முகம் எப்போதும் பளபளனு இருக்கணுமா.. டெய்லி இதை மட்டும் செய்யுங்க போதும்.. ரொம்ப ரொம்ப ஈஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதும் இளமையாகவே நமது சருமத்தை வைத்துக் கொள்வது ரொம்ப ஈஸி.. இந்த குறிப்பிட்ட பானத்தைத் தொடர்ந்து எடுத்து வந்தால் சருமத்தில் சுருக்கங்களே வராது.

நாம் அனைவரும் எப்போதும் இளமையாக இருக்கவே விரும்புகிறோம். வயதானாலும் கூட எப்படியாவது இளமையாக நம்மைக் காட்டிக் கொள்ளவே விரும்புகிறோம். இவை நமது விருப்பமாக இருந்தாலும் கூட சருமத்தில் வயதாவதற்கான அறிகுறிகள் தெரிந்துவிடும்.

 How to prevent our skin from Anti-Ageing and keep it as Young

இதனால் நம் சருமத்தில் வயதான அறிகுறிகளைத் தாமதப்படுத்த அனைத்து வகையான அழகுசாதனப் பொருட்களையும் நாம் முயல்வோம். ஆனால், உண்மையில் அழகுசாதனப் பொருட்களைத் தாண்டி உணவும் இயற்கை உடன் இருப்பதும் தான் நம்மை இளமையாக வைத்திருக்கும்.

வயதாகும் அறிகுறிகள்: சிக்கலான சிகிச்சைகள், விலையுயர்ந்த அழகுசாதன பொருட்கள் நிறைந்த உலகில், அவற்றைக் காட்டிலும் சில இயற்கையான பொருட்கள் நமக்குக் கூடுதல் பலனைக் கொடுக்கும். அப்படி உடலை எப்போதும் இளமையாக வைத்திருக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு பானம் இருக்கிறது. இந்த பானம் வயதான அறிகுறிகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கும் பல நன்மைகளைக் கொடுக்கிறது.

"ஹெல்த் முக்கியம்.. அது இல்லைனா.." மாணவர்களிடம் சொல்லிவிட்டு.. மேடையிலேயே சரிந்த ஐஐடி கான்பூர் டீன்

நாம் 30 வயதைத் தாண்ட தொடங்கினால், ​​​​நமது சருமம் வயதாகத் தொடங்கும். அது வெளியேயும் தெரிய ஆரம்பிக்கும். கடந்த காலங்களை விட இப்போது நமது சருமம் விரைவாகவே வயதாவதைப் போலத் தெரிகிறது. வாழ்க்கை முறை, உணவு உள்ளிட்டவை இதற்குக் காரணமாகும். இவை எல்லாம் நமது சருமம் வயதாவதை விரைவாக்குகிறது. மேலும், நாம் வெளியே செல்லும் போது வெயிலில் இருக்க வேண்டி இருக்கும். அப்போது உடலும் சருமமும் நீரிழப்புக்கு ஆளாகின்றன.

காரணங்கள்: அப்போது நாம் தேவையான நீரை எடுத்துக் கொண்டால் மட்டுமே பிரச்சினையைத் தீர்க்க முடியும். இல்லையென்றால் நீரிழப்பால் தோல் வேகமாக சுருங்கும்.. அடிக்கடி சருமத்தில் வெடிப்பு உண்டாகும். கொழுப்பு நமது உடலுக்குக் கெடுதல் என்பதே இங்கு பொதுவாக உள்ள எண்ணம். ஆனால், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கு ஒரு அடுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. தோலில் ஈரப்பதம் இருக்கவும் இது உதவுகிறது. ஆனால், நாம் கொழுப்பை முழுமையாகக் குறைக்கும் போது அதுவும் நமது சருமத்தைப் பாதிக்கிறது.

தேவையான பொருட்கள்: இந்த ஒரு பானத்தை எடுத்துக் கொண்டால் நமது தோல் வயதாவதைத் தடுக்க முடியும். இதற்காக நமக்கு சியா விதைகள், வெள்ளரி, புதினா இலைகள், எலுமிச்சை, இஞ்சி, ஏலக்காய் ஆகியவை தேவை.

நன்மைகள்: சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இருக்கிறது. இவை சருமம் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவும். அடுத்து வெள்ளரிக்காய். இதில் இருக்கும் நீர்ச்சத்து உடலுக்குக் கண்டிப்பாகத் தேவை, புதினா இலைகளில் mentol உள்ளது, இது சருமத்தில் ஒரு இனிமையான மற்றும் குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தும். மற்ற பொருட்களிலிருந்து இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சப்படுவதையும் இது உறுதி செய்யும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மென்மையான தோலைத் தருகிறது. இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்ற கலவை அழற்சியைத் தடுக்கும், மேலும், சருமத்தில் சிவத்தல் மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. ஏலக்காய் ஒரு சுவையான மசாலா ஆகும், இது ஆக்ஸிஜனேற்ற சக்தியாகவும் இருக்கும். இது தோலில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கிறது.

பானத்தைச் செய்வது எப்படி: இந்த பானத்தை உருவாக்குவது ரொம்பவே ஈஸி. இதற்கு முதலில் இந்த 6 பொருட்களை ஒரு லிட்டர் தண்ணீரில் போடவும். அடுத்து அதை நல்ல ஷேக் செய்து அப்படியே சில மணி நேரம் விட்டுவிடவும். இதில் இருக்கும் சத்துகள் நீருக்குச் சென்றுவிடும். அதன் பிறகு அந்த நீரை நீங்கள் குடித்துவந்தால் எப்போதும் இளமையைப் பாதுகாக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+