Beetroot: பீட்ரூட்டில் இத்தனை நன்மைகளா? பீட்ரூட் மால்ட் செய்வது எப்படி? தயிருடன் சாப்பிட்டால் செம!
சென்னை: பீட் ரூட் மால்ட் செய்து வைத்து தேவையான போது ஜூஸ்களில் கலந்து குடிக்கலாம். அந்த பீட் ரூட் மால்ட்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். மேலும் பீட்ரூட்டில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ராஜா ஹனி எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பீட்ரூட் மால்ட் செய்வது எப்படி?
பீட்ரூட் மால்ட் செய்முறை
தேவையான பொருட்கள்
* பீட்ரூட் - 500 கிராம்
* நாட்டு சர்க்கரை - 500 கிராம்
* பாதாம் - 100 கிராம்
* முந்திரி - 50 கிராம்
* ஏலக்காய் - 6
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:🥔
பாதாம் வறுத்தல்: பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோலை நீக்கிவிட்டு, மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும். முந்திரி மற்றும் ஏலக்காயையும் சேர்த்து வறுத்து, பொடி செய்து வைக்கவும்.
பீட்ரூட் விழுது: பீட்ரூட்டை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
கலவை செய்தல்: ஒரு கடாயில் பீட்ரூட் விழுது மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து, தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு கிளறிக் கொண்டே அல்வா பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
பொடி செய்தல்: வதக்கிய கலவையை ஆற வைத்து, மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
பொடி சேர்த்தல்: முதலில் செய்த பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பயன்படுத்தும் முறை
* பீட்ரூட் மால்ட் பொடியை பாலில் கலந்து குடிக்கலாம்.
* உங்கள் பிடித்த பழச்சாறுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
* தயிர் அல்லது ஓட்ஸ் உடன் கலந்து சாப்பிடலாம்.
குறிப்பு
* இந்த மால்ட் பொடியை காற்றுப்புகாத பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பீட்ரூட் மால்ட்டை உட்கொள்ளலாம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செரிமானத்திற்கு நல்லது
பீட்ரூட் செரிமானத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். இதய ஆரோக்கியம், பல நன்மைகளை அளிக்கும். இதில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை போக்கும். இதில் புரதம், கால்சியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃபோலேட், மாவுச்சத்து, ஜிங்க் உள்ளிட்டவை காணப்படுகின்றன.
பீட்ரூட்டில் பீட்டாலைன்
பீட்ரூட்டில் பீட்டாலைன் என்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. இது சிறுநீரகத்தில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது. இதனால் சிறுநீரக பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதை சாப்பிடும் போது உடலில் உள்ள நச்சுக்கள் நீங்குகிறது.
பித்தப்பை- கல்லீரல்
பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் காணப்படும் நச்சுக்களை நீக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவம் பீட்ரூட் ஜூஸ் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. எனவே பீட்ரூட் ஜூஸ் அருந்துவது உடல் உறுப்புகளைச் சுத்தமடையச் செய்யும். அல்சரால் அவதிப்படுவோரக் பீட்ரூட் ஜூஸில் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.
பீட்ரூட்டில் இரும்புச் சத்து
பீட்ரூட்டில் மிக அதிக அளவு வைட்டமின்களும் இரும்புச்சத்தும் இருப்பதால் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் பீட்ரூட் ஜூஸில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிக்க சுவையுடனும் ஆரோக்கியம் தருவதாகவும் இருக்கும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications