Insulin leaves: நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை குறைக்கும் இன்சுலின் இலை சட்னி! செய்வது எப்படி?
சென்னை: நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் இலைகளைக் கொண்டு, ஒரு சுவையான சட்னியைத் தயாரிக்கலாம். இதை யாரெல்லாம் சாப்பிடலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இன்சுலின் இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்படும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. ஆனால், அதே இலைகளை சட்னியாகச் செய்யும்போது சுவை கூடி, நீரிழிவைக் கையாள்வதற்கு இது ஒரு சிறந்த வழியாக அமைகிறது. நீரிழிவு நோயாளிகள் மட்டுமே இந்த சட்னியைச் சாப்பிடுவது நல்லது.

தேவையான பொருட்கள்
இன்சுலின் இலைகள் - 15, பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 1, சுவைக்கேற்ப உப்பு, சீரகம் - 1 தேக்கரண்டி, பூண்டு பற்கள் - 3, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி, கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - 2 கொத்து.
செய்முறை: முதலில், இன்சுலின் இலைகள் மற்றும் மிளகாயை நன்கு கழுவி, காம்புகளை நீக்கி வைக்கவும். ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் இன்சுலின் இலைகள், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதக்கிய இந்த கலவையை, உப்பு, சீரகம், பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலையுடன் சேர்த்து மைய அரைக்கவும். சட்னி மிகவும் கெட்டியாக இருந்தால், தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கலாம்.
பிறகு, மீதமுள்ள 1 தேக்கரண்டி நல்லெண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இந்தத் தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இன்சுலின் இலைகளால் செய்யப்பட்ட இந்தச் சட்னி, நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு சிறந்த உணவாகும்.
முக்கிய குறிப்பு: இந்த சட்னி நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமே ஏற்றதாகும். நீரிழிவு இல்லாதவர்கள் இதை அதிகமாக உண்ணக் கூடாது. நீரிழிவு உள்ளவர்களும் அளவோடு மட்டுமே சாப்பிட வேண்டும். வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள், மருத்துவரை கலந்து ஆலோசித்த பின்னரே இதை உட்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்னியை செய்து சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். இது பொதுவாக இன்சுலின் இலைகளின் குணாதிசயத்தை பற்றியது என்பதால் உங்கள் உடல்நிலைக்கு இந்த சட்னி சாப்பிடலாமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications