Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறு சிறு சிறுகீரை.. ஆண்களின் வரப்பிரசாதம் "சிறு கீரை".. சர்க்கரை நோயாளியின் "தோழன்" இந்த சிறுகீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய வீடுகளில் இன்றுவரை தவிர்க்க முடியாத கீரை, இந்த சிறுகீரை.. இதற்கு காரணம், இதிலுள்ள சத்துக்களை நம் முன்னோர்கள் அன்றே கணித்தும், அறிந்தும், பயன்படுத்தியும் வந்திருந்தது தான்.

இந்த சிறுகீரையின் தண்டுகள் நீளமாக இருக்கும்.. ஆனால், இந்த கீரையின் தண்டு, இலை இரண்டுமே மருத்துவ பலன்களை கொண்டிருக்கின்றன.. நார்ச்சத்து நிரம்பிய கீரைகளில் இந்த சிறுகீரையை தவிர்க்க முடியாது.. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானம் எளிதாகி, வயிற்றை சுத்தப்படுத்துகிறது.. மலச்சிக்கலையும் தீர்க்கிறது..

வைட்டமின் A, B, C, மற்றும் இரும்புச்சத்து,பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் இந்த சிறுகீரையில் நிரம்பி கிடக்கின்றன..

Health Uses of Sirukeerai and Do you know Siru Keerai is the Excellent food for the Diabetics

வைட்டமின்கள்: இதிலுள்ள வைட்டமின் ஏ - நம்முடைய கண்களுக்கு நலனை அள்ளித்தருகிறது.. கீரையிலுள்ள கால்சியம் சத்துக்கள், எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிப்பாட்டுக்கும் உதவுகிறது.. உள்ளுறுப்புகளை வலுப்படுத்துவதில் இந்த சிறுகீரைக்கு மிக முக்கிய பங்கு உள்ளது.. இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு அதிக ஆற்றலையும், சக்தியையும் தருவது இந்த சிறுகீரை.

சிறுநீர்ப்பையை சிறப்பாக செயல்பட வைக்கிறது இந்த சிறுகீரை.. இதனால், சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கு, இந்த கீரையின் பங்கு அபரிமிதமானது. சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள், சிறுகீரையை வாரம் 2 முறையாவது சமையலில் சேர்த்து கொள்ள வேண்டுமாம்.

ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்களும், இந்த கீரையை அடிக்கடி சாப்பிடவேண்டும். இதனால், ரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்..

காயங்கள் - ரணங்கள்: உடம்பில் ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை இந்த சிறுகீரைக்கு உண்டு. அத்துடன், காயங்களில் தொற்றுக்களை ஏற்படாமலும், தடுக்க உதவு புரிகிறது. அதனால்தான், சிறுகீரையுடன் மஞ்சளையும் சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு, காயங்கள் உள்ள இடங்களில் தடவுவார்கள். இதனால், புண்கள் விரைவில் ஆறும். அதேபோல, சிறுகீரை + மஞ்சள் + முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து, முகப்பருக்கள் மீது பூசினால், பருக்கள் மறையும்..

சிறுகீரையின் வேர்கூட மருத்துவ குணம் நிறைந்தது.. வழக்கமாக சிறுகீரையை அதிகம் சேர்த்து கொண்டால், சிறுநீர் நன்றாக பிரியும்.. இதற்கு சிறுகீரையின் வேர்கூட பயன்படுத்தலாம்.. சிறுகீரையுடன், அதன் வேர்களையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு, மிளகுத்தூள், உப்பு, நெய் சேர்த்து அம்மியில் அரைக்க வேண்டும். இவற்றிலிருந்து, 5-10 கிராம் அளவுக்கு 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், நினைவுத்திறன் பெருகுமாம்.

ஆண்களின் வரப்பிரசாதம்: சிறுகீரையை ஆண்களின் அருமருந்து என்றே சொல்லலாம்.. சில ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்பட்டுவிட்டால், இந்த கீரையை சமையலில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். இதனால், ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்படும் என்கிறார்கள்.

Health Uses of Sirukeerai and Do you know Siru Keerai is the Excellent food for the Diabetics

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், இதய நோயாளிகள், என அனைவருக்கும் ஏற்ற கீரை இந்த சிறுகீரையாகும்..

அஜீரணம்: ஆனால், இரவில் கீரை சாப்பிடக்கூடாது.. இந்த கீரை என்றில்லை.. எந்த கீரையுமே இரவில் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இதற்கு காரணம், கீரையில் நிறைய நார்ச்சத்து உள்ளதால், எளிதில் ஜீரணமாகாது.. மேலும், அசைவ உணவுகளை கீரையுடன் சேர்த்து சமைக்கக்கூடாது என்பார்கள்.. கீரை + அசைவ உணவு = இரண்டுமே எளிதில் ஜீரணிமாகாது. இரண்டுமே மலச்சிக்கல் உள்ளிட்ட உபாதைகளில் கொண்டுபோய் விட்டுவிடும் என்பதால்தான், இவைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+