Omelette: கரன்டி ஆம்லெட் முதல் கீரை ஆம்லெட் வரை! ஒரு முட்டையை வைத்து இத்தனை வித்தை காட்டலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்லெட்டில் இத்தனை வகை ஆம்லெட்டுகளை செய்யலாமா என வாயை பிளக்க வைக்கும் அளவுக்கு ரெசிபியுடன் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முட்டை பிடிக்காதவர்களுக்கு இந்த வகைகளில் ஏதாவது ஒரு வகையில் செய்து கொடுத்தால் அவர்களுக்கு புரதம் கிடைக்கும் என்பது தின்னம்!

இதுகுறித்து நேத்ரா எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெரும்பாலான மக்களுக்கு பிடித்த உணவு ஆம்லெட் தான். காலை, மதியம், மாலை என எந்த வேளையானாலும் சிம்பிளான உணவாக உள்ளது. புரதம், மற்றும் கால்சியம் சத்து தேவைகளை நிறைவு செய்யக் கூடியதாக முட்டை இருக்கிறது.

health egg omelette

காலையில் அம்மா கையால் சுடப்படும் முட்டை தோசையானாலும் சரி, மதிய உணவுக்கு பரிமாறப்படும் முட்டை பொடிமாஸ், முட்டை பொரியல், ஆம்லெட், புல்ஃபாயில், இரவு ஹோட்டல்களில் நாம் விரும்பி சாப்பிடும் ஆஃபாயில் என ஏதோ ஒரு வகையில் முட்டையை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.

ஆம்லெட்டில், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்துவதால், ஆம்லெட்டில் உள்ள கொழுப்புகள் நீங்கும்.

வெண்ணெய் பயன்படுத்தி ஆம்லெட் செய்பவர்கள், ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

காளான் ஆம்லெட்

முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகுத்தூள், கொஞ்சம் பால் போன்றவற்றை கலக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி, சிறிது, சிறிதாக நறுக்கப்பட்ட காளான்களை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதை முட்டை கலவையுடன் சேர்த்து, வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளவும்.
எல்லாவற்றையும் நன்றாக கலக்கி, தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சுவையான காளான் ஆம்லெட் தயார்.

health egg omelette

மசாலா ஆம்லெட்

மிக நைசாக நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை முட்டை கலவையில் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் உப்பு, மிளகுத் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கடாயில் வெண்ணெய் தடவி, இந்த முட்டை கலவையை கெட்டியாக ஊற்றவும். இப்போது மெதுவான தன்மையில் சூடான ஆம்லெட் தயாராகியிருக்கும்.

health egg omelette

கீரை ஆம்லெட்

கீரை வகைகளில் மிக, மிக சத்து கொண்டது பாலக்கீரை ஆகும். இதை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எப்போதும் ஆம்லெட்டிற்கு கலக்கும் வகையில் வெங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்து, அதனுடன் கீரையை கொட்டி கலக்கவும்.
நல்லெண்ணெய் விட்டு இந்த ஆம்லெட்டை சுட்டு எடுக்கவும். பார்க்க அழகாக இருக்க சிகப்பு மிளகாய் விதைகளை (Red Chilly Flakes) ஆம்லெட்டில் தூவி எடுக்கலாம்.

health egg omelette

சீஸ் ஆம்லெட்

பாலாடைக் கட்டிகளை பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? அத்துடன் உங்களுக்கு பிடித்தமான முட்டையை சேர்த்து ஆம்லெட் தயாரித்தால் எப்படி இருக்கும்!

வழக்கமான ஆம்லெட் கலவையை தோசைக்கல்லில் ஊற்றி, அதன் மேல் லேயரில் இந்த பாலாடைக் கட்டிகளை தேய்த்து விடவும். பின்னர் எடுத்து சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.

health egg omelette

காய்கறி ஆம்லெட்

காரட், பீன்ஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகளை இந்த ஆம்லெட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம். முதலில், காய்கறியை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் ஆம்லெட் கலவையில் இதை சேர்த்து, லேசான தீயில் வேக வைத்து எடுக்கவும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+