இந்தியா கழிப்பறை vs வெஸ்டர்ன் டாய்லெட்..உண்மையில் இரண்டில் எது சிறந்தது? நீங்க எதிர்பார்க்காத பதில்
சென்னை: கழிப்பறைகள் குறித்து நாம் பெரும்பாலும் சிந்திப்பதில்லை என்றாலும் நமது தினசரி வாழ்க்கையில் அது ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. நமது நாட்டில் இப்போது இந்தியக் கழிப்பறை, வெஸ்டர்ன் டாய்லெட் என இரண்டும் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கிறது. உண்மையில் இந்த இரண்டில் எது சிறந்தது.. இரண்டிற்குமான வேறுபாடுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
கழிப்பறை என்றாலே பலரும் முகம் சுளித்தாலும் கூட அது நமது வாழ்க்கையில் ஒரு அத்தியாவசிய அங்கம். அவை உடல்நலனில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி பெரும்பாலானோர் சிந்திப்பதில்லை. இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியக் கழிப்பறைகள் மட்டுமே இருக்கும். ஆனால், இப்போது வெஸ்டர்ன் டாய்லெட்களையும் கணிசமாகப் பார்க்க முடிகிறது.

இந்தியா கழிப்பறை vs வெஸ்டர்ன் டாய்லெட்
இந்தியக் கழிப்பறைகளில் நாம் உட்காரும் நிலை மலம் கழிப்போம் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரம் வெஸ்டர்ன் டாய்லெட்கள் தான் பயன்படுத்த, குறிப்பாக வயதானவர்களுக்கு, வசதியானதாக இருக்கும். இந்த இரண்டில் எது உடலுக்கு நன்மை தரும்.. வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை யாருக்கு எது சரியானதாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் போது, குடல்கள் இயற்கையாகவே சரியான நிலையில் அமைந்து, சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. இதனால் மலச்சிக்கல் குறைந்து, மூலநோய் வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது. ஆனால் மேற்கத்தியக் கழிப்பறைகளில் நேராக அமர்வதால், குடல் இயக்கம் முழுமையாக இருக்காது.
எது சவுகரியமானது?
அதேநேரம் சவுகரியம் எனப் பார்த்தால் அதில் வெஸ்டர்ன் டாய்லெட் தான் சிறந்தது. இந்தியக் கழிப்பறைகளில் அமர்வது வயதானவர்களுக்கு, முழங்கால் வலி உள்ளவர்களுக்குக் கஷ்டமாக இருக்கும்.. மறுபுறம் மேற்கத்தியக் கழிப்பறைகள் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் எளிதாக இருக்கும்.
சுகாதாரத்தில் (HYGIENE) இந்தியக் கழிப்பறைகள் சிறந்து எனச் சொல்லலாம். ஏனென்றால் இந்தியக் கழிப்பறைகளில் இருக்கையுடன் நமக்கு நேரடித் தொடர்பு இருக்காது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் குறைவு. ஆனால் இந்தியக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது கடினம். மேலும், ஓப்பீட்டளவில் நீரும் அதிகும் செலவாகும். மேற்கத்தியக் கழிப்பறைகள் வசதியானவை என்றாலும் இருக்கையுடன் தொடர்பு இருப்பதால் ஹெல்த் பாதிப்புகள் உள்ளன. அதேநேரம் சுத்தம் செய்வதும் ஈஸி.!
உடல்நிலை
இந்தியக் கழிப்பறைகளில் நீண்ட நேரம் அமர்வது முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.. மறுபுறம் மேற்கத்திய கழிப்பறைகளில் நீண்ட நேரம் அமர்ந்தால் மூலநோய் அல்லது இடுப்புப் பகுதியில் அழுத்தம் ஏற்படலாம்.
இந்தியக் கழிப்பறையை அமைக்கக் குறைவான இடமே தேவைப்படும். அதை அமைக்க ஆகும் செலவும் குறைவு. அதேநேரம் மேற்கத்திய கழிப்பறைகளுக்கு அதிக இடம் தேவைப்படும்.. அதை அமைக்கவும் அதிகம் செலவாகும். இருப்பினும், வசதி காரணமாக இப்போது பலரும் வெஸ்டர்ன் டாய்லெட் பக்கம் செல்கிறார்கள்.
எது சிறந்தது
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது எந்தக் கழிப்பறை சிறந்தது என்ற கேள்விக்கு ஈஸியான பதில் இல்லை. இது ஒருவரது வயது, ஆரோக்கியம் மற்றும் வசதியைப் பொறுத்து மாறும். இந்தியக் கழிப்பறைகள் சிறந்த செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும். மேற்கத்திய கழிப்பறைகள் வயதானவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். எனவே, பல சுகாதார வல்லுநர்கள் இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றனர்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications