"மாதவிடாய்".. கரெக்ட்டா அந்த நேரத்துல.. தாறுமாறா எகிறுதா வெயிட்? இதை முதல்ல படிங்க.. பெண்களே உஷார்
சென்னை: ஹார்மோன்கள் நம்முடைய உடலின் இயக்கத்தையும், மனதின் தன்மையையும் மாற்ற வல்லவை என்பதை நாம் உணர வேண்டும்.. அதேசமயம், பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு, உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மாதவிடாய் மிக முக்கியமான பகுதியாகும்.. ஒரு பெண் பொதுவாக மாதவிடாய் காலத்தில் வலி, சோர்வுகளை அனுபவிக்க நேர்கிறது.. அத்துடன் ஒருவித இறுக்கத்திலும், மன அழுத்தத்தையும் அதுபோன்ற நேரங்களில் எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஆரோக்கியம்: இதுபோன்ற நேரங்களில், வலியை குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும், சீரான உணவு மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டி உள்ளது.. இல்லாவிட்டால், மனநிலையை மேலும் அதிகமாக பாதித்து, வேறு சில மாற்றங்களைக் கொண்டுவந்து விட்டுவிடக்கூடும்..
ஆரோக்கியமான மாதவிடாய் ஓட்டத்தை தீர்மானிப்பதில், நமது வாழ்க்கை முறை மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.. இதில், பிரதான பலன் கிடைப்பது, உணவுமுறையில்தான்..மாதவிடாய் வலியை தூண்டும் சில உணவுகள் உள்ளதுபோல், வலி மற்றும் சோர்விலிருந்து உங்களை விடுவிக்கவும் சில உணவுகள் உள்ளன என்று கூறுகிறார்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள்..
மாதவிடாய் காலத்தில் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வால், உடலிலும் மனதிலும் ரோலர் கோஸ்டர் போல மாற்றங்கள் நிகழும்.. நமக்கு எப்போதுமே பிடிக்காத உணவைகூட, மாதவிடாய் காலத்தில் அதிகமாக சாப்பிட தோன்றுமாம்.. அதேபோல வழக்கமாக குறைவாக சாப்பிடக்கூடிய பெண்களுக்கு, இதுபோன்ற நேரங்களில் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் தோன்றுமாம்.
மருத்துவ காரணங்கள்: இதற்கு சில மருத்துவ காரணங்களையும் சொல்கிறார்கள்... மாதவிடாய் என்பது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.. அதனால்தான், இதுபோன்ற நேரங்களில் சில பெண்கள் எரிச்சல் மனநிலையுடனும், சில பெண்கள் அமைதியாகவும், சில பெண்கள் பதற்றத்துடனும் காணப்படுகிறார்கள்.. ஆனால், பல பெண்கள், விருப்பமான உணவுகளின் மூலம் தங்கள் அசௌகரியத்தை போக்க முயற்சி செய்கிறார்களாம்..
ஐஸ்கிரீம், சிப்ஸ், சாக்லேட் பார், சீஸ் பீட்சா, வறுத்த சிக்கன் உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரும்போது, அது சில பாதிப்புகளையும் தந்துவிடுகிறது.. கருமுட்டை சார்ந்த ஹார்மோன்கள் அதிகரிக்கும்போது, பசி, வயிறு நிறையாத தன்மை உள்ளிட்ட காரணத்தால், பெண்களிடம் உணவு பழக்கம் மாறுபடும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.. மாதவிடாய் காலத்தில் படபடப்பு, கோபம், எரிச்சல், பதட்டம், டென்ஷ்ன் ஆகியவற்றை சீர் செய்ய உணவையே சார்ந்திருக்க வேண்டி உள்ளது..
நொறுக்கு தீனிகள்: மாதவிடாய் நாட்களில் அதிகப்படியான, நொறுக்கு தீனிகளை சாப்பிட்டால், உடலில் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.உங்களுக்கு முடிந்த விருப்பமுள்ள எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
முக்கியமாக பிஎம்ஐ பிரச்சனையில் இது கொண்டுவந்துவிட்டுவிடுவதாக சொல்கிறார்கள்.. அதிகமாக எண்ணெய் பதார்த்தங்களை உண்பது, உடல் பருமன், ஒரே இடத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது, போதிய தூக்கமின்மை, அதிக அழுத்தங்கள் போன்றவை பிஎம்எஸ் வீரியத்தை அதிகரிக்கும் .. ஆனாலும், ஹார்மோன்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்களை, உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைப்பதன் மூலம் சரிசெய்ய முடியும்
எப்படி தவிர்க்கலாம்: ஒரே நேரம் அதிகமாக உண்பதைவிட, அடிக்கடி, அளவாக சாப்பிடுவது நல்லது. மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன் சில நாட்கள், பொரித்த உணவு வகைகள், அதிகம் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை குறைத்தால், வயிறு உப்புவது , மார்பகங்கள் கனப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.
நார்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழவகைகள், சிறுதானியம் உள்ள உணவு வகைகள் அதிகமாக உண்ணவேண்டும். காபி, டீ, கூல்டிரிங்ஸ் போன்றவற்றை தவிர்க்கலாம்.. ஒரு நாளில் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.. வாக்கிங் அல்லது டான்ஸ், சைக்கிளிங், நீச்சல் இப்படி, உங்களுக்கு முடிந்த விருப்பமுள்ள எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம்.
எடை கூடுதல்: பொதுவாக மாதவிலக்கு நாட்களில் உடற்பயிற்சியை பலர் நிறுத்திவிடுகிறார்கள்.. ஆனால், மிதமான உடற்பயிற்சி பிஎம்எஸ்-ஐ குறைப்பது மட்டுமின்றி தாளாத வலியை ஏற்படுத்தும் மாதவிடாய் பிடிப்புகளையும் (menstrual cramps) குறைக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை .
அதேபோல, பகலில் எத்தனை தூங்கினாலும், அது இரவு தூக்கத்திற்கு ஈடாகாது.,.. தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன் செல்போன், லாப்டாப், உள்ளிட்ட எலக்ட்ரிக் பொருட்களை தவிர்த்துவிட்டு, புத்தகம் படிப்பது, குடும்பத்தினருடன் பேசி மகிழ்வது என்று இயல்பை மாற்றி கொண்டால் போதும்.. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பல அசௌகரியங்களை தவிர்த்து விடலாம் என்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications