Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிட்னஸ் உடல் வேண்டுமா? இதை பண்ணுங்க..தினம் 70 முட்டை-2 லிட்டர் பால் குடிக்கும் ‛கிரேட்’ காளி அட்வைஸ்

மாஜி மல்யுத்த வீரர் ‛கிரேட்’ காளி தினமும் 70 முட்டை சாப்பிட்டு, 2 லிட்டர் பால் குடித்தாலும் கூட உடலை பிட்னெஸ்ஸாக வைத்துள்ளார். இதன் பின்னணி ரகசியம் என்ன? என்பது வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவில் பிரபலமாக உள்ள டபிள்யூடபிள்யூஇ எனும் மல்யுத்த போட்டியில் இந்தியாவில் இருந்து முதல் ஆளாக பங்கேற்ற ‛கிரேட்' காளி 7 அடி உயரத்தில் திடகாத்திரமான உடலுடன் எதிராளிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். தற்போது மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கிரேட் காளி பாஜகவில் இணைந்த நிலையில் கட்டுக்கோப்புடன் உடலை வைத்துள்ளார். இதற்காக தனியாக டயட் உணவுகளை எடுத்து கொள்ளாத கிரேட் காளி தினமும் 70 முட்டை, 2 லிட்டர் பால் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதோடு, டயட் உணவுகளை பின்பற்றி நாவடக்கத்தில் இருப்போர் ‛கிரேட்' பாணியை பின்பற்றியும் உடலை கட்டுகோப்பாக மாற்ற முயற்சி மேற்கொள்ளலாம்.

தற்போதைய சூழலில் 18 வயது நிரம்பி கல்லூரி செல்லும் ஆண், பெண்கள் உள்பட வயதானவர்கள் வரை அனைவரும் தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புகிறார்கள். இதற்காக பலர் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி செல்லும் நிலையில், ஏராளனவர்கள் ஜிம்முக்கு படையெடுக்கின்றனர். இன்னும் சிலரோ ‛டயட்' என்ற பெயரில் பிடித்த உணவுகளை புறம்தள்ளிவிட்டு கலோரியை கணக்கிட்டு உணவுகளை சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதில் முறையான நடைப்பயிற்சி, தினமும் ஜிம் செல்வது, உணவு கட்டுப்பாட்டை சரியாக கடைப்பிடிப்பது ஆகியவற்றை சரியாக செய்து பலரும் தங்களின் உடலை தாங்கள் விரும்பிய எடையில் வைத்து கொள்கிறார். ஆனாலும் ஏராளமானவர்கள் மேற்கூறிய பழக்கத்தை முறையாக கடைப்பிடிப்பது இல்லை. குறிப்பாக டயட் உணவுகளை பாதியில் கைவிட்டுவிட்டு பிட்னெஸ்ஸாக உடலை மாற்றி கொள்வதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கடும் உணவு கட்டுப்பாடுகள் தேவையா?

கடும் உணவு கட்டுப்பாடுகள் தேவையா?

இந்நிலையில் பல்வேறு உடற்பயிற்சி பயிற்சியாளர்களை ஒன்றை தான் சொல்கின்றனர். அதாவது பிட்னெஸ்ஸான உடலை பெற ஒவ்வொருவரும் கடும் உணவு கட்டுப்பாடுகளையும், கடும் உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டியது இல்லை. மாறாக சாப்பிடும் உணவின் தன்மை, அதில் உள்ள சத்துகளை அறிந்து உணவு எடுத்து கொள்வதோடு அடிப்படையான உடற்பயிற்சிகள் மட்டுமே போதும் என்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தான் சமீபத்தில் வடக்கு அயர்லாந்தின் பாங்கூரை சேர்ந்த ரியான் மெர்சர் எனும் உடற்பயிற்சி கற்று கொடுக்கும் நபர் 30 நாட்கள் காலை, மாலை, இரவு என 3 வேளையும் தனக்கு பிடித்த பீட்சாவை உணவாக எடுத்து கெண்டோ 30 நாளில் மூன்றரை கிலோ வரை எடையை குறைத்தார். பொதுமக்கள் கடும் உணவு கட்டுப்பாடுகளை எடுத்து கொள்ள வேண்டாம். மாறாக உணவில் இருக்கும் கலோரி அறிந்து அதற்கேற்ப பிடித்த உணவுகளை சாப்பிட்டாலே உடல் எடையை குறைக்கலாம் என்பதை நிரூபித்து காட்டினார்.

‛கிரேட்’ காளி பின்பற்றும் உணவு முறை

‛கிரேட்’ காளி பின்பற்றும் உணவு முறை

அந்த வரிசையில் தான் தற்போது மாஜி மல்யுத்த வீரரான ‛கிரேட்' காளியின் டயட் உணவு பற்றிய விபரம் வெளிாகி உள்ளது. 7 அடிக்கும் அதிக உயரமுடைய ‛கிரேட்' காளியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இவர் அமெரிக்காவில் பிரபலமான மல்யுத்த போட்டியில் பங்கேற்று பல வீரர்களை பந்தாடி வெற்றிகளை குவித்தார். மல்யுத்த போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்ற இவர் 7 அடி உயரத்தில் திடகாத்திரமான உடலால் எதிராளியை அச்சுறுத்தும் வகையில் உடல் அமைப்பை கொண்டுள்ளார். ‛கிரேட்' காளி தற்போது மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற்று இந்தியா திரும்பிய நிலையில் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் ‛கிரேட்' காளியின் உணவு ரகசியம் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இவரும் பெரிய அளவில் எந்த டயட் முறைகளையும் கடைப்பிடிக்கவில்லையாம்.

