கன்னாபின்னானு சர்க்கரை நோய் இருக்கா? சீதா பழம் இலை இருக்கே! கசாயம் குடிச்சி பாருங்க! மேஜிக்தான்
சென்னை: கொய்யா இலைகளை போல் வேப்பிலை மற்றும் சீதாப்பழத்தின் இலைகளையும் கசாயம் வைத்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
அந்த காலகட்டத்தில் சர்க்கரை நோயெல்லாம் 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும் என்பார்கள். ஆனால் இந்த கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் வருகிறது. கர்ப்பத்தில் இருக்கும் தாய்க்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் வந்தால் அது சில சமயங்களில் குழந்தையையும் பாதிக்கிறது.

அந்த நிலையில் குழந்தைகள் பலருக்கு சர்க்கரை நோய் இருப்பதும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதும் நாம் தெரிந்த விஷயமே ஆகும். இந்த நிலையில் சர்க்கரை நோய் என்பது காலத்திற்கு மருந்து மாத்திரை சாப்பிடும் நோய் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர்கள் கூறும் போது உடற்பயிற்சி, சரியான வாழ்வியல் முறை, மருந்து மாத்திரைகள், மன அழுத்தம் இல்லாமல் இருத்தல் இருந்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். எந்த பிரச்சினையும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்கிறார்கள். சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாவிட்டால் இதய நோய், சிறுநீரக நோய் உள்ளிட்டவை ஏற்படும்.
இந்த நிலையில் சர்க்கரை நோயை குறைக்க என்ன செய்யலாம் என பலர் இணையத்தில் தேடுவதுண்டு. அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளலாம். இதன் இலைகளில் உள்ள துவர்ப்பு தன்மை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
இந்த இலைகளை பறித்து வந்து கழுவி அதை துண்டு துண்டாக நறுக்கி 4 டம்ளர் நீர் ஊற்றி, அது கொதித்தவுடன் இந்த நறுக்கி வைத்த இலைகளை போட்டு அந்த தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை வைத்து வடிகட்டி குடிக்கலாம். இப்படி தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலனை அளிக்கும்.
அது போல் வேப்பிலையை எடுக்கலாம். துளிர் இலைகளை பறித்து அப்படியே சாப்பிடலாம். இல்லாவிட்டால் கசாயம் வைத்தும் சாப்பிடலாம். இது சர்க்கரை நோயை மட்டும் விரட்டாமல் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது.
அது போல் சீதாப்பழத்தின் இலைகளையும் வைத்து கசாயம் செய்யலாம், அதன் இலைகளை கழுவி பின்னர் சூடான நீரில் போட்டு கொதிக்க விட்டு வடிக்கட்டி குடிக்கலாம். இப்படி ஒரு நாளைக்கு ஒன்று என தினந்தோறும் குடித்து வந்தார் அப்புறம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications