அசைவ பிரியர்களுக்கு ஒரு சூப்பரான சைட் டிஷ்.. நண்டு ஆம்லெட் செய்வது எப்படி? இதோ ரெசிபி
சென்னை: ஆம்லெட் அனைத்து வகையான உணவுகளுக்கும் மிகவும் பழக்கமான மற்றும் பொதுவான சைட் டிஷ் ஆகும். குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும் சைட் டிஷ் இந்த ஆம்லெட். இதில் பிளைன் ஆம்லெட், ஆனியன் ஆம்லெட், மசாலா ஆம்லெட் என பல வகை இருந்தாலும்,வித்தியாசமான சுவையில் நண்டு ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க.
முட்டையில் உடலுக்கு தேவையான ஏ, பி, சி, டி, இ வகையான வைட்டமின்கள் உள்ளது.பற்கள், மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் தாதும் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு இது ஒரு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவாகும்.

நண்டில் பி12 வைட்டமின், கனிமச்சத்துக்களும், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. டயட்டில் இருப்போர் நண்டு சேர்த்துக் கொள்வது நல்லது.
வீட்டில் அசைவ பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான சுவையில் நண்டு ஆம்லெட் செய்து தரலாம். மிகவும் எளியமையான முறையில் வீட்டிலேயே நண்டு ஆம்லெட் செய்யலாம். ரெசிபி மற்றும் செய்முறையையும் பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
முட்டை - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2, சிறிது சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 அல்லது 3, சிறிது மஞ்சதூள், உப்பு தேவைக்கேற்ப, 3 டேபிள் ஸ்பூன் நண்டு கிரேவி.

செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், நறுக்கிவைத்த வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
முட்டையை நன்றாக அடித்து, அதில் உப்பு, மஞ்சள் தூள், வதக்கி வைத்த மசாலா, 3 டேபிள் ஸ்பூன் நண்டு கிரேவி சேர்த்து நன்கு கலக்கவும்.பின்பு வழக்கம் போல் ஆம்லெட் போட்டு இறக்கவும், இப்போ சூடான சுவையான நண்டு ஆம்லெட் ரெடி, காரமாக சாப்பிடவிரும்புவோர் தேவைப்பட்டால் மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். சுவையான நண்டு ஆம்லெட் ரெடி.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications