வெயில் காலத்தில் வியர்க்குருவால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் பண்ணுங்க.. ஈஸியா தடுக்கலாம்
சென்னை: வெயில் காலத்தில் உடலில் பலருக்கும் வியர்க்குரு பிரச்சனை இருக்கும். உடல் சூடு காரணமாகவும் , வானிலை மாற்றம் காரணமாக உடலில் பலருக்கும் வியர்க்குரு ஏற்படும். இதற்கான தீர்வை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.

தற்போது தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது.
இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும்.
வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பேரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும். தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும்.
ஆனால் மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வியர்க்குரு: வெயில் காலத்தில் உடலில் பலருக்கும் வியர்க்குரு பிரச்சனை இருக்கும். உடல் சூடு காரணமாகவும் , வானிலை மாற்றம் காரணமாக உடலில் பலருக்கும் வியர்க்குரு ஏற்படும்.
இதனால் உடலில் அரிப்பு ஏற்பட்டு பலரும் அவதிப்படும் நிலைப்பாடு ஏற்படும். உடலில் எதோ குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். சில இடங்களில் சிவப்பு சிவப்பாக இருக்கும்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

வியர்குருவை தடுக்க பின்வரும் வழிகளை பின்பற்றுங்கள்: குளிர்ந்த நீரில் குளியல் மற்றும் அல்லது ஐஸ் கட்டி வைத்து தேய்ப்பது.
மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளை வீட்டில் விடமால் பயன்படுத்துவது.
வேர்வையை தடுக்க எளிதாக ஈரப்பதத்தை உறிஞ்சும் ஆடைகளை பயன்படுத்துவது.
காட்டன் ஆடைகளை உடுத்துவது.
லேசான ஆடைகளை உடுத்துவது.
அதிக காய்கறிகள், பழங்கள், லேசான உணவுகள், ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவது.
டீ, காபி குறைத்து ஜூஸ் குடிக்கலாம்.
பாதிக்கப்பட்ட இடங்களில் சந்தனம் பூசலாம்
பாதிக்கப்பட்ட இடங்களில் கற்றாழை பூசலாம்
பாதிக்கப்பட்ட இடங்களில் வாசனை இல்லாத டால்கம் பவுடர் பூசலாம்
வெளியே சென்று விட்டு வந்ததும் உடல் பாகங்களை நன்றாக கழுவவும்
அதிக நீர் சத்து உள்ள உணவுகளை சாப்பிடவும்
வியர்வை நாற்றத்தை போக்குவது எப்படி? உங்கள் உடலில் வியர்வை நாற்றம் உள்ள பகுதியில் நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலந்து துணியால் துடைக்கவும்
இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைட் நீர் கிருமிகளை கொண்டு நாற்றத்தை போக்கும்
நீர் சத்து உள்ள உணவுகள், பழங்கள் காய் கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலை பேணிக்காத்து நாற்றம் ஏற்படாமல் காக்கும்
ஒரு உடையை ஒரு முறை மட்டுமே கோடை காலத்தில் அணியவும்
உள்ளாடைகளை ஒவ்வொரு முறையும் சரியாக துவைத்து பயன்படுத்தவும்
பால் பொருட்களை கோடையில் குறைவாக எடுப்பது நாற்றத்தை போக்க உதவும்
உங்களுக்கு அதிக அளவில் வியர்வை ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications