தொப்பை அசிங்கமா இருக்கா.. டெய்லி காலையில் இதை பண்ணுங்க போதும்.. பட்டு பட்டுனு குறையும் உடல் எடை
சென்னை: உடல் எடையைக் குறைக்க நம்மில் பலரும் முயலும் நிலையில், அந்தப் பயணத்தை விரைவாக்க வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்பெஷல் பானம் இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உடல் உழைப்பு இல்லாமல் போகும் நிலையில், அத்துடன் துரித உணவுகளும் சேர்ந்து கொள்ள அது நமது உடல் எடையைக் கூட்டுகிறது.

உடல் பருமன் என்பது இப்போது நம்மிடையே அதிகரித்து வரும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது. இளைஞர்கள், குழந்தைகளும் கூட உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள்.
எடை குறைப்பு: இதனால் நம்மில் பலரும் ஒரு கட்டத்தில் உடல் எடையைக் குறைக்க முயன்றிருப்போம். இதற்காக கேப் விடாத உடற்பயிற்சி தொடங்கி கடுமையான டயர்ட் வரை அனைத்தையும் முயன்று இருப்போம். இருப்பினும், இதில் அனைவரும் வெற்றி கிடைப்பதில்லை. இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதிகப்படியான எடையைக் குறைத்தே ஆக வேண்டும்.
குறிப்பாக வயிற்றில் இருக்கும் தொப்பையைக் குறைப்பது என்பது ரொம்பவே கடினமான ஒன்றாகும். இருப்பினும், சில குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் தொப்பையை எளிதாகக் குறைக்கலாம். அதில் ஒன்றுதான் இந்த ஸ்பெஷல் பானம். துளசி இஞ்சி என வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தயாரிக்கப்படும் இந்த பானத்தைத் தொடர்ச்சியாகக் குடித்து வந்தால் தொப்பை அப்படியே கரைந்து போகும்.
துளசி: இது குறித்து ஹீலிங் ஃபுட்ஸ் என்ற புத்தகத்தில், "துளசியில் யூஜெனால் என்ற அத்தியாவசிய எண்ணெய் இருக்கிறது. இது மூட்டுகள் மற்றும் செரிமான மண்டலத்தில் நமக்கு உதவுகிறது. மேலும், துளசி என்பது ஒரு டையூரிடிக். இதில் ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றத்திலும் நிறைந்துள்ளது, இது உடலில் ஏற்படும் தேசங்களை வெகுவாக குறைக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து டாக்டர் ஷிகா ஷர்மா கூறுகையில், "காலை நேரத்தில் ஐந்து முதல் ஆறு துளசி இலைகளைத் தண்ணீருடன் சேர்த்துச் சாப்பிட்டால் அது உடலில் இருக்கும் நச்சுத்தன்மை குறைக்கும். உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். மேலும், இவை நமது உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்கவும் பெரியளவில் உதவும்" என்றார்.
இஞ்சி: துளசியைப் போலவே இஞ்சியும் உடல் எடையைக் குறைக்கப் பெரியளவில் உதவும்.. இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற கலவை இருக்கிறது. இது செரிமானத்தைத் தூண்டுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த செரிமானம் மேம்படுத்துகிறது. செரிமானம் மேம்படும் நிலையில், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பையும் இதன் மூலம் அகற்ற முடிகிறது.

எடை குறைப்பு: இதை வைத்து பானத்தை ரெடி செய்வது ரொம்பவே ஈஸி. முதலில் ஐந்து, ஆறு துளசி இலைகள், சின்ன பீஸ் இஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸ் நீரில் இரண்டையும் போட்டு அது பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி, காலையில் எழுந்தவுடன் அதைப் பருகவும்.. உங்களுக்குச் சுவையாக இருக்க வேண்டும் என்றால் அதில் சிறிது தேனையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தினமும் காலையில் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும். அதேநேரம் உடல் எடை குறைப்பு என்பது ஏதோ ஓரிரு வாரங்களில் செய்யக் கூடியது இல்லை. அது ஒரு நீண்ட அதேநேரம் தொடர்ச்சியான ஒரு பயணமாகும். குறைந்த காலத்தில் அதிகப்படியான எடையை இழப்பது என்பது ஆரோக்கியமான விஷயம் இல்லை. எனவே, அதையும் கவனத்தில் கொண்டு உடல் எடையைக் குறைக்கும் பயணத்தைத் தொடருங்கள்.












Click it and Unblock the Notifications