சர்க்கரை நோயாளி தேன் சாப்பிடலாமா.. தேனில் இத்தனை தித்திப்பு விஷயமா? நீரிழிவு பேஷன்ட் இதை கவனியுங்க
சென்னை: நீரிழிவு நோயாளிகள், இனிப்புகளை சாப்பிடுவது நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பார்கள்.. செயற்கை அல்லது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. அப்படியானால் சர்க்கரைக்கு வெல்லம் சாப்பிடலாமா? 10 கிராம் வெல்லத்தில் 65% முதல் 85% வரை சுக்ரோஸ் உள்ளதால், ரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கும். இது மிகப்பெரிய ஆபத்தையும் தந்துவிடுமாம்.. அப்படியானால், சர்க்கரை நோயாளிகள் வெல்லத்திற்கு பதிலாக தேன் சாப்பிடலாமா? இது குறித்து சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தேன் மிகச்சிறந்த ஆண்டிபயாடிக் மருந்தாகும்.. வைட்டமின் C, கால்சியம், இரும்புச்சத்து என பல வகையான ஊட்டச்சத்துக்களும், மினரல்களும் தேனில் நிறைந்துள்ளன. கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு என்பது தேனில் கிடையாது. 100 கிராம் தேனில், 82.12 கிராம் மாவுச்சத்து, 12.12 கிராம் சர்க்கரை சத்து, 0.3 கிராம் புரோட்டீன் உள்ளன..

தேன் நோய் எதிர்ப்பு சக்தி
தேன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.. தொற்றுக்கள் நம்மை அண்டாது.. பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும்.. ப்ரீபயாடிக் சத்து அதிகமாக உள்ளதால், குடலுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களை அதிகமாக்க தேன் உதவுகிறது.. தேனில் மிகுதியான ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால்தான், மருந்து பொருட்களில் தேன் சேர்க்கப்படுகிறது. செரிமானப் பிரச்சனைகள், சுவாசப் பிரச்சனைகள் ஆகியவற்றை போக்கும் பல ஊட்டச்சத்துகள் தேனில் உள்ளன.
சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா
இவ்வளவு நன்மைகளை தரக்கூடிய தேனை, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? சர்க்கரை நோயாளிகளுக்கு தேனை எடுத்துக்கொள்ள டாக்டர்கள் பெரும்பாலும் பரிந்துரைப்பதில்லை.. ஏனென்றால் தேனில் சுக்ரோஸ் உள்ளது.. 80% கார்போஹைட்ரேட், 20 % நீர் உள்ளது.. அதாவது ஒரு ஸ்பூன் தேனில் 21 கலோரி ஆற்றல், 4 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது..
தேன் பற்றின ஆராய்ச்சிகள் அடிக்கடி நடந்து கொண்டேயிருக்கின்றன,.. இதய ஆரோக்கியத்திற்கு உதவும் பைட்டோகெமிக்கல்களான பிளவனாய்டுகள் தேனில் உள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிப்பதில் தேன் பயனுள்ளதாக இருப்பதால், மிக மிக குறைந்த அளவில் தேன் சாப்பிடுவது சர்க்கரையை உருவாக்கும் அபாயத்தை குறைப்பதாக அந்த ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.
எனவே, பதப்படுத்தப்படாத இயற்கை தேன், அல்லது க்லோவர் வகை பூக்களிலிருந்து தேனீக்கள் தயாரிக்கும் தேன், நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுவதாக அந்த ஆய்வுகள் கூறுகின்றன.. எனவே தேனை சர்க்கரை நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை.. மிக குறைந்த அளவு தேனை எடுத்து கொள்ளலாம் என்கிறார்கள்..
கார்போஹைட்ரைட் அளவு
சர்க்கரையை காட்டிலும் இதன் கிளைஸமிக் இண்டெக்ஸ் அளவு குறைவுதான் என்றாலும், அளவுக்கு மிகுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தேனை மற்ற கார்போஹைட்ரேட்டுகளுடன் கலந்து சாப்பிடும் போது ரத்த சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்த உதவும்.
எனினும் சர்க்கரை நோயாளிகளுக்கு தேன் முற்றிலும் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க, இன்னமும் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறதாம்.
தேன் - குழந்தைகள்
தேனுக்கு அடுத்தபடியாக சாப்பிடக்கூடிய பொருளாக, கருப்பட்டி உள்ளது என்றாலும், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே, தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் எடுத்து கொள்வது ஆரோக்கியமானது.
அதேபோல குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது பாதுகாப்பானது கிடையாது என்கிறார்கள். காரணம், போட்யூலிசம் எனப்படும் அரிதான மோசமான நோயை தேன் ஏற்படுத்துகிறதாம்.. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம்.












Click it and Unblock the Notifications