ரேஷன் அரிசியில் இட்லி புசு புசுனு சாஃப்ட்டா வரணுமா? ஈஸி டிப்ஸ்! மெஷர்மென்ட்தான் முக்கியம்!
சென்னை: காசு கொடுத்து வாங்கும் அரிசியில் மட்டும்தான் இட்லி பஞ்சு பஞ்சாக வரும் என நீங்கள் நினைத்தால் தவறு. ரேஷன் கடைகளில் வாங்கும் இலவச அரிசியிலும் சூப்பராக இட்லிகளை தயாரிக்கலாம். என்ன ஒன்று அளவுதான் முக்கியம்! அது தெரிந்தால் போதும்!
தென்னிந்தியாவில் பெரும்பாலானோருக்கு பிடித்தமான உணவு- இட்லிதான். இதுதான் எளிதில் ஜீரணமாகும் என்பதால் இதை விரும்பி உண்கிறார்கள். இந்த இட்லிக்கு சட்னி, சாம்பார், இட்லி பொடி உள்ளிட்டவைகளை தொட்டு சாப்பிடலாம்.

குழந்தை பிறந்தவர்கள், நோய் வாய்பட்டவர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புபவர்கள், 3 வயது்குள்பட்ட குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு இட்லிதான் ஜீரணத்தை கொடுக்கும் நல்ல உணவு.
இப்படிப்பட்ட இட்லி இன்று பல விதமாக தயார் செய்யப்படுகின்றன. காஞ்சிபுரம் இட்லி, பொடி இட்லி, மினி இட்லி, வெஜிடபிள் இட்லி, ஸ்டஃப்டு இட்லி என நிறைய இருக்கின்றன. என்னதான் இட்லி எல்லோருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும் அது கல் போல் இருந்தால் யாருக்கும் பிடிக்காது. மெத்து மெத்தென பஞ்சு போல் இருக்க வேண்டும்.
இந்த இட்லிக்கு மாவை அரைக்க காசு கொடுத்து நிறைய பேர் அரிசி வாங்குகிறார்கள். அந்த அரிசியை பயன்படுத்தினால்தான் பஞ்சு போல் இட்லி வரும் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் ரேஷன் அரிசியில் கூட பஞ்சு போல் இட்லி செய்யலாம். அதுவும் கிரைண்டரில் அரைக்காமல் மிக்ஸியிலேயே அரைக்கலாம்.
இது எப்படி என்பதை பார்ப்போம். நான்கு பங்கு ரேஷன் புழுங்கல் அரிசியை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அது போல் ஒரு பங்கு பச்சரிசியை எடுத்து கொள்ளலாம். இவற்றை சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதற்கு ஒன்னேகால் பங்கு முழு வெள்ளை உருட்டு உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து தண்ணீரில் கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு பிரிட்ஜில் உளுந்தை வைத்துவிடுங்கள். முதலில் அரிசியை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு பிரிட்ஜில் இருந்து எடுத்த உளுந்தை ஜாரில் சேர்த்து ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து தெளித்து பந்து போல் வெண்ணெய் போல் வரும் வரை அரைக்க வேண்டும். உளுந்தை அரைக்கும் போது மிக்ஸி சூடு ஆவதற்கு வாய்ப்புள்ளது. எனவே ஐஸ் கட்டிகளை போட்டு அரைக்க வேண்டும்.
பின்னர் மாவில் உப்பு போட்டு கலந்து விடவும். இரவு முழுவதும் புளிக்க விட்டு காலையில் அப்படியே இட்லி ஊற்றி பாருங்கள். இட்லி புசு புசுவென இருக்கு. கல்லு போல் இருக்காது. இதே முறையில் டிரை செய்து அரிசி வாங்கும் காசை மிச்சப்படுத்துங்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications