தொப்பை எகிறும்.. நம்மில் பலரும் செய்யும் "அந்த" ஒரு தவறு.. அழகு கூட போய்விடுமாம்! பகீர் ஆய்வு
டெல்லி: உடல் எடை அதிகரிப்பு என்பது இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இதற்கிடையே நாம் அதிக நேரம் ஸ்மார்ட்போன்கள், டிவி மற்றும் கம்பியூட்டர் திரைகள் பார்த்துக் கொண்டே இருப்பது கூட உடல் எடை அதிகரிக்கக் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்றைய உலகில் ஸ்மார்ட்போன்கள், டிவி மற்றும் கம்பியூட்டர் திரைகள் தான் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. இவை இல்லாமல் வாழ்க்கையே நடத்த முடியாது என்ற சூழலே இருக்கிறது.

அதிகரிக்கும் ஸ்கிரீன் டைம்: நீங்களே சொல்லுங்கள்.. கடைசியாக இந்த மூன்றும் இல்லாமல் கடைசியாக நீங்கள் எப்போது ஒரு நாளை கழித்தீர்கள் என்று? அந்தளவுக்கு இவை நமது வாழ்க்கையில் கிட்டதட்ட ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இவை ஒரு நாளை நினைத்துப் பார்ப்பதே கடினம் என்ற சூழலே இப்போது நிலவுகிறது. வேலையாக இருந்தாலும் சரி, சில் செய்வதாக இருந்தாலும் சரி டிஸ்பிளே முன்னாலேயே அமர்கிறோம்.
நாள் முழுவதும் திரையைப் பார்ப்பது நம் கண்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை அனைவருக்கும் தெரியும். ஆனால், இதனால் உடல் எடை கூட அதிகரிக்குமாம். இது தொடர்பாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது நீண்ட நேரம் திரைகள் முன்னாலேயே அமர்ந்து கொண்டிருந்தால் உடல் எடை கணிசமாக அதிகரிக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் நமது அழகும் கூட பாதிக்குமாம். இதற்கு சில ஆய்வுகளும் இருக்கிறது.
ஆய்வுகள்: அதாவது யாரெல்லாம் அதிக நேரம் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்களோ... அவர்களின் உடல் எடை அதிகரிப்பதாக அமெரிக்காவில் கடந்த 2017இல் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், மற்றொரு ஆய்வில் குழந்தைகளாக இருக்கும் போது அதிக நேரம் டிவி பார்த்தால் அது இளம் வயதில் எடை கூட காரணமாக இருப்பதும் தெரிய வந்தது. அதாவது ஸ்மார்ட்போன்கள், டிவி மற்றும் கம்பியூட்டர் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க உடல் எடையும் அதிகரிக்கிறது.
காரணம்: இதற்குக் காரணம் ரொம்பவே ஈஸி. உடல் எடையைக் குறைக்க நாம் கலோரிகள் எரிக்க வேண்டும். வாக்கிங், ஜாக்கிங் சென்றால் கலோரிக்கள் குறையும். சும்மா வாகனத்தில் வெளியே சென்று வந்தால் கூட அடிக்கும் வெயிலில் உடல் எடை குறையும். ஆனால், வீட்டிற்குள்ளேயே அமர்ந்து கொண்டு திரைகளைப் பார்த்தால் கலோரிக்களை நாம் எரிப்பதில்லை. இதனால் கொழுப்பு உடலில் அதிகம் சேர்கிறது.
நாம் செய்யும் முக்கிய தவறு: நமது வீட்டில் பெரியவர்கள் இருந்தால் டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள்.. திட்டுவார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. டிவி பார்த்துக் கொண்டே நாம் சாப்பிட்டோம் என்றால் வயிறு நிறைந்த பிறகும் சாப்பிடுவோம். அதாவது நமது தேவைக்கு அதிகமாக உணவை எடுத்துக் கொள்வோம். இதுவும் உடல் எடை அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடுகிறது. அதுவும் இப்போது டிவி அல்லது செல்போன் காட்டி தான் குழந்தைகளுக்குக் கூட சாப்பாடு ஊட்டுகிறார்கள். இது பெரிய பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது.
டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடும் போது நாம் உணவுகளை நன்றாக மென்று தின்பதில்லை. அப்படியே முழுவதுமாக விழுங்கிவிடுகிறோம். இதுவும் கூட உடல் எடை அதிகரிக்கக் காரணமாக இருந்துவிடுகிறது. மேலும், டிவி, ஸ்மாட்போன்களில் உணவு குறித்த வீடியோக்கள் அதிகம் பார்ப்பது அதிகமாக நம்மை சாப்பிட வைக்கிறது. இதனால் எடை தானாக அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதனால் உடலில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும், அதிக ஸ்கிரீன் டைம் என்பது ஹைப்பர் பிக்மென்டேஷன், சருமத்தை விரைவாக வயதாக வைப்பது மூலம் நமது அழகையும் கெடுக்கிறது. எனவே, இந்த மூன்றையும் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் குறைவாகப் பயன்படுத்துவதே நமக்கு ரொம்ப நல்லது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications