Ice Apple: நுங்கு சாப்பிடுங்க பங்கு! பனை கொடுத்த கொடை.. வெயில் கால நோயெல்லாம் வேகமா ஓடிப் போயிடும்!
மதுரை: கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உடல் நீர்ச்சத்து குறைவு, சோர்வு, மயக்கம், செரிமான பிரச்சினைகள் போன்றவை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், இயற்கை கொடுத்த சிறந்த கோடை உணவாக கருதப்படும் நுங்கை சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தரும் என மதுரை அரசு மருத்துவமனை உணவு கட்டுப்பாட்டு பிரிவு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடைக்காலத்தில் வெயிலிலிருந்து உடலை பாதுகாக்க இயற்கை பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை நமக்கு வழங்குகிறது. அந்த வகையில் பனைமரத்தில் கிடைக்கும் நுங்கு கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அதிகரித்து, வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது என டயட்டிசன்கள் விளக்குகின்றனர். நுங்கில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

பனை நுங்கு
குறிப்பாக இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், ஜிங்க் போன்ற முக்கிய கனிமச்சத்துகள் இதில் காணப்படுகின்றன. இவை உடலின் சக்தியை அதிகரித்து, உடல் சோர்வை குறைக்க உதவுகின்றன. மேலும் உடலில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் நுங்கு உதவுகிறது. கோடைக்காலத்தில் வெயிலில் அதிக நேரம் செல்பவர்கள் திடீர் மயக்கம் அல்லது தலைசுற்றல் போன்ற பிரச்சினைகளை சந்திப்பது வழக்கம். அத்தகைய பிரச்சினைகளை தவிர்க்க நுங்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கோடைக்கால நோய்கள்
நுங்கு சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, வெப்பத்தால் ஏற்படும் மயக்கம் போன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு நுங்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிடுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை குறைக்கவும் இது உதவுகிறது. இதனால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சில அசௌகரியங்களை குறைக்க நுங்கு ஒரு நல்ல உணவாக இருக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியம்
அதேபோல், வயிற்று மற்றும் செரிமான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் நுங்கு நல்ல பலன் தரும். இது செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்க உதவுகிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுவதால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது என டயட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். கோடைக்காலத்தில் வெப்பத்தால் தோலில் அரிப்பு, வெப்பக் கொப்பளங்கள் போன்ற பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றன.
மருத்துவர்கள் பரிந்துரை
நுங்கு சாப்பிடுவதால் உடல் வெப்பம் குறைந்து, தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் தன்மை நுங்கில் இருப்பதால், கோடைக்காலத்தில் இதை சாப்பிடுவது மிகவும் அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் கோடைக்காலத்தில் சின்னம்மை போன்ற தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். இந்நேரத்தில் நுங்கு சாப்பிடுவது உடல் வெப்பத்தை குறைத்து, அரிப்பு போன்ற அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
சின்னம்மை
சின்னம்மை ஏற்பட்டிருந்தாலும் அதிலிருந்து விரைவில் மீள நுங்கு உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கும் நுங்கு ஒரு சிறந்த உணவாகும். இதில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் வயிறு விரைவில் நிரம்பிய உணர்வு கிடைக்கிறது. இதனால் அடிக்கடி பசி ஏற்படுவது குறைந்து, உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. கோடைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இயற்கை வழங்கிய சிறந்த பரிசாக நுங்கு கருதப்படுகிறது. தினசரி உணவில் அளவோடு நுங்கை சேர்த்துக்கொண்டால், உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலால் ஏற்படும் பல பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications