பெட்ஷீட்களை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும்! நல்ல தூக்கத்திற்கு இது முக்கியம்.. கவனம்!
சென்னை: நாம் தினசரி பயன்படுத்தும் விஷயத்தில் முக்கியமானது பெட்.. காலை முதல் சுற்றிக் களைப்பாக வரும் போது படுக்கையில் அப்படியே சாய்ந்து படுத்தால் தான் நிம்மதியாக இருக்கும். ஆனால், இருக்கும் வேலைகளுக்கு நடுவே பெட்ஷீட்டை துவைக்க நாம் மறந்துவிடுகிறோம். உண்மையில் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பெட்ஷீட்டை துவைக்க வேண்டும். இதனால் நமக்கு என்ன நன்மை என்பதை நாம் பார்க்கலாம்.
காலை முதல் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் போது, எப்போது தான் அப்படியே பெட்டில் படுத்துத் தூங்குவோம் என்றே பலருக்கும் தோன்றும். சாப்டாக இருக்கும் பெட்டில் படுக்கும் போது தூக்கம் ஈஸியாக வரும். மேலும், உடல் களைப்பும் குறையும்..

பெட்ஷீட்: இப்படி படுக்கை என்பது நமது உடலையும் மனதையும் புத்துணர்வு தர முக்கியமானதாக இருந்தாலும், பெரும்பாலும் அதை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம். குறிப்பாகப் படுக்கை விரிப்பை மாற்றுவது நமது லிஸ்டில் இருந்து மிஸ் ஆகி விடுகிறது. சரி உண்மையில் எவ்வளவு நாட்களுக்கு ஒரு பெட்ஷீட்களை துவைக்க வேண்டும்.. எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை பெட்ஷீட்களை மாற்ற வேண்டும்! இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இது தொடர்பாகப் படுக்கைகளை விற்கும் பிரபல நிறுவனமான சத்யாஸ்காவின் இணை நிறுவனர் நவ்யா கன்னா கூறுகையில், "பொதுவாகப் படுக்கைகளை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். அதேநேரம் எலர்ஜி இருப்போர், செல்லப்பிராணிகள் வைத்திருப்போர்.. உங்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்றால் வாரத்திற்கு ஒரு முறை துவைக்க வேண்டும்" என்கிறார்.
ஏன் முக்கியம்: படுக்கை விரிப்புகளை அடிக்கடி சுத்தம் செய்வது சுகாதாரத்தைப் பராமரிக்க உதவும். மேலும், தூங்கும் சூழலைப் பராமரிக்க உதவுகிறது.பெட்ஷீட்களை நாம் துவைக்காமல் விட்டுவிட்டால் அதில் அழுக்கு, நுண்ணுயிரிகளைச் சேர ஆரம்பிக்கும். இது நமது உடலுக்கு அவ்வளவு நல்லது இல்லை.
நவ்யா கன்னா மேலும் கூறுகையில், "படுக்கையைத் துவைக்கும் போது அது வியர்வை, இறந்த சரும செல்கள், கண்ணுக்கே தெரியாத சிறு பூச்சிகள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட அலர்ஜி ஏற்படுத்துவதை நீக்குகிறது. அதை அப்படியே நாம் கழுவாமல் விட்டால், தோல் எரிச்சல், முகப்பரு, ஒவ்வாமை மற்றும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்" என்கிறார்
பெட்ஷீட்கள்: சுத்தமான பெட்ஷீட்கள் என்பது உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தைத் தருவதில்லை.. மாறாக அது நல்ல தூக்கத்தையும் நமக்கு தந்து தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், பெட்ஷீட்களை குளிர்ந்த நீரில் துவைப்பதற்குப் பதிலாகச் சூடான நீரில் துவைக்கலாம் என்றும் நவ்யா தெரிவிக்கிறார். மேலும், ஒரே நேரத்தில் நாம் அதிக பெட்ஷீட்களை துவைக்கப் போட்டுவிடுகிறோம். இதனால் சரியாகச் சுத்தம் செய்ய முடியாது. எனவே, ஒரே நேரத்தில் பல பெட்ஷீட்களை வாஷிங் மெசிஷினில் போடுவதைத் தவிர்க்குமாறு நவ்யா குறிப்பிடுகிறார்.
எப்படி துவைக்க வேண்டும்: பெட்ஷீட்களை துவைக்கும் போது அதிகளவில் சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிகளவில் சோப்பு பயன்படுத்துவது பெட்ஷீட்டை மென்மையாக்கி, அதன் உறிஞ்சும் தன்மையைக் குறைக்கும். மேலும், பெட்ஷீட்டை துவைத்த பிறகு அதை நன்கு காய வைக்க வேண்டும். இல்லையென்றால் அதில் பூஞ்சை வளரும் ஆபத்து இருக்கிறது. பெரும்பாலும் இப்போது நாம் வாங்கும் பெட்ஷீட்களிலேயே அதை எப்படித் துவைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை விளக்கி இருப்பார்கள். எனவே, அதைக் கவனமாகப் பின்பற்றுங்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications