67 நோய்களை பரப்பும் முட்டை! நல்ல முட்டையா கெட்டுபோனதா? எப்படி கண்டுபிடிப்பது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முட்டையை நல்ல முட்டையா, கெட்டு போன முட்டையா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பது குறித்து உணவு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

முட்டை என்பது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா என்பதை விட்டுவிடுவோம். இந்த முட்டையில் என்னென்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் பி 12, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, புரதம், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.

How to check whether the egg is good or bad

முட்டைகளை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைந்து தடை வளர்ச்சிக்கு உதவுகிறது என்கிறார்கள். முட்டையால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். முட்டை கண் பார்வையை மேம்படுத்தும். முட்டையின் மஞ்சள் கருவில் புரதங்கள், வைட்டமின் பி6, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மூளையின் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுத்தால் அவர்களின் மூளை ஆரோக்கியமடையும். இதய நோயை தடுக்கும். எடை குறைப்புக்கு ஏற்றது. சருமத்தை அழகாக்கும். இத்தகைய நன்மைகளை கொடுக்கும் முட்டை கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

இதுகுறித்து உணவு விஞ்ஞானி பசுபதி பாலிமர் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முட்டை என்பது சாதாரண நிலையில் இருக்கும் மனிதனுக்கும் கிடைக்கக் கூடிய ஒரு புரதச் சத்து கொண்ட உணவு பொருளாகும். இந்த முட்டையில் ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால் இதை மக்கள் பாதுகாப்பாக சாப்பிட வேண்டும்.

முட்டை வாங்கியதும் அதை பயன்படுத்துவதற்கு முன்பு தயவு செய்து அதை சுத்தப்படுத்துங்கள். ஏனென்றால் முட்டையின் மீது பறவைகளின் எச்சம் இருக்கும். அந்த எச்சத்தில் பல விதமான நுண் கிருமிகள் இருக்கும். இதன் மூலம் நோய்கள் வரக் கூடும். ஹோட்டல்கள், உணவு விடுதிகளில் சிறிதளவு குளோரின் போட்டு முட்டைகளை சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்துவார்கள்.

வீடுகளில் குளோரினுக்கு பதிலாக மஞ்சள் தூள், கல் உப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். முட்டை மீது எந்த கறையும் இருக்கக் கூடாது. முட்டை எந்த அளவுக்கு சக்தியை நமக்கு தருகிறதோ அந்தளவுக்கு 67 விதமான நோய்களையும் நமக்கு கொடுக்கக் கூடும். முட்டையில் விரிசல் இருந்தால் அது கெட்டு போனது என்று அர்த்தம். எனவே அதை வாங்காதீர்கள்.

முட்டையை உடைத்ததும் அதை அடுத்த நிலைக்கு கொண்டு போக வேண்டும். அப்படியே வைத்திருக்கக் கூடாது. அதாவது உடைத்த முட்டையில் உப்பு போடுதலோ, மிளகு தூள் போடுதலோ செய்ய வேண்டும். இவற்றை போடாமல் வைத்திருந்தால் முட்டை கெட்டு போக ஆரம்பித்துவிடும். இது ஆபத்தான விஷயம்.

முட்டை நன்றாக இருக்கிறதா என பார்க்க முட்டையை ஒரு பக்கெட் நீரில் போடுங்கள். அது உள்ளே போனால் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். மிதந்தால் கெட்டு போய்விட்டது என்று அர்த்தம். முட்டையை உள்ளே போட்டதும் அது நீளவாக்கில் படுத்துவிட வேண்டும். செங்குத்தாக நின்றால் அது 3 வாரங்களுக்கு முன்பு வந்த முட்டை என்பார்கள். இவ்வாறு பசுபதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+