Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெண்டை மீன்கள்.. ஜிலேபி கெண்டை மீனில் இவ்ளோ விஷயம் இருக்கா.. ஆனாலும் ஒரு தொந்தரவு.. நோட் பண்ணிக்குங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கெண்டை மீனைவிட, கெண்டை கருவாடு நிறைய சத்துக்கள் நிறைந்ததாம்.. இந்த வெள்ளை மீனில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றன?

மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்போதெல்லாம், அசைவப்பிரியர்களுக்கு கை கொடுத்து உதவுவது இந்த ஜிலேபி கெண்டை மீன்தான். காரணம், ஆறு, குளம் ஏரி போன்றவற்றில் இந்த மீன் நிறைய வளரும்..

Health Uses of Tilapia Fish and Do you know Tilapia Fish is the Excellent food for women

"கடலின் கோழி" என்று இந்த ஜிலேபியை சொல்வார்கள்.. இதன் செதில்கள் பெரிதாக காணப்படும்.. உடல் இளம்மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், இதன் வயிறு மட்டும் வெள்ளைக்கலரில் இருக்கும்..

கெண்டை மீன்கள்: வீடுகளில் அனைவருக்கும் பரிச்சயமான மீன் இது.. இந்த மீனில், வைட்டமின் பி12, வைட்டமின் பி6, நியாசின், பாந்தேனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன.. அதனால்தான், கர்ப்பிணிகள் இந்த மீனை தவறாமல் சாப்பிட வேண்டும் என்பார்கள். ஆனால், 340 கிராம் மட்டுமே சேர்த்து கொள்ள வேண்டுமாம். அதுவும் டாக்டரின் அனுமதியுடன்.

கெண்டை மீனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அடர்ந்துள்ளதால், சருமத்துக்கு மேன்மை தருகிறது.. உடல் சுருக்கங்களை தள்ளிப்போடுகிறது.. சரும பளபளப்பும் கிடைக்கிறது.

மலச்சிக்கல்: நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், முடக்கு வாதம் வருவதற்கான வாய்ப்புகளை இந்த மீன் குறைக்கிறது.. மலச்சிக்கல் இருப்பவர்கள் உணவில் கெண்டை மீனை சேர்த்து கொள்ளலாம். இதனால் மலச்சிக்கல் தீர்வதுடன், வயிறு கோளாறுகள், குடல் பிரச்சனைகள் நீங்கிவிடும்.. அவ்வளவு ஏன்? மூலநோய் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால், பாதிப்பு குறையுமாம்.

நிறைய பேருக்கு இரவில் தூக்கமின்மை பிரச்சனை இருக்கம்.. அவர்கள் இந்த கெண்டை மீனை சாப்பிட்டால், நிம்மதியான தூககம் கிடைக்கும்.. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள இந்த மீன், இதய நோயாளிகளுக்கு சிறந்த மீனாக திகழ்கிறது. காரணம் இந்த கெண்டையிலுள்ள கொழுப்பு அமிலங்கள், இதயத்துக்கு நன்மை தரக்கூடியதாம். இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் குறைவதாக சொல்கிறார்கள்.

தைராய்டு: தைராய்டு பிரச்சனை இருப்பவர்களும் இந்த கெண்டை மீனை சமைத்து சாப்பிடுவதால், தைய்ராய்டு சுரப்பிகளில் ஹார்மோன் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்திவிடும்.. ரத்த வெள்ளையணுக்கள் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அல்லது சீரான உடல் எடையை தக்க வைக்க நினைப்பவர்கள், ஜிலேபி கெண்டையை முயற்சிக்கலாம்.. காரணம், ஏகப்பட்ட புரோட்டீன் இந்த மீனில் உள்ளது.. நீண்ட நேரத்துக்கு பசியும் எடுக்காது. கால்சியம் அதிகமுள்ளதால், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும், உறுதித்தன்மைக்கும் உதவியாக இருக்கிறது. ஜிலேபியை உணவில் எடுத்து கொள்வதால், புற்றுநோய் உருவாவதற்கான அபாயங்களும் குறைக்கப்படுகின்றன..

ஆனால், இந்த மீனில் பாக்டீரியாக்கள் உள்ளதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.. அதாவது, கெண்டை மீன்களின் இரைப்பை - குடல் பாதையில் இந்த பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, மருத்துவமனைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கழிவுநீர் பாதையில் திறந்துவிடப்படும் கழிவுகள், முறையற்ற வழிகளில் ஆற்றில் கலந்துவிடுகின்றன..

பாக்டீரியாக்கள்: அதன்மூலம் ஆறு அல்லது ஏரி நீரில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இந்த நச்சுத்தன்மையால் நீரில் ஏற்படும் அழுத்தம் மீன்களில் பாக்டீரியாக்களை உருவாக்குகிறதாம். எனினும், முறையாக சமைத்து சாப்பிட்டால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள்.. குறைந்த 20 முதல் 30 நிமிஷங்களாவது சமைத்து சாப்பிட வேண்டுமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+