மொறுமொறு தோசை vs சுடசுட இட்லி.. சூடாக சாப்பிட்டால் இரண்டும் சூப்பர்தான்! ஆனா உடலுக்கு எது பெஸ்ட்
சென்னை: இப்போது இட்லியும் தோசையும் தான் பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் டிபனாக பரிமாறப்படுகிறது. ஆனால், இரண்டில் எது பெஸ்ட்.. எது நமது உடலுக்கு ஏற்றது என்பதை நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் வீட்டில் இருக்கும் கணவன்- மனைவி என இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள்.. இதனால் வகை வகையாகச் சமைப்பது எல்லாம் வார இறுதியில் மட்டும் தான்.. வார நாட்களில் பெரும்பாலான வீடுகளில் இட்லியும் தோசையும் தான் டிபன்.

ஒரு முறை ஆட்டி வைத்தால் போதும் வாரம் முழுக்க வரும் என்பதால் பெரும்பாலான மக்கள் இட்லியையும் தோசையையும் சாப்பிடவே விரும்புகின்றனர். இரண்டில் எது நமது உடல்நிலைக்கு நல்லது. எது பெஸ்ட் என்பதைப் பார்க்கலாம்.
இட்லி vs தோசை: எங்கு நீங்கள் ஹோட்டலுக்கு சென்றாலும் மெனுவை பார்த்தால் தோசை, மசால் தோசை, நெய் தோசை, ரவா தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம் என வரிசையாகப் பல கொட்டி கிடைக்கும். ஆனால், அதேநேரம் இட்லி பக்கம் பார்த்தால் தனியாக ஏதோ பாவம் போல இருக்கும். ஹோட்டல்களில் நீங்கள் எத்தனை மணிக்குப் போய் கேட்டாலும் சுடசுட தோசை ரெடியாக இருக்கும். ஆனால், இட்லி 8 மணிக்கு மேலே கிடைப்பது கஷ்டம் தான்.
ருசியே பிரதானமாகிவிட்ட இந்தக் காலத்தில் பலரும் தோயையை சாப்பிட விரும்புகிறார்கள். மறுபுறம் எப்போது இங்கு நமக்கு ருசி முக்கியம் என்று ஆனதோ அப்போது முதலே உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கியது. இதனால் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் பார்த்துப் பார்த்தே சாப்பிட வேண்டி இருக்கிறது.
மருத்துவர் விளக்கம்: வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் ஆரோக்கியமானது தான் என்றாலும் இட்லி தோசை ஆகியவற்றில் எது சிறந்தது என்பதை நாம் பார்க்கலாம். இது குறித்து பிரபல மருத்துவர் பால் மணிக்கம் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் முன்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில், "இட்லி அல்லது தோசை இதில் எது சிறந்தது என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். நமது உடலில் இருக்கும் இன்சுலின் தினசரி 150 முதல் 200 கிராம் வரையிலான கார்போஹைட்ரேட்டை கையாள முடியும்..
சராசரி அளவு கொண்ட ஒரு இட்லியில் 6 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும். அதேபோல சராசரி அளவு கொண்ட ஒரு தோசையில் 25 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும். கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதே நமது உடலுக்கு நல்லது.. அதன்படி பார்த்தால் இட்லியைச் சாப்பிடுவதே நல்லது..

எது பெஸ்ட்: அதேநேரம் இது அனைத்து டைம் இட்லிகளுக்கும் இல்லை.. இப்போது புதுசு புதுசாக வகை வகையாக இட்லிகளைச் சொல்கிறார்கள். பொடி இட்லி. நெய் இட்லி, இட்லி டிக்கா எனப் பல வகை இட்லியைச் சொல்கிறார்கள்.
பொதுவாக இட்லி மாவில் மூன்றில் ஒரு பங்கு உளுந்து இருக்க வேண்டும்... மேலும், மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் அரிசி இருக்க வேண்டும்.. ஆனால், இப்போது அரிசி நல்ல பஞ்சு போல இருக்க வேண்டும் என்பதற்காக அரிசியை அதிகம் சேர்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
அதாவது ஒப்பீட்டளவில் பார்த்தால் தோசையைக் காட்டிலும் இட்லி தான் உடலுக்கு பெஸ்ட். அதேநேரம் அதுவும் கூட நெய், எண்ணெய் போன்றவற்றுடன் இணைந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே அவரது கருத்தாகும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications