குளிர் காலத்தில் உடலுறவு.. நீங்க நினைப்பதை விட ஏகப்பட்ட சிக்கல் இருக்கு! எச்சரிக்கும் மருத்துவர்கள்
சென்னை: உடலுறவு குறித்தும் செக்ஸ் குறித்தும் பல தவறான தகவல்கள் பொதுமக்களிடையே இருக்கிறது. இதற்கிடையே பருவகாலத்திற்கும் உடலுறவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. குறிப்பாகக் குளிர்காலம் என்பது ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உடலுறவு, செக்ஸ் ஆகியவை இந்த 2k கிட்ஸ் மத்தியில் ஓரளவுக்கு பொதுவான விஷயமாக மாறிவிட்டது. ஆனாலும், இன்னும் அதைச் சுற்றியுள்ள விவாதங்கள் பல இந்தியக் குடும்பங்களில் தடை செய்யப்பட்டுள்ளன.

இதனால் பலரும் உடலுறவு குறித்து நண்பர்களிடம் இருந்தே கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். இதனால் பல நேரங்களில் நாம் தவறான உறுதிப்படுத்தாத தகவல்களை நம்பிவிடுகிறோம்.
குளிர் காலம்: குளிர்காலம் தொடங்கும் போது, பலருக்கும் தங்கள் அந்தரங்க வாழ்க்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கும். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் இதனால் பயந்தும் கூடப் போவார்கள். ஆனால், இதில் கவலைப்பட எதுவும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். குளிர்ந்த வெப்பம் என்பது லிபிடோ, அதாவது பாலியல் வேட்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடுகிறார்கள். அதேநேரம் குளிர்காலத்திற்கும் இந்த பாலியல் எண்ணத்திற்கும் இருக்கும் உறவுச் சிக்கலானது என்றும் உடலியல் மட்டுமின்றி உளவியல் காரணங்களும் இதில் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இரண்டையும் பாதிக்கும்: குளிர் காலம் என்பது உடல் மற்றும் மனம் என இரண்டையும் பாதிக்கிறது.. அது பாலியல் ஆசையையும் பாதிக்கிறது. குளிர்காலத்தில் பொதுவாகக் குறுகிய பகலையும் நீண்ட இரவுகளையும் கொண்டு இருக்கும். இது உடலில் மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது. இதனால் உடலில் சோம்பல் ஏற்படும். கூடவே பாலியல் உறவிலும் ஆர்வம் இருக்காது. இது மட்டுமின்றி பொதுவாகக் குளிர் காலத்தில் மக்கள் அதிகம் வீடுகளிலேயே முடங்கி இருப்பார்கள். இதனால் உடல் செயல்பாடுகள் இருக்காது என்பதால் அதுவும் அந்தரங்க வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.
மேலும், குளிர் காலத்தில் ரத்த ஓட்டத்தை முக்கிய உறுப்புகளுக்கு இதயம் திருப்பி விடுகிறது. இதனால் பாலியல் உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. மேலும், குளிர் காலத்தில் பொதுவாகவே நமது மனசு ஏதோ ஒரு மாதிரி இருக்கும். மன அழுத்தம் இருப்பது போலவும், உடலில் எனர்ஜி இல்லாதது போலவும் இருக்கும். இதை ஆங்கிலத்தில் Seasonal Affective Disorder என்கிறார்கள். இதுவும் நமது பாலியல் வேட்கையைக் கடுமையாகப் பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
என்ன செய்யலாம்: அதேநேரம் இந்த சிக்கலைச் சமாளிக்கவும் சில வழிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். குளிர் காலத்தில் முடிந்தவரைச் சூரிய ஒளி உடலில் படுவது போலக் கொஞ்ச நேரம் இருங்கள். மேலும், வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள். வைட்டமின் டி அதிகம் இருக்கும் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதேநேரம் வைட்டமின் டி மாத்திரைகளை எல்லாம் தேவையில்லாமல் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
மேலும், தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள். குளிர் காலத்திலும் முடிந்தவரை ஆக்டிவாக இருங்கள். இது மனநிலையை மேம்படுத்தும்.. மேலும், பாலியல் வேட்கை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், முடிந்தவரை உங்கள் பார்ட்னர் உடன் நெருக்கமாக இருங்கள் என்றும் இதன் மூலம் குளிரைத் தாண்டி தம்பதிகளின் நெருக்கம் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications