Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைட்டமின் 'சி' இருந்தா போதும்.. எல்லாத்தையும் ஒரு கை பாத்துடலாம்! இந்த பழங்களை எடுத்துக்கோங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனித உடல்களும் மற்ற பொருட்களை போலதான். இந்த உடல் வளர்வதற்கு, நோய் இல்லாமல் இருப்பதற்கு வைட்டமின் சத்துக்கள் அவசியமாகிறது. ஆனால் எந்தெந்த வைட்டமின் எது எதற்கு பயன்படுகிறது? அந்த வைட்டமின் குறைந்தால் என்ன ஆகும்? எந்த உணவில் எந்த வைட்டமின்கள் கிடைக்கிறது என்பதில் பலருக்கு புரிதல் இருப்பதில்லை. இந்த புரிதல் இருந்தால் உடலை மேலும் சிறப்பாக நம்மால் பராமரிக்க முடியும்.

சரி முதலில் நமது உடல் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம். என்னதான் ரத்தம், சதை, எலும்புகள் என இருந்தாலும், அடிப்படையில் நம்முடைய உடல் பலவகையான திசுக்களால் ஆனது. இவற்றுக்கு அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்கள் தினமும் நம்முடைய உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இதை வேதிவினைகள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்படியான வேதிவினைகள் நடப்பதால் தான் நாம் வளர்கிறோம்.

How does vitamin C deficiency develop? Here are some simple ways to recover from it

ஆக நாம் வளர்வதற்கு வேதிவினைகள் அவசியம். இதை சீரான வேகத்தில் நடத்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் அவசியமாகிறது. இதில் முக்கியமான ஆளுதான் வைட்டமின். இவர் இல்லையெனில் மொத்தமும் 'கோவிந்தோதான்'. வைட்டமின்களில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் இதற்கெல்லாம் தலைவன்தான் வைட்டமின் 'சி'. ஏனெனில் அந்த அளவுக்கு தலைவன் நமக்காக வேலை செய்கிறான்.

இந்த வைட்டமின் சி குறைந்துவிட்டால் உடலில் பல நோய்கள் உண்டாகும். அதில் முதல் நோய், ஸ்கர்வி. இந்த நோய் ஏற்பட்டால் உடலில் கொலாஜென் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். இந்த கொலாஜென் தசைகள், எலும்பு, தோல், ரத்தக்குழாய்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றில் இருக்கிறது. இதனுடைய வேலை, மனிதர்களின் எலும்புகளையும், தசையையும் இறுக்கமாகவும் உறுதியாகவும் வைத்திருப்பதுதான்.

இது குறையும் போது உடல் பலவீனமாக இருக்கும். எப்போதும் சோர்வாக இருப்பதை போன்று உணர்வீர்கள். ஒரு வேலையும் உருப்படியாக செய்ய முடியாது. கை, கால் மூட்டுகளில் வலி இருக்கும், தோல் சுருங்கிவிடும்.

ஸ்கர்வி போலவே 'ஹைப்பர் தைராய்டிசம்' எனும் நோயும் வைட்டமின் சி குறைபாட்டால்தான் உருவாகிறது. இது படபடப்பு, நடுக்கம், எதிர்பாராத எடை இழப்பு, பசியின்மை, பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

முதலில் 'தைராய்டு' என்றால் என்ன என்று பார்ப்போம். தைராய்டு என்பது உங்கள் கழுத்தின் கீழ் முன் பக்கத்தில், பட்டாம்பூச்சி வடிவத்தில் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய சுரப்பி ஆகும். இது இரண்டு வகையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

ட்ரையோடோதைரோனைன், தைராக்ஸின் எனப்படும் இந்த இரண்டு ஹார்மோன்கள் மருத்துவ மொழியில் T3 மற்றும் T4 என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் நம்முடைய உடலின் எனர்ஜியை கன்ட்ரோல் செய்கிறது. அதாவது, எடை, இதயத் துடிப்பு, மனநிலை, எலும்பு ஆரோக்கியம் மற்றும் செரிமானம் போன்றவற்றிற்கு எவ்வளவு எனர்ஜியை கொடுக்க வேண்டும்? என்பதை இந்த ஹார்மோன்கள்தான் தீர்மானிக்கிறது.

இது அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுவதால்தான் 'தைராய்டு நோய்' ஏற்படுகிறது. இப்படி அதிகமாக சுரப்பதால், படபடப்பு, நடுக்கம் தொடங்கி இதயம், கருவுற்றல் வரை கடும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இது தைராய்டின் விளைவுகள்தான். நாம் இன்றும் ஹைப்பர் தைராய்டிசம் பற்றி பார்க்கவில்லை. வெறும் தைராய்டே இப்படி கடுப்பேற்றுகிறது எனில், ஹைப்பர் தைராய்டிசம் இன்னும் மோசமாக உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பதட்டம் மற்றும் பயம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, பசியின்மை, எரிச்சல், விரல்களிலும் கைகளிலும் லேசான நடுக்கம், அதிக வியர்வை, தூங்குவதில் சிக்கல், மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள், குடல் இயக்க கோளாறு போன்ற முக்கிய பிரச்னைகளை ஹைப்பர் தைராய்டிசம் ஏற்படுத்துகிறது. இது தவிர சில துணை பிரச்னைகளும் உண்டு. இவை அனைத்தும் வைட்டமின் சி குறைபாட்டால்தான் உருவாகிறது.

இதற்கடுத்து இரத்த சோகை கூட வைட்டமின் சி குறைபாட்டால்தான் உருவாகிறது. சோர்வு, வெளிறிப்போதல், மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், எடை இழப்பு ஆகியவை ரத்த சோகையால் ஏற்படுகிறது. உடலுக்கு இரும்பு சத்து அவசியம், இதற்காக என்னதான் பேரிச்சை பழத்தையும், முருங்கை கீரையையும் கணிசமான அளவில் எடுத்துக்கொண்டாலும் கூட, அதில் இருக்கும் இரும்பு சத்தை நமது உடல் உள்வாங்கிக்கொள்ள வைட்டமின் சி அவசியம். அது இல்லையெனில் எவ்வளவு சத்து வாய்ந்த உணவை எடுத்துக்கொண்டாலும் பலனிருக்காது.

இந்த மூன்று முக்கியமான பிரச்னைகள் தவிர ஈறுகளில் ரத்த போக்கு, தோல் நோய்கள் கூட இந்த வைட்டமின் சி குறைவால் ஏற்படுகிறது. எனவே உடனடியாக வைட்டமின் சி உள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இதை எடுத்துக்கொள்ள தொடங்கி 3 மாதங்களுக்கு பின்னர்தான் வைட்டமின் சி குறைபாடு முழுமையாக நீங்கும்.

கேரட், கிவி, கீரை, எலுமிச்சை, பெல் பெப்பர்ஸ், ஸ்ட்ராபெர்ரிகள், தக்காளி, பப்பாளி, ப்ரோக்கோலி, கருப்பட்டி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா, கடல் சிப்பிகள், ஆரஞ்சு, மிளகாய் ஆகியவற்றில் வைட்டமின் சி இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த சத்துக்களை முழுமையாக நாம் பெற வேண்டும் எனில், குடி, சிகிரெட் போன்றவற்றை கைவிட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட நோய், நோய் காரணிகள், மருந்து, மருத்துவ முறை அனைத்தும் அனைவருக்கும் ஒன்று போல இருக்காது. எனவே மருத்துவர்களின் ஆலோசனை பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+