ஃப்ரிட்ஜில் "இதை" மட்டும் வைக்காதீங்க.. ப்ரிட்ஜ்ஜுல தக்காளி இருக்கா? இது தெரியாம போச்சே.. செம டிப்ஸ்
சென்னை: ஃபிரிட்ஜ்ஜில் சில பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. காய்கறிகளை எத்தனை நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம் தெரியுமா? எந்தெந்த காய்கறிகளை ஃபிரிட்ஜ்ஜுக்குள் வைக்கலாம் தெரியுமா?
புதிய காய்கறிகள் முதல் மீதமான உணவுப்பொருட்கள் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து வருகிறோம். ப்ரிட்ஜ்ஜில் வைப்பது ஆரோக்கியமானது இல்லை என்று தெரிந்தும்கூட, இதே தவறுகளைதான் நாம் திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கும்.

ஊட்டச்சத்துக்கள்: ப்ரிட்ஜ்ஜில் வைப்பதால் உணவுப்பொருட்களின் ஊட்டச்சத்துக்களின் தரம் குறைகிறது.. அந்தவகையில், ப்ரிட்ஜ்ஜில் என்னென்ன பொருட்களை வைக்கக்கூடாது தெரியுமா?
எந்தவிதமான மூலிகைகளையும் கீரைகளையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அவைகளின் சத்துகள் முழுவதுமாகவே வீணாகிவிடும். கீரைகளை எப்போது வாங்கினாலும், நீர் நிறைந்த பாத்திரத்தில், தண்டுப்பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்துவிட்டாலே வாடாமல், காய்ந்துவிடாமல் பசுமையாக இருக்கும்.
வாழைப்பழங்கள்: அதேபோல, வாழைப்பழங்களை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி வைப்பதால், அதிலுள்ள சத்துக்கள் முற்றிலுமாக நீங்கிவிடும்.. வெளிச்சமும், காற்றும் வாழைப்பழம் மீது பட்டாலே போதும், வாழைப்பழங்கள் கெடாமல் இருக்கும்.
திராட்சை, அத்தி, பேரீச்சை போன்ற உலர்பழங்களையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. காரணம் அதன் பெயரே உலர்பழங்கள் என்பதால், உலர்ந்த தன்மையுடன் இருக்க, ஃப்ரிட்ஜ்ஜின் குளுகுளு, அப்பழங்களை பாதித்துவிடும். அதேபோல, வைட்டமின் C நிறைந்த பழங்களை வைக்கக்கூடாது. ஆப்பிள்களை 3 வாரங்கள்கூட ப்ரிட்ஜில் வைக்கலாம்.

தக்காளி, வெங்காயம்: அதிகமான குளுகுளு, தக்காளிகளை பாதித்துவிடும்.. தக்காளியின் பளபளப்பும் போய், சுவையும் குறைந்துவிடும். மேலும், பாதி காய்கள் போல தக்காளியை வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால், அந்த காய்கள் பழுக்காமலேயே போய்விடும்.
அதேபோல, உருளைக்கிழங்கு மண்ணிலிருந்துதான் நமக்கு கிடைக்கிறது. அப்படிப்பட்ட கிழங்கை மீண்டும் ஈரப்பதம் நிறைந்த ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது. ஈரம் சேர்ந்துவிட்டால் உருளைக்கிழங்கு கெட்டுவிடும். உருளை என்றில்லாமல், எந்தவகை கிழங்குகளுமே வெளியில் வைத்தால் கெட்டுப்போவது கிடையாது.
நீர்க்காய்கள்: பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற குளிர்ச்சியை தரக்கூடிய காய்களையும் ஃபிரிட்ஜில் வைக்ககூடாது.. சிவப்பு, பச்சை, மஞ்சள் என எந்த மிளகாயையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது...
முட்டைகளை ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் அவைகள் கெட்டுவிடுமாம்... முட்டையிலிருக்கும் கருவும் கெட்டித்தன்மையாகிவிடும். முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது... அத்துடன், உடல் உபாதைகளை தரக்கூடிய சால்மோனெல்லா வகை பாக்டீரியா இந்த முட்டைகளின் ஓடுகளில் நிறையவே உருவாகுமாம். அதனால் முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்கிறார்கள்.
பூண்டு: எந்த எண்ணெய் வகைகளையும், பூண்டு போன்றவற்றையும் வைக்கக்கூடாது.. பூண்டு எப்போதுமே காய்ந்தால்தான் ருசி அதிகமாக இருக்கும்.. மசாலா தூள்கள், காபி தூள், கிரீம்கள், ஜாம்கள், கெச்சப்கள் இவைகளையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. அதேபோல, ஃபிரிட்ஜில் தேன் வைக்கக்கூடாது.. சத்துக்கள் குறைந்து, கெட்டியாகிவிடும்.. பிரெட் வகைகளை ஃபிரிட்ஜில் வைத்தாலும் சத்துக்கள் போய்விடும்..

சாதம் மீதமாகிவிட்டால், ஃபிரிட்ஜில் 2 நாட்கள் வரை மட்டுமே சேமித்து சாப்பிட வேண்டும்.. அதுவும், காற்றுபுகாதபடி சாதத்தை பிரிட்ஜில் சரியாக வைக்க வேண்டும். வேகவைத்த பருப்பையும் 2 நாட்களுக்குள் சாப்பிட்டு முடித்திட வேண்டும்.
டைம் இதுதான்: பழங்கள், பால், சிக்கன், மீன், மட்டன், பால் இவைகள் எல்லாம் 3 நாட்களுக்கு மேல் வைக்கக்கூடாது.. பிரீசர் என்றால், 3 மாதங்களும் கூட வைக்கலாம். ஆனால் சமைத்துவிட்டால், 2 நாட்கள் வரை மட்டுமே டைம்.. அதற்குள் முடித்துவிட வேண்டும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications