சுடு தண்ணீரில் குளித்தால் ஆண்மை குறைவு.. மருத்துவர்கள் வார்னிங்.. இந்த டைப் உள்ளாடையும் போட கூடாதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுக்க இப்போது குளிர் காலம் தான்... கடுங்குளிரால் நாம் தண்ணீரைத் தொடவே ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிப்போம். இதனால் பலரும் கூட சூடு தண்ணீரில் குளிக்கவே விரும்புவார்கள். ஆனால், சூடு தண்ணீரில் குளிப்பது ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது தவிர வேறு சில விஷயங்களும் கூட இதே பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறதாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் சூடான நீரில் ஒரு குளியலைப் போட யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் இந்த குளிர் காலத்தில் சூடான நீரில் குளித்தால் கிடைக்கும் சுகமே தனி தான்.

health

வெளியே சுற்றிவிட்டுத் திரும்பும்போது சூடான நீரில் குளியலைப் போடுவது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். ஆனால், இது ஆண்களுக்கு ஆண்மையின்மை பிரச்சினையை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிப்பது உங்களுக்குத் தெரியுமா.. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஆண்மைக் குறைவு:

ஆண்களைப் பொறுத்தவரை விந்தணுக்களை உருவாக்குவதற்கும் டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஆண் ஹார்மோனை உற்பத்தி செய்வதற்கும் விதைப்பைகள் (Testicles) என்ற உறுப்பே காரணமாகும். ஆண்களுக்கு உடலில் முடி வளரவும், குரல் மாறவும், தசைகள் பலமாக மாறவும் கூட இதுவே காரணமாக இருக்கிறது. இந்த விதைப்பைகள் மட்டும் உடலின் மற்ற பாகங்களில் இருந்து தனியாகவே அமைந்துள்ளது.

இதனால் உடலின் மற்ற பாகங்களை விட இதன் வெப்ப நிலை நான்கு டிகிரி வரை குளிராக இருக்கிறது. இந்த குளிர்ச்சியான வெப்பம் தான் விதைப்பை திறம்படச் செயல்படவும் தேவையான அளவு விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் முக்கியமாக உதவுகிறது.

சுடு தண்ணீர் குளியல்:

விதைப்பைகளில் உள்ள சில ஜெர்ம் செல்கள், உடல் வெப்பநிலையை விடச் சற்று குறைவான வெப்பநிலையில் தான் சிறப்பாகச் செயல்படுவதாக ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிகேஷன் கூறுகிறது.. எனவே, சூடு தண்ணீரில் குளிப்பது, இருக்கமான ஜீன்ஸ் அணிவது, செல்போன் உள்ளிட்ட காரணங்களால் விதைப்பைகளின் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கும் போது அது விந்தணு உற்பத்தி மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி என இரண்டையும் பாதிக்கிறது.

சூடான நீரில் குளிக்கும் போது, குறிப்பாக பாத் டப்களில் சூடான நீரை ஊற்றிக் குளிக்கும் போது ​​உங்கள் உடல் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. இதனால் விந்தணுக்கள் அதிக வெப்பமடைந்து, விந்தணு செயல்பாடு மற்றும் கருவுறுதலைப் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே, ஆண்கள் ஓவர் சூடாக இருக்கும் நீரில் குளிப்பதைத் தவிருங்கள்.

உள்ளாடையிலும் கவனம்:

நீங்கள் செய்ய வேண்டிய வாழ்க்கை முறை மாற்றம் இது மட்டும் இல்லை.. வேறு சில விஷயங்களும் இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது மிகவும் இறுக்கமான உள்ளாடைகள், ஜீன்ஸ் அல்லது சைக்கிள் ஷார்ட்ஸ் அணிவதும் ஆண்களின் கருவுறுதலைப் பாதிக்கும். இந்த ஆடைகள் விதைப்பைகளை உடலுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதால், அதன் வெப்பநிலை உயர்கிறது. அதேபோல நைலான் உட்பட செயற்கை துணியால் செய்யப்பட்ட ஷார்ட்ஸ் அணிவதும் கூட விதைப்பைகளின் வெப்பத்தை உயர வைக்கிறது.

எனவே, காட்டன் உள்ளாடைகளைப் பயன்படுத்தவும்.. பிறப்புறுப்பு குளிர்ச்சியாக இருக்கக் கொஞ்சம் தளர்வான பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்தலாம். இது ஆண்மைக் குறைவு பிரச்சினையைச் சரி செய்வது மட்டுமின்றி, தொற்று பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+