அல்சரை அசால்ட்டாக டீல் செய்யாதீர்! புற்றுநோயாக மாறும் அபாயம் கொண்டவை! டாக்டர் அட்வைஸ்
சென்னை: அல்சர் எனப்படும் ஆறாத புண்ணை குணப்படுத்துவது எப்படி? புற்றுநோயாக மாறும் தன்மை கொண்ட அல்சர் எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் திவ்யா அருள் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அல்சர் எனப்படுவதே ஆறாத புண் என்பது தான்.. உணவுப் பாதையில் உள்ள ஆறாத புண்கள் தான்.. உங்களுக்கு தொந்தரவு தருகிறது. அவற்றை பெப்டிக் அல்சர் என சொல்வார்கள் மருத்துவர்கள்..

இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்..
1.. கேஸ்ட்ரிக் அல்லது இரைப்பையில் அல்சர்.....
2.. குடற் முதற் பகுதி அல்லது டுயோடினம் அல்சர்....
கேஸ்ட்ரிக் அல்லது இரைப்பை அல்சர்..
இரைப்பையில்.. அதிக அளவில் அமிலத்தன்மை தேங்கி நிற்கும். எந்த உணவு சாப்பிட்டாலும்.. அது உடனே எதுக்களித்துக் கொண்டு மேலே உணவுக்குழாய் வழியே தொண்டைக்கு வரும்.. உணவு உண்ட பின்.. வயிற்றில் வலி அதிகமாக இருக்கும்.. உடல் மெலிவு ஏற்படும்.. வயிற்று போக்கு உண்டாகும்.. வாந்தி அதிகமாக காணப்படும்.. இரத்தம் கலந்த வாந்தி.. அதீத வயிற்று வலியுடன் இவ்வகை அல்சர் ஏற்படுத்தும்.. பசியின்மை இருக்கும்..
இந்த இரண்டு..வகையான அல்சர்களில்.. முதன்மை வகையான உணவு உண்ட பின்.. வயிற்றில் வலி அதிகரிக்கும்.. வகை.. கண்டிப்பாக.. குடல் அறுவை சிகிச்சை மருத்துவரிடம்... ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.. ஏனெனில் இந்த வகை.. அதிகமாக ஹெலிக்கோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா காரணமாக உண்டாகும் ஆறாத வயிற்றுப்புண் ஆகும்.. புற்றுநோயாக மாறும் தன்மை கொண்டது..
ஆரம்ப காலத்தில் செய்து கொள்ளும் சிகிச்சை பல ஆபத்துகளை தவிர்க்கும்..
2.. குடற்முதற் பகுதி அல்லது டுயோடினல் அல்சர் வகை..
இரண்டாவது வகை இரைப்பையில் இருந்து குடற்பகுதி ஆரம்பித்து.. முதல் பகுதியில்.. டுயோடினம்.. என்பார்கள்.. அவற்றில்... ஏற்படும் புண்.. டுயோடினல் அல்சர் எனப்படும்..வயிற்று வலி.. உணவு உண்ட பின்... சரியாகும்.. அதனால். அதிக அளவில் உணவுகளை உட்கொள்வார்கள்... உடை எடை அதிகரிக்கும்..
இவர்களுக்கு.. மலச்சிக்கல் அதிகமாக காணப்படும்.. அதிக ஆபத்து இல்லாத வகை இது. சரியான உணவுப் பழக்கம்.. நேரத்திற்கு உணவு உண்ணுதல் மற்றும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் இரண்டையும் அறவே தவிர்க்க வேண்டும்..
அமிலத்தன்மை குறைக்கும் மருந்துகள் மருத்துவர் ஆலோசனைபடி எடுத்துக் கொள்ள .. நல்ல முறையில் குணமாகும்.
இவர்களுக்கு.. நிறைய பசி எடுக்கும்.. நிறைய சாப்பிடும் பழக்கம் இருக்கும்.. காரம் புளிப்பு சுவை உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.... வெறும் வயிற்றில் சோடா மற்றும் இளநீர்; தேனீர் காபி தவிர்க்க வேண்டும்.. சரியான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இந்த தொந்தரவை கட்டுப்படுத்தும்....
இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்ட பதிவு.. தமிழகத்தை பொறுத்தவரை எல்லா மாவட்ட தலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள அறுவை சிகிச்சை துறையில் மருத்துவரை அணுகி.. தகுந்த எண்டோஸ்கோபி பரிசோதனை மற்றும் மருந்துகளையும் இலவசமாக பெற்று கொள்ளலாம் .விரைவில் குணமாகும்.. இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications