இடது கை வலி மாரடைப்புக்கான அறிகுறியா?.....இதை எப்படி கண்டுபிடிப்பது?
சென்னை: இடது கையில் ஏற்படக்கூடிய வலி மாரடைப்புக்கான (Heart Attack) அறிகுறியா? அல்லது கழுத்து (Cervical-Neck Pain) வலியினால் ஏற்படக்கூடிய வலியா என்று பலருக்கும் இந்த சந்தேகம் உண்டு. ஏனெனில் மாரடைப்பு மற்றும் கழுத்து நரம்பில் வரக்கூடிய வலி இரண்டுமே, இடது புறத்தில் ஏற்படுவதால், சற்று குழப்பமாக இருக்கும். முதலில் இரண்டிற்கும் இடையான வித்தியாசத்தை தெரிந்து கொள்ளவேண்டியது மிக அவசியமாகும். பின்பு அதற்கேற்றபடி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. இந்த வலிகளை எப்படி கண்டறிவது மற்றும் எவ்வாறு இதை மேற்கொள்வது என்பதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சமீபகாலமாக வயது வரம்பு இன்றி மாரடைப்பால் உயிரிழப்பு விகிதம் அதிககிர்துகொண்டே வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் முறையற்ற உணவு வகைகள், கொழுப்பு நிறைந்த உணவு வகைகள், தினமும் மாமிசம் உணவு உட்கொள்ளுதல், மன அழுத்தம், துரித உணவு, சரியான உடற்பயற்சி இல்லாமை, வேலை பளு காரணம், போன்ற பல காரணங்கள் உள்ளது. ஆனால் மாரடைப்பு வருவதற்கு முன்பே, சில அறிகுறிகள் நமக்கு எச்சரிக்கை மணி அடித்து காட்டிக்கொடுத்துவிடும். உடலில் ஏற்படக்கூடிய அறிகுறிகளை வைத்து, முன்னெச்சரிக்கையாக சரியான நேரத்தில் மருத்துவரை அணுகினால், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தவிர்த்து, உயிர் காக்கலாம்.
சமீபகாலமாக வயது வரம்பு இன்றி மாரடைப்பால் உயிரிழப்பு விகிதம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் முறையற்ற உணவு வகைகள், கொழுப்பு நிறைந்த உணவு வகைகள், தினமும் மாமிசம் உணவு உட்கொள்ளுதல், மன அழுத்தம், துரித உணவு, சரியான உடற்பயற்சி இல்லாமை, வேலை பளு காரணம், போன்ற பல காரணங்கள் உள்ளது. ஆனால் மாரடைப்பு வருவதற்கு முன்பே, சில அறிகுறிகள் நமக்கு எச்சரிக்கை மணி அடித்து காட்டிக்கொடுத்துவிடும். உடலில் ஏற்படக்கூடிய அறிகுறிகளை வைத்து, முன்னெச்சரிக்கையாக சரியான நேரத்தில் மருத்துவரை அணுகினால், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தவிர்த்து, உயிர் காக்கலாம்.

மாரடைப்பு வருவதற்கான மிக முக்கிய அறிகுறிகள்: மாரடைப்பு என்றால் இருதயத்திற்கு போகின்ற இரத்த குழாயில், இருதயத்தின் தேவையான இரத்தம் போதுமானதாக இல்லாமல், இரத்த நாளங்களில் அடைப்பு, கொழுப்பு தேங்கி இருத்தல், ஆகிய காரணத்தினால், இருதயம் செயல் இழப்பதால், மாரடைப்பு ஏற்படுகிறது. நீண்ட கால உடல் சோர்வு, அடிக்கடி தலை சுற்றல், இரத்தம் மூளைக்கும் இருதயத்திற்கு குறைவாக செல்வதால், மயக்கம் ஏற்படும், உடல் எடை அதிகரித்தல், காரணம் இல்லாமல் உடல் எடை கூடுதல், குமட்டல், வாந்தி, ஒழுங்கற்ற இதய துடிப்பு, அதிக படபடப்பு, நாள்பட்ட இரும்பல், நீண்ட கால தொடர் இரும்பல், அடிக்கடி கணுக்கால்களில் வீக்கம், தூக்கமின்மை, சீரற்ற இரத்த ஓட்டம், மூச்சடைப்பு, உடல் மேற்பகுதி, இடதுபுறம் கை வலிகள், இடது நெஞ்சு பகுதியில் வலி, மயக்கம், சுவாச பிரச்சனைகள் இருக்கும்.

மாரடைப்பு (Heart Attack):இரத்த நாளங்களில் அடைப்பு, மற்ற நோயினால் சீரான இரத்த ஓட்டம் செல்லாமல் இருப்பதாலும், இதய தசைகள் வீக்கமடைந்து, மார்பு பகுதியில் மிகுந்த வலி ஏற்படுகின்றது. ஆரம்ப புள்ளியாக, இந்த நெஞ்சு வலி இடது மார்பில் தொடங்கி, இடது தோள்பட்டை, மற்றும் இடது கை முழுவதிலும் வலி இருக்கும். முதல் அறிகுறியாக, மூச்சு விடமுடியாமல் இறுக்கமாகவும் (Tightness in chest), மிகுந்த அழுத்தம், போன்றவை நடு நெஞ்சிலிருந்து ஆரம்பித்து, இடது தோள்பட்டை, இடது கை முழுவதும் கீழ் நோக்கி வலி பரவும். ஆரம்ப கட்டமாக நெஞ்சு வலியில் ஆரம்பித்து, வாந்தி, மயக்கம், குமட்டல், அதிகம் வியர்க்கும், மற்றும் உயர் இரத்த அழுத்தம், அதிர்ச்சியான சம்பவத்தை கேட்கும்போதும், நீரழிவு நோய், தொடர்ச்சியாக மன அழுத்தம் போன்ற பிற காரணங்களும், அறிகுறிகளும் காணப்படும். எந்த காரணத்தை கொண்டும் கழுத்து அசைவினால் நெஞ்சு வலி ஏற்படாது. நெஞ்சில் வலி ஆரம்பித்து, இடது கை வரை வலி பரவும், இதுவே மாரடைப்பு (Heart Attack) வருவதற்கான முக்கிய அறிகுறியாகும்.

கழுத்து வலி (Cervical-Neck Pain): கழுத்து வலி என்பது ஆரம்ப புள்ளியாக, கழுத்தின் பின் பகுதியிலிருந்து ஆரம்பித்து, இடது கை முழுவதும் இருக்கும். கழுத்து எலும்பு இடையே இருக்கும் டிஸ்க் (Disc) அழுத்தம் கொடுப்பதால் இந்த வலி வருகின்றது. மேலும் ஒரே பக்கவாட்டில் தூங்குவது, நீண்ட நேரம் கணினியில் அமர்ந்து வேலை பார்ப்பது, கழுத்திற்கு எந்த வித அசைவும் இல்லாமல் வேலை பார்ப்பது, இரவில் தூங்கும்போது 2 தலையணையை வைத்து படுத்துக்கொள்வது போன்ற மற்ற காரணங்களும் உண்டு. கழுத்தின் பின் பகுதியில் ஆரம்பித்து கடுகடுவென்று வலி இடது கைக்கு இறங்கும். இடது கையில் பலவீனம், மரமரப்பு, கைகளில் வலியுடன் கூடிய எரிச்சல் இருக்கும். கழுத்து, தோள்பட்டை, இடது கை அழுத்தும்போது, வலி ஏற்பட்டால், நிச்சயம் இது கழுத்து நரம்பினால் வரக்கூடிய வலி என்று கண்டறியலாம்.

வலியின் ஆரம்ப புள்ளியை வைத்து கண்டறியலாம்:இரண்டு விதமான வலிகள் வரக்கூடிய ஆரம்ப புள்ளியை வைத்து மாரடைப்புக்கான (Heart Attack) அறிகுறியா, அல்லது கழுத்து (Cervical-Neck Pain) வலியினால் ஏற்படக்கூடிய வலியா? என்பதை வைத்து நாம் எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும். அப்படி கண்டுபிடிக்க முடியாதவர்கள், கால தாமதம் இன்றி மருத்துவரை அணுகி நோய்க்கான சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளவது நல்லது. நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். நன்றி!
-
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்! -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா?












Click it and Unblock the Notifications