Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Himalayan Salt: Kidney Failure-ஐ 2 வாரத்தில் சரி செய்யுமா இந்துப்பு? உண்மை என்ன? டாக்டர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்துப்புகள் சிறுநீரக செயலிழப்பை சரி செய்துவிடுமா, இமயமலையில் கிடைக்கும் இந்த உப்பை நாம் பயன்படுத்தலாமா என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: இந்துப்பு மூலம் சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய முடியுமா? இந்துப்பு சாப்பிட்டால் ஃபெயிலியர் ஆன கிட்னி தேறிவிடும் என்பது பொய். இந்துப்பு என்பது இமயமலைப் பாறைகளில் படிந்த உப்பு , இமயமலைப் பாறைகளில் எப்படி ஐயா உப்பு வந்தது ?? என்று குழம்ப வேண்டாம்.

himalayan salt

இமயமலை பன்னெடுங்காலத்திற்கு முன்பு கடலாக இருந்த இடம் தான். எப்படி நம் ஊர்களின் புறநகர்ப் பகுதிகளில் முன்னொரு காலத்தில் பல இடங்கள் ஏரிகளாக இருந்து இப்போது கட்டடங்களாக மாறி இருக்கிறதோ அது மாதிரி வைத்துக் கொள்ளலாம். சரி அந்த இந்துப்பில் என்ன இருக்கிறது ?

நாம் உண்ணும் சாதாரண உப்பில் என்ன இருக்கிறதோ அது தான் தசாவதாரம் படத்தில் கமல் கூறுவாரே NaCl ( சோடியம் க்ளோரைடு) அது தான் என்ன ஒன்று .. இந்துப்பில் ஐயோடின் (IODINE) குறைவு. இதனால் தான் இமயமலைத் தொடர் இருக்கும் பகுதிகளில் ஐயோடின் குறைபாடு அதிகம் தோன்றி முன் கழுத்துக் கழலை நோய் எனும் Goitre அதிகம் காணப்பட்டது. அந்த ஏரியாவை "Goitre belt" (முன்கழுத்துக் கழலைக் கச்சை) என்று பெயர் வைத்துள்ளனர்.

பிறகு இந்திய அரசு Iodine deficiency disorder control programme என்றொரு திட்டத்தை அறிவித்து நாம் உண்ணும் உப்பில் அயோடின் எனும் நுண்சத்தைச் சேர்த்துத் தந்தது.
இதை fortified salt என்று கூறுவோம். இதே போன்று தாய்மார்கள் வாங்கும் கல்லுப்பிலும் அயோடின் மிகவும் குறைவாகவே இருக்கும். வெறும் கல்லுப்பை மட்டும் பயன்படுத்துவோரிடையே அயோடின் குறைபாடு ஏற்பட்டு தைராய்டு குறைபாடு பிரச்சனைகள் / முன் கழுத்துக் கழலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சரி இந்துப்பில் என்ன ஸ்பெசாலிட்டி?

அதில் மெக்னீசயிம் மற்றும் பொட்டாசியம் நுண்சத்துகள் சாதாரண உப்பை விட சிறிது அதிகம் . மெக்னீசியமும் பொட்டாசியமும் நமது தசைகளுக்கு நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான தேவையான நுண் சத்துகள் ஆகும். நான் என்னைச் சந்திக்க வரும் மக்களிடம் கூறுவது ? அயோடின் கலந்த உப்பை சாதத்திற்கும் குழம்பிற்கும் பயன்படுத்தினால் இந்துப்பை காய்கறிகள் செய்ய மற்றும் எலுமிச்சை சாறு போன்றவற்றில் கலந்து குடிக்கப் பயன்படுத்துங்கள் என்று கூறுவேன்.

இதனால் தேவையான அயோடின், பொட்டாசியம், மெக்னீசியம் கிடைத்து விடும். ஒரே அடியாக முற்றும் முழுவதுமாக அனைத்துக்கும் இந்துப்பை பயன்படுத்தினால் காலப்போக்கில் அயோடின் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சரி முக்கிய கேள்விக்கு வருவோம்.

