தூக்கமின்மை பிரச்சனை இருக்கா? இந்த 5 உணவை சாப்பிடுங்க.. படுத்த 2வது நொடி குழந்தை மாதிரி தூங்குவீங்க
சென்னை: தூக்கமின்மை என்பது இப்போது இளைஞர்களிடையே அதிகரித்துவிட்டது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம் தொடங்கிப் பல காரணங்கள் உள்ளன. ஒருவருக்குச் சரியான தூக்கம் கிடைக்கவில்லை என்றால் அது வாழ்க்கையில் பல வித சிக்கல்களை உருவாக்கும். இதற்கிடையே தூக்கமின்மை பிரச்சினைகளால் அவதிப்படுவோர் என்ன மாதிரியான உணவுகளைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்த மருத்துவர்களின் பரிந்துரையை நாம் பார்க்கலாம்.
முன்பெல்லாம் தூக்கமின்மை என்பது வயதானவர்களுக்கு இடையே ஏற்படும் ஒரு பாதிப்பாகவே இருந்தது. ஆனால், இப்போது இளைஞர்களிடையே கூட தூக்கமின்மை என்பது மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்துவிட்டது. வாழ்க்கை முறை மாற்றம், இரவு நேரங்களில் பணி, உணவு முறை எனத் தூக்கமின்மை பிரச்சினைக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

தூக்கமின்மை
இதனால் இரவு முழுக்க புரண்டு புரண்டு படுக்கும் பலரை நாம் பார்த்து இருப்போம். இதற்கிடையே உணவில் சில வகையான உணவுகளை நாம் சேர்த்துக் கொண்டால் அது நல்ல தரமான தூக்கத்தைக் கொடுக்க உதவும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
புரோபயாடிக்
நாம் உணவில் புரோபயாடிக் உணவுகளைச் சேர்த்துக் கொண்டால் அதுவும் தூக்கத்திற்கு உதவும். புரோபயாடிக் என்பது உயிருள்ள நுண்ணுயிரிகளாகும். அவை உடலுக்கு மிகப் பெரியளவில் நன்மையைத் தருகிறது. இவை குடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளை மேம்படுத்தும். தினசரி 200 மி.கி விகிதம் நான்கு வாரங்களுக்கு புரோபயாடிக்குகளை எடுத்துக் கொண்டால் அது தரமான தூக்கத்திற்கு உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். புரோபயாடிக் உள்ள சில உணவுகள்: தயிர், மிசோ, மோர் மற்றும் புளிக்கவைக்கப்பட்ட பொருட்கள்.
நமது இரைப்பை குடல் பாதையில் சுமார் 100 டிரில்லியன் நுண்ணுயிரிகள் இருக்கும். இதை ஆங்கிலத்தில் gut microbiome எனக் குறிப்பிடுவார்கள். உடலுக்கு நல்லதைத் தரும் இந்த நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்க நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கியமானதாகும்.. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும்.
ப்ரீபயாடிக்
குடல் ஆரோக்கியமானதாக இருந்தாலே நமக்கு நல்ல தூக்கம் வரும். தினசரி உணவில் ப்ரீபயாடிக் உணவுகளைச் சேர்க்கும் போது NREM மற்றும் REM தூக்கம் மேம்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூண்டு, வெங்காயம், வாழைப்பழம், சோயாபீன்ஸ், கோதுமை, தானியங்கள், ரொட்டிகளில் ப்ரீபயாடிக் அதிகளவில் உள்ளன.
சின்பயாடிக்குகள்
அடுத்து சின்பயாடிக்குகள்.. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இணைந்து செயல்படும் புரோபயாடிக்குகள் மற்றும் ப்ரீபயாடிக்குகளின் கலவையாகும். ஃபைப்ரோமியால்ஜியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்ளும் பெண் நோயாளிகள் சின்பயாடிக் உணவுகளை தங்கள் டயட்டில் சேர்க்கலாம். இதன் மூலம் தூக்கமின்மை பிரச்சினையைச் சமாளிக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தயிர், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களில் சின்பயாடிக் அதிகம் இருக்கும்.
போஸ்ட்பயாடிக்குகள்
போஸ்ட்பயாடிக்குகள் என்பதும் ஒரு வகையான நுண்ணுயிரிகள். அவையும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எவ்வளவு நேரம் தூங்கினாலும் சிலருக்கு எழுந்தவுடன் கூட களைப்பாகவே இருக்கும். இந்த சிக்கலைச் சரி செய்து தரமான தூக்கத்திற்கு போஸ்ட்பயாடிக்குகள் உதவும்.
அதாவது ஒட்டுமொத்தமாகப் பார்த்தோம் என்றால் fermented எனப்படும் புளிக்கவைக்கப்பட்ட பொருட்களைச் சாப்பிடும் போது அது நமது குடலுக்கு உதவுகிறது. குடல் ஆரோக்கியமாக இருந்து உணவுகள் முறையாக ஜீரணமானால் அது நல்ல தூக்கத்தையும் தருகிறது. எனவே, அடுத்த முறை சாப்பிடும் போது எண்ணெய் குறைவாகவும் புளிக்கவைக்கப்பட்ட பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் குழந்தை போலப் படுத்தவுடன் தூக்கம் வரும்.!
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால்.. உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications