Hill Garlic or White Garlic: மலைப் பூண்டு Vs வெள்ளைப் பூண்டு! இரண்டில் எது பெஸ்ட்?
சென்னை: வெங்காயம், இஞ்சி, பூண்டை உணவில் சேர்க்காதவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் உணவில் சேர்ப்போருக்குத்தான் பூண்டில் மலை பூண்டு நல்லதா, வெள்ளை பூண்டு நல்லதா என்றெல்லாம் கேள்விகள் எழும்.
எந்த பூண்டை அதிகம் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம். இமாலயன் கார்லிக் என அழைப்படுவதுதான் மலை பூண்டு. இது இமயமலை தொடரின் உயர்ந்த மலைகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்யப்படுகிறது.

இந்த பூண்டில் ஆர்கனோ சல்பர் என்ற ஒரு பொருள், உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்கும் ஆற்றலை கொண்டது. பொதுவாகவே எந்த காய்கறி, பழங்களாக இருந்தாலும் அது எங்கு வளர்கிறதோ அந்த இடத்திற்கேற்ப மருத்துவ குணங்களும் இருக்கும் என்பார்கள்.
அப்படித்தான் இந்த மலைபூண்டை பார்க்கிறோம். இதை ஒற்றை இதழ் பூண்டு, காஷ்மீரி கார்லிக், ஜம்மு கார்லிக் என்றும் அழைக்கிறோம். இமாயல பூண்டை சாப்பிடுவதால் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்து இதயத்தை பாதுகாக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்பார்கள். அதிலும் இந்த மலை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை சேர விடாமல் தடுக்கும். அது போல் நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இந்த பூண்டில் அலிசின் என்ற ஒரு பொருள் கணையத்தின் செயல்பாட்டை தூண்டிவிடுவதால் உடலுக்கு தேவையான இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவியாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மழைக்காலம், குளிர்காலங்களில் பொதுவாகவே பூண்டு உணவில் அதிகமாக சேர்க்கப்படும். இமாலய மலைப்பூண்டில் ஆலினேஸ், ஆலின் என்ற இரண்டு சக்தி வாய்ந்த பொருள்கள் உள்ளன. இவை உடலுக்கு பாக்டீரியா உள்ளிட்ட எந்த தொற்றும் ஏற்படாமல் தடுக்கும் என்கிறார்கள்.
மலைபூண்டால் கேன்சர் ஏற்படக் கூடிய பாதிப்பு 50 சதவீதம் வரை குறைகிறது என தேசிய புற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளைப்பூண்டின் நன்மைகள்
வெள்ளைப் பூண்டில் பெனிசிலின், டெட்ராசிலிஸ்யை காட்டிலும் சக்தி வாய்ந்தது. பூண்டை வைத்து 22 வகையான நோய்களை குணப்படுத்தலாம் என்கிறார்கள். வெள்ளைப்பூண்டில் 400 விதமான ரசாயன பொருட்கள் உள்ளன.
கல்லீரலில் சுரக்கும் என்சைம்கள் நன்றாக சுரக்கச் செய்ய பூண்டு உதவும். காரணம் அதிலிலுள்ள அலிசின் மற்றும் செலினியம் சத்துக்கள். தினமும் அல்லது வாரத்தில் இரண்டு நாளில் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை நீரில் அல்லது பாலில் வேகவைத்து சாப்பிட கல்லீரல் பலப்படும். காய்ச்சல் 102 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டினால் வெள்ளைப்பூண்டை அரைத்து அதன் சாற்றை உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் நன்றாக தேய்த்தால் காய்ச்சல் குறையும் என்பார்கள்.
எது சிறந்தது
மலை பூண்டிலும் வெள்ளைப் பூண்டிலும் ஏராளமான நன்மைகள் உள்ளன. எனவே எந்த பூண்டு கிடைக்கிறதோ அதை பயன்படுத்தலாம். இரண்டுமே கிடைத்தால் வாரத்தில் 3 நாட்கள் வெள்ளை பூண்டு, 3 நாட்கள் மலை பூண்டு என பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications