்டு.. ஆண்களுக்கு காமப்பெருக்கத்துக்கு மிகவும் உதவுகிறது. ஆண்களின் விந்து எண்ணிக்கையை அதிகப்படுத்தக்கூடியது.. அதுமட்டுமல்ல, தாம்பத்தியம் தொடர்பான எந்த பிரச்சனைகள் ஏற்பட்டாலும், ஜாதிக்காய் பயன்படுத்தினாலே போதும்..
சூரணங்கள்: ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடுவார்கள். மரத்தில் இருந்து பறிக்கப்பட்டு, அடுத்த 3 நாட்களுக்குள் ஜாதிக்காயின் சதைப்பற்றான தோல் பகுதியை சிறிது சிறிதாக வெட்டி ஊறுகாய் போடுவார்கள். இந்த ஊறுகாயை சாப்பிடும்போது, மன அழுத்தம் குறையும்..
அல்லது ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து கொண்டு, வெறும் 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிப்பார்கள். ஆண்மை குறைவை போக்க இந்த சூரணத்தைதான் பயன்படுத்துவார்கள். அல்லது தூங்கும் முன்பு, பாதாம் பருப்பை பாலில் அரைத்து, அதனுடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலிமை பெற்று, ஆண்மை நீங்கி நரம்பு தளர்வு நீங்கும் என்பார்கள்.
தோல் வியாதிகள்: மன அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியது. சருமத்திற்கு பொலிவையும், ஆரோக்கியத்தையும் தருவது இந்த ஜாதிக்காய்.. முதுமையை விரட்டி இளமையை தக்க வைக்கும் சக்தி, இந்த ஜாதிக்காய்க்கு உண்டு. அதனால்தான், ஆண்ட்டி-ஏஜிங் க்ரீம்களில் இந்த ஜாதிக்காயை சேர்ப்பார்கள்..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைக்கு இந்த ஜாதிக்காய் மிகவும் நல்லது.. புற்றுநோய்க்கான அபாயத்தையும் குறைக்கிறது. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், சிறிது ஜாதிக்காயை உரசி நாக்கில் தடவுவார்கள்.
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், தழும்புகள் மீதும் பூசிவந்தால், அவைகள் காணாமல் போகும்.. தேமல், படை போன்ற தோல் வியாதிகளுக்கு சித்த மருத்துவத்தில் நிறைய ஜாதிக்காய் பயன்படுத்துவார்கள். பல் வலி வந்தால், அந்த இடத்தில் 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெய் தடவ வலி குணமாகும்.. தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள், ஜாதிக்காய் பொடியை அரை ஸ்பூன் எடுத்து, சூடான பாலில் கலந்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்..
ஆலோசனை கட்டாயம்: ஆனால், இந்த ஜாதிக்காயை அதிகம் சாப்பிடக்கூடாது.. குமட்டல், வாந்தி, வயிற்றில் எரிச்சல், மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.. மலச்சிக்கல் வரலாம். அதனால், ஜாதிக்காய் சாப்பிடும்போது, டாக்டரை கலந்தோசித்து சாப்பிடுவதே நல்லது.












Click it and Unblock the Notifications