இந்துப்பு கிட்னி ஃபெயிலியரை சரி செய்யுமா?

நமதூர்களில் கிட்னி பிரச்சனை இருப்பவர்களை "உப்பு பிரச்சனை" இருக்கு என்பார்கள். அது என்ன உப்பு பிரச்சனை. ஏன் இந்தப் பெயர் வந்தது? அதற்குக் காரணம். சிறுநீரக நோயாளிகளை உப்பு குறைத்து உண்ணுமாறு டயட் வழங்கப்படும். கூடவே உங்களுக்கு உப்புச் சத்து இருக்கு என்று மருத்துவர்கள் கூறி வந்தமையால் இந்தப் பெயர் ஒட்டிக் கொண்டது.

ஆனால் ஒருவருக்கு ஏற்படும் சிறுநீரக நோய்க்கும் உப்புக்கும் எந்தளவு சம்பந்தம் இருக்கிறதோ அதை விட அதிகமான சம்பந்தம் அவர் உண்ணும் அதிக மாவுச்சத்து (தானியங்கள் சார்ந்த வாழ்வியல்) , அதிக இனிப்பு , அதிக ஸ்நாக்ஸ், மது, புகை ஆகியவற்றுக்கு உண்டு என்பதே உண்மை. ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு அதை கட்டுக்குள் வைக்காவிடில்
காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பு நேரும் வாய்ப்பு அதிகம், அதற்கடுத்த இடத்தில் இருப்பது நீரிழிவு.

தற்போது டயாலசிஸ் சிகிச்சையில் இருப்பவர்களிடம் கேட்டால் அவர்களுக்கு இருபது வருடங்களாக பிரஷர் இருந்தது. டயாபடிஸ் இருந்தது என்று கூறுவார்கள். இவர்கள் அனைவரும் முறையாக தங்களின் நீரிழிவையும் ரத்தக் கொதிப்பையும் முறையான வாழ்வியல் + மருத்துவ சிகிச்சை செய்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

அதை விடுத்து இந்துப்பு சாப்பிட்டால் காப்பாற்றும் என்று நம்புவது மூடநம்பிக்கை. இன்னும் சொல்லப் போனால் சிறுநீரக செயலிழப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பட்டியலில் இந்துப்பு வரும் காரணம், இந்துப்புவில் சோடியம் கிட்டத்தட்ட நமது ரெகுலர் உப்பின் அளவுக்கு இருக்கிறது.

ஆனால் பலரும் அதில் சோடியம் குறைவு என்று நினைத்து அதிகமாக உபயோகிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்த நாள அழுத்தம் அதிகரித்து ரத்த அழுத்தும் உயர்ந்து கூடவே உடலின் நீர் சத்து கொள்திறன் கூடும் வாய்ப்பு உள்ளது. அடுத்து இந்துப்பில் பொட்டாசியம் அதிகம்.

சிறுநீரக நோயர்களுக்கு ஏற்கனவே ரத்தத்தில் பொட்டாசியம் அதிகமாகி ஹைப்பர் கெலிமியா ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்நிலையில் பொட்டாசியம் அதிகமான உணவுகளை தவிர்க்கவே சிறுநீரக நிபுணர்கள் கூறுவார்கள். இந்நிலையில் இந்துப்பை அதிகமாக பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தான ஹைப்பர் கெலிமியாவில் கொண்டுய்க்கலாம்.

சிறுநீரகங்களை பாதுகாப்பாக வைக்க, நீரிழிவு ரத்தக் கொதிப்பு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முறையான வாழ்வியல் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
- குறை மாவு உணவு முறை
- நடைப்பயிற்சி
- உறக்கம்
- உளநலன் பேணல்

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டோர் தங்களுக்கான சிகிச்சை + உணவு முறையை சிறுநீரக சிறப்பு நிபுணரின் கட்டுப்பாட்டில் மட்டுமே எடுக்க வேண்டும். மீண்டும் கூறுகிறேன். இந்துப்பு கிட்னி பெயிலியரை குணமாக்காது
இன்னும் மோசமடையச் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+