"சூப்பர் புட்ஸ்.." உடல் எடை குறைக்க முடியாமல் திணறுகிறீர்களா.. இதை சாப்பிடுங்க போதும்! ரொம்பவே ஈஸி
உடல் எடை குறைப்பிற்குச் செய்ய வேண்டிய காரியங்களை விரிவாகப் பார்க்கலாம்,
சென்னை: ஹார்மோன் உற்பத்தி தொடங்கி திசுக்கள் வளர்ச்சி வரை வயதாகும் போது மாறுவதால்... 40 வயதைக் கடந்த பிறகு உடல் எடையைக் குறைப்பது கடினமாகிறது. அப்போது உடல் எடையைக் குறைக்க என்ன செய் வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் முக்கிய பிரச்சினையாகவே இருக்கிறது. இதனால் உடல் எடையை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.
இருப்பினும், உடல் எடையைப் பராமரிப்பது எளிதான காரியம் இல்லை. அதிலும் 40 வயதை தாண்டிய பிறகு நமது வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறிவிடும் முன்பு இருந்ததை போல நம்மால் இருக்க முடியாது.

உடல் எடை
நம் அனைவருக்கும் உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவோம். இருப்பினும், குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு எடையைக் குறைப்பது ரொம்பவே கஷ்டமாகிவிடுகிறது. இதற்கு நாம் காரணம் இல்லை. உடலில் ஏற்படும் சில குறிப்பிட்ட மாற்றங்களே இதற்குக் காரணமாகும். நமது உடல் எப்போதும் ஒரே போல இருப்பதில்லை. நாம் வளர வளர உடலும் மாறுகிறது. காலப்போக்கில் உடலில் மாற்றங்கள் ஏற்படும். இது வேலை செய்யும் திறன், சகிப்புத்தன்மை, உடல் செயல்பாடு என அனைத்தையும் மாற்றுகிறது.

40 வயது
ஹார்மோன் உற்பத்தி தொடங்கி திசுக்கள் வளர்ச்சி வரை வயதாகும் போதும் மாறுவதால் 40 வயதைக் கடந்த பிறகு உடல் எடையைக் குறைப்பது கடினமாவதற்கும் இதுவே காரணம்... அப்போது நமது உடல் தசை பலம் இழக்கத் தொடங்குவதும் இதற்குக் காரணம். ஆனால், அதற்காக 40களுக்கு பிறகு எடையைக் குறைக்கவே முடியாது என்று அர்த்தம் இல்லை.. கொழுப்புகளைக் குறைத்து, உணவுப் பழக்கத்தை மாற்றினால் 40களுக்கு பிறகும் உடல் எடை குறைப்பு சாத்தியமான ஒன்றே ஆகும். எடை இழப்பிற்கு, வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பழங்கள்
பழங்களில் கலோரிகள் குறைவாக இருந்தாலும், தாதுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே, கலோரிகள் பற்றி அதிகம் சிந்திக்காமல் பழங்களை உண்ணலாம். இது நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதன்படி பெர்ரி பழங்கள் சாப்பிடலாம். பெர்ரி அளவில் பொதுவாகச் சிறிதாக இருக்கும்.. ஆனால் அதில் இருந்து ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.. அதில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி, அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரிகள் என அனைத்தும் நல்லதுதான்.. தினசரி பெரிக்களை சாப்பிட்டால் எடை இழப்பை விரைவுபடுத்த முடியும்.

நட்ஸ்கள்
நட்ஸ்களில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளன.. இவை ஆரோக்கியமற்ற கொழுப்புகளுடன் வரும் கலோரிகளை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகின்றன. ஆரோக்கியமான உணவுகள் என்றால் நட்ஸ்களை தவிர்க்கவே முடியாது. அதேபோல வயிற்றை விரைவாக நிரப்பும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த உணவே நீண்ட நேரம் நமது பசியைத் தள்ளிப்போட்டால்... அது பெரியளவில் எடை குறைப்பிற்கு உதவும்.

அவகோடா
அவகோடா பழத்தில் குறைந்த கலோரிகள் உள்ளன.. எனவே, அவகோடா பழங்களை அதிகமாகச் சாப்பிட்டாலும் கூட உடல் எடை இழப்பில் எந்தவொரு பிரச்சினையும் வராது. அவகோடா பழத்தில் ஏகப்பட்ட சத்துக்களும் உள்ளன.. சூப்பர் சுவையும் உள்ளது. அவகோடா பழத்தைத் தினமும் சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்துகிறது, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் எடை குறைப்பும் ஈஸியாகிறது.

வாழ்க்கை முறை
இதுபோன்ற எளிய உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி உடல் எடையை ஈஸியாக குறைக்கலாம். மேலும், 40 வயதை கடந்து விட்டால் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வரும். சரியான நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும். இரவு நீண்ட நேரம் தூங்காமல் முழித்துக் கொண்டிருக்கக் கூடாது. லேட் நைட்டில் அதிகப்படியான உணவுகளைச் சாப்பிடக் கூடாது. இதுபோல வாழ்க்கை முறையில் நாம் கொண்டு வரும் மாற்றங்களும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.












Click it and Unblock the Notifications