60 கிலோ உடல் எடையை குறைத்த பெண்.. அதுவும் வெறும் ஒரே ஆண்டில்..! சீக்ரெட்டை பகிர்ந்த இன்ஸ்டா பிரபலம்
டெல்லி: உடல் பருமன் என்பது இந்தியர்களிடையே அதிகரித்து வரும் பிரச்சினையாக இருக்கிறது. எடை குறைப்பைப் பலரும் முயன்றாலும் கூட அதை அடைய முடிவதில்லை. இதற்கிடையே பெண் ஒருவர் வெறும் ஓராண்டில் சுமார் 60 கிலோ எடையைக் குறைத்துள்ளார். அதுவும் வீட்டில் கிடைக்கும் டயட்டை வைத்தே அவர் இதைச் சாதித்துள்ளார். அவர் என்ன செய்தார்.. எப்படி இந்தளவுக்கு அவரால் எடை குறைக்க முடிந்தது என்பதை நாம் பார்க்கலாம்.
உடல் பருமன் என்பது இப்போது உலகெங்கும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் ஒரு மேஜர் பிரச்சினையாக இருக்கிறது. அதிலும் இந்தியர்களிடையே உடல் பருமன் என்பது மேஜர் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

ஆனால், எவ்வளவு முயன்றாலும் பலரால் எடையைக் குறைக்கவே முடிவதில்லை.. ஆனால், இங்கே பெண் ஒருவர் வெறும் ஓராண்டில் சுமார் 60 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
ஆபத்தான உடல் எடை:
கடந்தாண்டு ஜனவரி மாதம் ராஜி கங்காஸ் 155 கிலோ இருந்துள்ளார். மேலும், செல்லும் இடமெல்லாம் கேலி, கிண்டலுக்கும் உள்ளானார். கேலி. கிண்டல்களை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்ற போதிலும் அதீத எடை தனது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் உணர்ந்தார். அவர் நீரிழிவுக்கு முந்தைய நிலை, அதாவது pre-diabetic பிரச்சினையை எதிர்கொண்டார். மேலும், ஹார்மோன் கோளாறுகளும் ஏற்படத் தொடங்கியது. இப்படியே விட்டால் உயிருக்கே ஆபத்தாகப் போய் முடியும் என்பதை உணர்ந்த அவர் எடை குறைக்கும் முயற்சியில் இறங்கினார்.
மற்றவர்களைப் போல சும்மா பேச்சுக்கு எடை குறைப்பு என சொல்லாமல்.. இவர் சீரிஸயாகவே உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்தினார். இதன் மூலம் அவரால் ஒரே ஆண்டில் 60 கிலோவுக்கு மேல் எடையைக் குறைக்க முடிந்ததுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவர் டயட் என்று ஏதேதோ எல்லாம் சாப்பிடவில்லை. வீட்டில் வழக்கமாக வாங்கும் பொருட்களை வைத்தே டயட்டை பின்பற்றியுள்ளார்.
கடுமையான டயட்:
டயட்டை கடுமையாகப் பாலோ செய்த அவர், அத்துடன் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். இதன் மூலம் அவரால் ஒரே ஆண்டில் சுமார் 60 கிலோவுக்கு மேல் எடை குறைக்க முடிந்துள்ளது. இதற்காக கடந்த ஓராண்டில் எடை குறைக்க என்னவெல்லாம் செய்தார் என்பதை அவர் தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கை முறை மாற்றம்:
உடல் எடை அதிகமாக இருந்த போது ஏகப்பட்ட மருத்துவ பிரச்சினைகளை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். அதிக எடையுடன் இருந்ததால் ஹார்மோன் பிரச்சினையை எதிர்கொண்டதாகவும் இதனால் ஒழுங்கற்ற மாதவிடாயை எதிர்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தும் உருவானதாகக் குறிப்பிடும் அவர், இதனால் வாழ்க்கை முறையை உடனடியாக மாற்ற வேண்டி இருந்ததாகத் தெரிவித்தார். உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த மாற்றங்களைச் செய்ய வேண்டியது கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
உணவு என்ன:
ராஜி கங்காஸ் தான் பின்பற்றிய டயட் குறித்த தகவல்களைத் தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். அவர் தினசரி வீட்டிலேயே செய்யும் எளிய டயட் முறையையே பின்பற்றி இருக்கிறார்.
காலை டிரிங்: வெந்தயம் மற்றும் ஓமத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதைக் குடிக்கலாம்.
காலை உணவு: காய்கறிகள் அதிகம் உள்ள போஹாவை தயிர் சேர்த்து காலை உணவாக எடுத்துக்கொள்கிறார்.
11 மணிக்கு: சியா விதை கலந்த தண்ணீரைக் குடிக்கலாம்.

மதிய உணவு: ஓவர்நைட் ஓட்ஸ்.
மாலை சிற்றுண்டி: க்ரீன் டீயுடன் கார்ன் சாட்.
இரவு உணவு: க்ரில் செய்த காய்கறி சாண்ட்விச்கள்.
படுக்கைக்கு முன்: டிடாக்ஸ் தண்ணீரைக் குடிக்கலாம்.
ராஜி தனது பயணம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். 2025 ஆம் ஆண்டில், அவர் இன்னும் ஆரோக்கியமாகவும் மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications