நைட்ல தூக்கம் வராம புரண்டு புரண்டு படுக்குறீங்களா! இந்த 7 விஷயம் ரொம்ப முக்கியம்
சென்னை: இரவு நேரத்தில் 8 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குகிறீர்களா, அப்படியென்றால் ஆபத்து உங்களுக்கு லைன் கட்டி வருகிறது என்பது அர்த்தமாகும். உங்கள் தூக்கத்தை எப்படி அதிகரிப்பது தெரியுமா?
தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது. எதுவாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்தான். அது போல் தூக்கமும் கட்டாயம் ஒரு மனிதன் 8 மணி நேரம் தூங்க வேண்டும். அதற்கு மேல் தூங்கினாலும் உடல் எடை அதிகரிக்கும். சோம்பேறித்தனம் உண்டாகும்.

மேலும் அந்த 8 மணி நேர தூக்கம் குறைந்தாலும் ஆபத்துதான். தூக்கம் இல்லாவிட்டால் தேவையற்ற நோய்கள் வரும். உதாரணமாக ஒரு நாளொன்றுக்கு 8 மணி நேரம் தூங்காவிட்டால் பல்வேறு நோய்கள் ஏற்படும்.
நீரிழிவு நோய், எடை அதிகரித்தல், பக்கவாதம், மாரடைப்பு, மன உளைச்சல், உயர் ரத்த அழுத்தம், குழப்பமான நிலை ஆகியவை உண்டாகும். இது போன்ற வியாதிகள் உங்களை அண்டாமல் இருக்க வேண்டும் என்றால் இதையெல்லாம் செய்து தூக்கத்தை வரவழையுங்கள். இதற்கான வழிகளை டாக்டர் விஜய் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
1. இருட்டாக இருக்கும் போது உங்கள் மூளையிலிருந்து ஒரு சிக்னல் வெளியேறி தூக்க சுரப்பியான மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்கும். மெலடோனின் உங்களை தூங்க வைக்கும், இரவில் மட்டும் இந்த சுரப்பி அதிகரிக்கும், பகல் நேரத்தில் இது குறைந்திருக்கும். எனவே டிவி, செல்போன் பார்ப்பதையும் விளக்குகள் எரிவதையும் தவிர்க்க வேண்டும்.
2. உங்கள் உடல் வெப்பநிலையை குறையுங்கள். தூக்கத்திற்கு செல்வதற்கு 1 அல்லது 2 மணி நேரத்திற்கு முன்பு போதுமான நீர்ச்சத்து உங்கள் உடலில் இருக்கிறதா என்பதை கண்டறியுங்கள். இரவு நேரத்தில் உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள், இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே உட்கொள்ளுங்கள். குறிப்பாக மாமிசம், எண்ணெய் பொருளை தவிருங்கள்.
3. தூங்குவதற்கு 1 அல்லது 2 மணி நேரத்திற்கு முன்பு வெந்நீரில் குளித்துவிட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும். இதை பல ஆய்வுகள் சொல்லியுள்ளன. இது ஏன் தெரியுமா. சுடுநீர் உங்கள் கால்களுக்கும் கைகளுக்கும் ரத்த ஓட்டத்தை தூண்டும். இதனால் உடலில் வெப்பம் வெளியேற உதவும். வெப்பநிலை குறைந்திருந்தால் தூக்கம் நன்றாக வரும்.
4. தூங்குவதற்கு முன்பு அதிக திறனுடைய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம். தூங்குவதற்கு உங்கள் உடல் ரிலாக்ஸாக இருக்க வேண்டும். நல்ல தூக்கம் வர குறைந்த இதய துடிப்பு, உடல் வெப்பம் தேவை. எனவே தூங்குவதற்கு 3 அல்லது 4 மணி நேரத்திற்கு முன்பு இதையெல்லாம் செய்ய வேண்டாம்.
5. காப்பி குடிப்பதை தவிருங்கள். காப்பி தூக்கம் வருவதை தடுக்கும். அது மூளையை சுறுசுறுப்பாக்கும். உங்கள் உடலைவிட்டு காப்பி வெளியேற 10 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே தூங்குவதற்கு முன்பு காபி குடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். 8 மணி நேரம் தூங்கினால் 2 கப்புக்கு மேல் காபி குடிப்பதற்கான பலனை அதிகரிக்கும்.
6. தூங்குவதற்கு 1 முதல் 2 மணி நேரத்திற்கு முன்பு வேலை செய்தல், உடற்பயிற்சி செய்தல், டிவி பார்த்தல், சோசியல் மீடியாவை பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளை நிறுத்துதல் வேண்டும்.
7. தூங்குவதற்கு முன்பு சாப்பிடுவதை நிறுத்துங்கள். இப்படி சாப்பிட்டால் ஜீரணிக்கும் போது உங்கள் உடல் வெப்பம் அதிகரிக்கும். இதனால் தூக்கம் கெடும். எனவே தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications