நீங்க இதய நோயாளியா? ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடலாமா?.. டாக்டர் பரூக் விளக்கம்
சென்னை: இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த கொதிப்பு நோயாளிகள் சிகப்பு இறைச்சி எனப்படும் கால்நடை மாமிசம் சாப்பிடலாமா? என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த கொதிப்பு நோயாளிகள், சிகப்பு இறைச்சி எனப்படும் கால்நடைகளின் மாமிசத்தை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை உண்ணலாம். என்ன சொல்றீங்க டாக்டர்? மட்டன் போன்ற கால்நடை மாமிசத்தில் கெட்ட கொழுப்பு உள்ளதென்றும்
நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய் ஏற்பட்ட காலத்தில் இருந்தே அதை மருத்துவர் அறிவுரையின் பேரில் தவிர்த்து வருகிறேன்.

அதனால் பயன் இல்லையா? உண்மையில் சிகப்பிறைச்சியை முழுவதுமாக தவிர்ப்பதில் மருத்துவ ரீதியாக பெரிய பலன் இல்லை. மாறாக அதில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தும் கொழுப்பு சத்தும் கிடைக்காமல் போவது நமக்கு இழப்பே ஆகும்.
இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் ( கார்டியாலஜிஸ்ட்) தங்களின் சிறப்பு பட்டமேற்படிப்புக்கு பயிலும் முக்கியமான நூலான ப்ரான்வால்டின் கார்டியோ வாஸ்குலார் டிசீசஸ் நூலின் 11வது பதிப்பில் 49 வது பாடத்தில் 987 வது பக்கத்தில் சிகப்பு இறைச்சி குறித்து கூறப்பட்டுள்ளதாவது :
- பதப்படுத்தப்பட்ட இறைச்சியும் பதப்படுத்தப்படாத சிகப்பு இறைச்சியும் ஒன்றன்று
- சிகப்பிறைச்சி குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளில் பெரும்பான்மை பதப்படுத்தப்பட்ட சிகப்பிறைச்சி கொண்டே செய்யப்பட்டுள்ளன.
- பதப்படுத்தப்பட்ட சிகப்பிறைச்சியை அதிகம் உண்ணும் போது அதில் சேர்க்கப்படும் அதிக அளவு சோடியம் ( உப்பு) மற்றும் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் சேர்மானங்களின் விளைவால் இதய நோய் , மூளை ரத்த நாள நோய், நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன.
இத்தகைய விளைவு பதப்படுத்தபடாத சிகப்பிறைச்சியில் கண்டுகொள்ளும் அளவு தேவையற்ற மிக மிகக் குறைவே ஆகும். இதுவரை கிடைத்துள்ள ஆய்வுகளின் முடிவுகளின் படி, பதப்படுத்தப்படாத நிறைவுற்ற கொழுப்பு உள்ள சிகப்பிறைச்சி போன்ற உணவுகள் இதய நோயையோ வேறு வகையான வளர்சிதை மாற்ற நோய்களை உண்டாக்குவது இல்லை.
கொழுப்பு இல்லாத சிகப்பிறைச்சியை விட கொழுப்பு இருக்கும் சிகப்பிறைச்சி உடலுக்கு ஆரோக்கியமானது. நீங்கள் கொழுப்பு இல்லாத பதப்படுத்தப்பட்ட சிகப்பிறைச்சிக்கு பதிலாக கொழுப்பு உள்ள பதப்படுத்தப்படாத சிகப்பிறைச்சியை தேர்ந்தெடுப்பது உங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. தற்போது வரை கிடைத்துள்ள ஆராய்ச்சி முடிவுகள் அளித்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கால்நடை மாமிசத்தை கடையில் வாங்கி வீட்டில் சமைத்து உண்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
பதப்படுத்துதல் - இறைச்சியுடன் அதிக அளவு உப்பு சேர்த்து அல்லது கெட்டுப்போகாமல் இருக்க சேர்மானங்கள் சேர்ப்பது மேற்கத்திய உலகில் சாசேஜ் , ஹாட் டாக் போன்றவை பதப்படுத்தப்பட்ட சிகப்பிறைச்சி வகையாகும். நம் ஊரில் உப்புக்கண்டம் அதற்கு நிகரானது. சிகப்பிறைச்சியை பதப்படுத்தப்படாமல் நாம் உண்பது போல சமைத்து உண்பதில் பிரச்சனை இல்லை என்று ப்ரான்வால்ட் இதய நோய்க்கான சிகிச்சை குறித்த அறிவியல் நூல் எடுத்தியம்புகிறது.
சிகப்பிறைச்சியில் சிறந்த உடலால் எளிதாக கிரகித்துக் கொள்ளக்கூடிய புரதம் சிறந்த இரும்புச் சத்து, சிறந்த கால்சியம், செலினியம் , துத்தநாகம், உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ரால் மற்றும் நல்ல கொழுப்பு உள்ளது. வாரம் ஒருமுறை அல்லது இருமுறை அச்சமின்றி சிகப்பிறைச்சியை உண்ணலாம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications