ரெண்டு பழம் போதுமே.. யூரிக் ஆசிட் சமமாகிடும்.. யூரிக் அமிலம் குறைந்தால் என்னாகும்? ஹெல்த் டிப்ஸ்
சென்னை: உடம்பில் யூரிக் அமிலத்தை மட்டும் அதிகரிக்க விடக்கூடாது என்பார்கள்.. உடலில் யூரிக் ஆசிட் அதிகமானால், இதனால் பல்வேறு விளைவுகளும் தொந்தரவுகளும் ஏற்பட்டுவிடும்.. எனவே, கல்லீரலில் சுரக்கும், சிறுநீர் வழியாக வெளியேறும் யூரிக் அமிலத்தின் அளவை சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில் ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம் என்ற அளவில் யூரிய அமிலங்கள் இருக்க வேண்டும் என்பார்கள்.. இந்த சரிசமமான அளவை பெறுவதற்கு என்ன வகையான வழிகளை மேற்கொள்ளலாம்? இயற்கையான முறையில் வருமுன்னே தொந்தரவை தடுக்க முடியுமா? அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
உடம்பிலுள்ள யூரியாவை பொறுத்தவரை, அளவு குறைவாகும்போது, முழங்கால், மூட்டு வலி, வீக்கம் ஏற்படும்... யூரிக் அளவின் அளவு அதிகரிக்கும்போது, கீழ்வாத பிரச்சனை, சிறுநீரகத்தில் கற்கள், கிட்னி செயலிழப்பு, எலும்பு முறிவு தொந்தரவுகள் வரலாம்.

இதனை தவிர, அதிகமான எடை, முதுமை, மரபியல் போன்ற காரணங்களும், யூரிக் அமில பிரச்சனைகளை அதிகரிக்க செய்துவிடும்.
யூரிக் ஆசிட் பாதிப்புகள்
எனவே, சிறுநீர் பாதையில் தொற்று, சிறுநீர் கழிக்கும்போது வலி போன்றவை இருந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது.. கீல்வாதம் பாதிப்பு இருப்பதும், சிறுநீரகத்தில் கற்கள் தேங்கியிருந்தாலும் அலட்சியம் கூடாது.. இவையெல்லாம் யூரிக் அமிலம் அதிகமாகி விட்டதற்கான அறிகுறிகளாகும்.. இதனால் கீல்வாத பாதிப்பு, மூட்டுகளில் சிவத்தல், வீக்கம், விறைப்பு ஏற்படும்..
எனவே, ப்யூரின் அளவுகளை அதிகரிக்கும் உணவை சாப்பிடக்கூடாது.. பழங்களில் சப்போட்டா, அன்னாசி பழங்களை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு பதிலாக, ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து பழங்களை சாப்பிடலாம்..
பிரதான பழம் வாழைப்பழங்கள்
இதில் முதன்மையானது வாழைப்பழங்கள்தான்.. காரணம் இதில், வைட்டமின் B6, C, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், நார்ச்சத்து என எண்ணற்ற பண்புகள் உள்ளதால், வாழைப்பழங்களை அடிக்கடி சாப்பிடுவது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, பொட்டாசியம், வைட்டமின் C, யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவியாக இருப்பதுடன், குறைந்த அளவு பியூரின் உள்ளதால், யூரிக் அமில அளவு அதிகரிப்பதையும் தடுக்க செய்யும்.. அதனால் ஒன்று முதல் மூன்று வாழைப்பழங்களை சாப்பிடுவது சிறந்தது.
யூரிக் அமிலம் கன்ட்ரோல்
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி போன்றவற்றில் வைட்டமின் C உள்ளதால், உடலில் படிந்துள்ள யூரிக் அமிலத்தை அகற்ற செய்கின்றன.. அதிகமான நார்ச்சத்துக்கள், வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.. இந்த பழத்தை சாப்பிடுவதால் , மூட்டு வலி, மூட்டுகளில் வீக்கமும் குறையும்.. செர்ரி, ஆப்பிள் பழங்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், யூரிக் அமிலத்தையும் கட்டுப்படுத்த தூண்டுகின்றன.
காய்கறிகளில் பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், செள செள, வெண்டைக்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகள் அவசியம்.. பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகளும், சிறுதானியங்கள், கறிவேப்பிலை, புதினா, பிரிஞ்சி இலை, கொத்தமல்லி உணவில் அவசியம்.
புதினா, கொத்தமல்லி அதிசயம்
புதினா இலைகளில் இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் A, ஃபோலேட் இருப்பதால், அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டதாக திகழ்கிறது.. இதனை உணவில் சாப்பிடும்போது, சிறுநீரில் உள்ள பியூரின்கள் வெளியேறும். புதினா உடலிலுள்ள நச்சுக்களை நீக்க செய்கிறது.
அதேபோல, கொத்தமல்லி இலைகளில் கால்சியம், பொட்டாசியம், தியாமின், பாஸ்பரஸ், வைட்டமின் C, வைட்டமின் K போன்ற பல சத்துக்கள் உள்ளதால், ரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவையும் யூரிக் அமிலத்தையும் குறைக்கிறது. எனவே, புதினா, கொத்தமல்லி இரண்டையுமே துவையல் அரைத்து சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
அதிக மதுபானம், இனிப்புகள், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிட்டு, அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த வெந்தயம், பிரிஞ்சி இலைகள், வெற்றிலை பாக்கு போன்றவைகளை சாப்பிட்டு வரும்போது, சிறுநீர் மூலம் யூரிக் அமிலம் வெளியேறும். எனவே, எப்போதுமே வாத, பித்த, கபம் சமநிலையில் செயல்பட வைக்கும் உணவுகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
எப்போதுமே யூரிக் அமில பாதிப்புகளின் அறிகுறிகள் துவக்க காலத்திலேயே தெரியாது.. தீவிர நிலையை அடையும்போதுதான் அறிகுறிகளும் தீவிரமாகும்.. எனவே, உணவு முறைகளில் மாற்றத்தை கொண்டுவந்தாலே யூரிக் ஆசிட் பிரச்சனையை வருமுன் தவிர்க்கலாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications