ஆர்வமாக வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்போருக்கு பயனுள்ள டிப்ஸ்!
வீட்டில் செல்ல பிராணி நாய் அல்லது பூனை வளர்ப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
இன்று பல வீடுகளில் குழந்தைகளுக்காக,அல்லது தங்கள் அந்தஸ்துக்காக நாய் வளர்பவர்களை பார்க்கலாம்,
ஆசைக்காக வளர்பவர்களை காட்டிலும்,ஆர்வமாக நாய் வளர்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவே.வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்போர் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளது.அக்கறையுடன் வளர்ப்பதும்,அவற்றிக்கென்றே நேரம் செலவிடவேண்டும்,மேலும் மாறுபட்ட சூழ்நிலையிலும் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.
வெளிநாட்டு நாய்,அல்லது சாதாரண வகை என்றாலும் அவற்றின் வளர்ப்பு முறை அறிந்து வளர்க்கவேண்டும்.வீட்டு சூழ்நிலைக்கேற்ப நாய்களை வாங்கி நல்ல முறையில் அவற்றை பராமரிக்க வேண்டும்.மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உணவு,மாதத்துக்கு ஒரு முறை பூச்சி மருந்து கொடுப்பதுடன், தவறாமல் தடுப்பூசி போடுவது போன்றவற்றை மனதில் கொண்டு,அவற்றை ஆரோக்கியமாக வளர்ப்பது அவசியம் ,ஆர்வமாக வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்போருக்கு பயனுள்ளதாக டிப்ஸ் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

வீட்டில் செல்ல பிராணி வளர்ப்பு:
பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் நாய் அல்லது பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்க்க விரும்புவதுண்டு,செல்ல பிராணிகளை பராமரிக்க சில எளிய டிப்ஸ் பார்க்கலாம்,என்னினும் பயனுள்ள ஆலோசனைகளை பின்பற்றுவதுமட்டுமின்றி,அவை தொடர்ச்சியாக செய்துவரவேண்டும்.அப்படி செய்துவந்தால் மட்டுமே நல்ல பலனை பார்க்கமுடியும்.

பராமரிக்கும் முறைகள்:
செல்ல பிராணிகளை நல்ல சோப்பு கொண்டு கழுவவேண்டும்,அதற்கென்றே தனி மேட் மற்றும் துண்டு, பயன்படுத்தவேண்டும்.அடிக்கடி அந்த மேட், துண்டைபேக்கிங் சோடா பவுடர் கொண்டு கழுவவேண்டும்.இப்படி செய்வதால் துணிகளிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்கும்,ஏனெனில் நாய், வீட்டில் உள்ள பொம்மைகளை கடித்து விளையாடும்போது,பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.எனவே விளையாடும் பொருட்களை வெண்ணீரில் ஷாம்பு போட்டு சிறிது நேரம் ஊறவைத்து,பின் கழுவினால் பாக்டீரியா தொற்றை தடுக்கும்.நாய் வீட்டில் சிறுநீர்,மலம் கழித்த இடத்தை உடனடியாக சுத்தம் செய்ய, வெள்ளை வினிகர் ஊற்றி துடைத்தால் தரையில் கறை படியாது.

Lint Roller
சில நாய்களுக்கு முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும்,அதனால் அடிக்கடி நாயை குளிப்பாட்ட வேண்டும், இல்லையென்றால் அவற்றிள்மேல் துறுநாற்றம் வரும்,இதனால் நோய் தோற்று ஏற்படும்.அதுமட்டுமின்றி, நாய் ரோமங்கள் உதிர்வை தடுக்க,லிண்ட் ரோலர்( Lint Roller ) பயன்படுத்தி ,தேவையற்ற ரோமங்களை நீக்கவும்,இப்படி செய்வதால் நாய் ரோமங்கள் வீட்டில் ஆங்காங்கே இல்லாமல்,வீட்டை சுத்தமாக வைத்திருக்கமுடியும்,நோய் தோற்றிலிருந்து பாதுகாக்கமுடியும்.

பிராண்டட் போவ்ட் (Branded Food)
நாய்களுக்கென்றே பாக்கெட்களில் விற்கப்படும் உணவுகள்,தட்பவெட்ப சூழலில் வளரும் நாய்களுக்காக தயாரிக்கப்படும் உணவுகளையும் கொடுக்கவேண்டும்
நாய் வளர்ச்சிக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பது மிகவும் அவசியம், குறிப்பாகஆரோக்கியமான உணவு வலுவான எலும்புகள்,தோற்றம்,முடியின் வளர்ச்சி மற்றும் அழகாகவும் காணப்படும்.வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவேண்டும்,அவை செரிமான கோளாறுகளை ஏற்படும்.செரித்து வெளியேறாது உள்ளேயே தங்கிவிடும்,அது விஷமாக மாறிவிடும்,எனவே அவை தவிர்க்கவேண்டும்

சுத்தமான குடிநீர் ( Clean Drinking Water )
அவைகள் குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும்,அவ்வப்போது அவை குடிக்கும் தண்ணீர் பாத்திரம் சுத்தமாக இருப்பதாய் பார்த்துக்கொள்ளவேண்டும்,இல்லையெனில் தண்ணீரில் உள்ள தூசி முலம் தொற்று ஏற்படலாம்.எனவே வீட்டில் செல்ல பிராணிகளை நல்ல முறையில் பராமரித்து அவற்றின் ஆரோக்கியம் காப்போம்.












Click it and Unblock the Notifications