டயட் உணவுகளே கிடையாதாம்

டயட் உணவுகளே கிடையாதாம்

அதாவது மல்யுத்த போட்டியில் ‛கிரேட்' காளி பங்கேற்றுள்ளார். அவர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் இந்த செய்தி நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும். ஏனென்றால் அவர் தனது உடலை பராமரிக்க சரியான கலோரியில் உணவு எடுத்து கொள்கிறாரே தவிர டயட் உணவுகளை அவர் பின்பற்றுவது இல்லையாம். அதாவது டயட் என்ற பெயரில் சிக்கன் பர்கர், முட்டை, அரிசி உணவுகள், பருப்பு உணவுகள், முட்டைகள் என எதையும் அவர் புறக்கணிப்பது இல்லையாம். அனைத்தையும் ஒருபுடி பிடித்து வரும் நபராக தான் ‛கிரேட்' காளி உள்ளார்.

பேவரைட்டான சிக்கன் பர்க்கர்

பேவரைட்டான சிக்கன் பர்க்கர்

கேஎப்சி சிக்கன் பர்க்கர் அவரது பேவரைட் உணவுகளில் ஒன்று என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் கேஎப்சி சிக்கன் பர்க்கர் மீது அவருக்கு பிரியம் அதிகமாம். மேலும், இப்போதும் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 60 முதல் 70 முட்டைகள் வரை சாப்பிடும் வழக்கத்தை ‛கிரேட்' காளி கொண்டுள்ளார். முன்னதாக அவர் மல்யுத்தத்தில் இருந்தபோது தினமும் ஒவ்வொரு உணவு வேளைகளிலும் சுமார் 15 முதல் 20 முட்டைகளை எடுத்து கொண்டு வந்தார். குறிப்பாக பருப்பு உணவுகள், ரைஸ், சப்ஜியின் கோமியின் தீவிர ரசிகனான ‛கிரேட்' காளி ரொட்டி உணவுகள் மீதும் அதீத காதல் கொண்டவராம். இதனை அவரே சில பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இப்படி சாப்பிட்டால் எப்படி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என நீங்கள் கேட்பது தெரிகிறது.

பின்பற்றும் ரகசியம் இதுதான்

பின்பற்றும் ரகசியம் இதுதான்

இதற்கான விடை என்பது இப்போது உங்களுக்கு கிடைக்கும். அதாவது இந்த வகையான உணவுகளை சாப்பிடும்போது ‛கிரேட்' காளி சில விஷயங்களை கடைப்பிடிப்பார். அதாவது 'டபுள் டவுன் பர்கர்' சாப்பிட்டால் அதனை ரொட்டி(Bun) இல்லாமல் சிக்கனை மட்டுமே சாப்பிடுவார். உடலுக்கு தேவையான புரதத்துக்கு ரொட்டி அல்லது வேக வைத்த உணவு பொருட்களை எடுத்து கொள்வதற்கு பதில் ‛கிரேட்' காளி பாலை பருகுகிறார். அதன்படி தினமும் குறைந்தது 2 லிட்டர் பால் குடித்து புரதத்தை பெற்று கொள்கிறார். முட்டைகளை உண்ணும்போது மஞ்சள் கருவை பெரும்பாலும் சாப்பிடாமல் தவிர்க்கிறார். இதில் கொழுப்பு சத்து இருப்பதால் அதனை பெரும்பாலான நேரங்களில் அவர் ருசிப்பது இல்லையாம். மேலும் உடலுக்கு தேவையான ஒரு சத்தை அதிக கொழுப்பு உள்ள உணவுகளிடம் இருந்து எடுத்து கொள்வதற்கு பதில் கொழுப்பு குறைந்த மாற்று உணவில் இருந்து அவர் பெறுகிறார். ஒருவேளை தவிர்க்க இயலாமல் பிடித்த உணவை சாப்பிட்டால் அதற்கு ஏற்ப தனது பிற உணவுகளை அவர் மாற்றம் செய்து கொள்கிறார். சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் புரதம், கார்போஹைரேட்ரேட்டுகள், வைட்டமின்கள் அடங்கிய சமச்சீர் உணவுகளை எடுத்து கொள்கிறார். அதோடு அவ்வப்போது அடிப்படை உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். இதன்மூலம் அவர் தனது உடலை எந்த வித டயட் உணவும் இன்றி கட்டுக்கோப்பாக வைத்து கொள்கிறார். மேலும் ஒவ்வொரு காலத்திலும் கிடைக்கும் ஆப்பிள் உள்பட அனைத்து வகையான பழங்களையும் அவர் கலோரி அறிந்து உண்கிறார். குறிப்பாக காபி, தயிர் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும் முற்றிலுமாக ‛கிரேட்' காளி தவிர்க்கிறாராம்.

‛கிரேட்’ காளி சொல்வது என்ன?

‛கிரேட்’ காளி சொல்வது என்ன?

இதுபற்றி கிரேட் காளி சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், ‛‛நான் கோழி, முட்டை, அரிசி, பருப்பு என கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, புரதங்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சரிவிகித உணவை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். இதனை முறையாக பின்பற்ற வேண்டும் என மற்றவர்களுக்கும் நான் பரிந்துரைக்கிறேன். இப்போதெல்லாம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், மக்களின் உடல்நலம் மோசமடைவதைப் பார்க்கிறோம், அதைத் தவிர்க்க நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட நாளில் திடகாத்திரமான உடலை பெற குறுக்குவழியில் பயனிப்பதை நான் பரிந்துரைக்க மாட்டேன். அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஒரு நல்ல உடலை பெற வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் அதற்கென சிறிது நேரத்தை செலவிடுவது அவசியமாகும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+