RO தண்ணீரால் ஆபத்து? நீரின் எல்லா சத்துகளுமே போய்விடுமாம்.. மருத்துவர்கள் சொன்ன மிக முக்கிய தகவல்
டெல்லி: குடிநீரை நமக்குச் சுத்தப்படுத்தித் தரும் ஆர்ஓ முறை தான் பிரபலமாக இருக்கிறது. இருப்பினும், இந்த ஆர்ஓ தண்ணீரை நாம் குடிக்கும் போது அது உடலில் சில பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் எனப் பலரும் சொல்கிறார்கள். இது உண்மை தானா.. இதனால் உடலில் எதாவது சிக்கல் ஏற்படுமா என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இன்றைய காலகட்டத்தில் இந்தியக் குடும்பங்களில் கேஸ் அடுப்பு, பிரிட்ஜ்களுக்கு இணையாக வாட்டர் பியூரிஃபையர் எனப்படும் நீர் சுத்திகரிப்பானும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. இப்போது எல்லாம் பெருநகரங்களில் அனைத்து வீடுகளிலும் இந்த வாட்டர் பியூரிஃபையர்களை நம்மால் பார்க்க முடிகிறது.

RO தொழில்நுட்பம்
அதில் குறிப்பாக RO தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் வாட்டர் பியூரிஃபையர்களே மிகவும் பிரபலமானது. அது குடிநீரில் உள்ள அசுத்தங்கள், மைக்ரோ உலோகங்கள் உள்ளிட்ட மாசுகளை அகற்றி, தண்ணீரைக் குடிக்கப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. இருப்பினும், RO சுத்திகரிப்பு முறையில் நீரில் உள்ள நன்மை தரும் தாதுகளும் நீக்கப்படுவதாகவும் அது சில எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பல ஆண்டுகளாகச் சந்தேகங்கள் உள்ளன. அதாவது RO நீர் அருந்துவது தாதுப் பற்றாக்குறை அல்லது எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்று பலரும் கவலைப்படுகின்றனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
பிரச்சனை இல்லை
RO வடிகட்டுதல் சில தாதுகளைக் குறைக்கலாம் என்றாலும், பெரும்பாலானவர்களுக்கு இது ஒரு பெரிய உடல்நலப் பிரச்சனையை உருவாக்குவதில்லை.. குறிப்பாக அவர்கள் சீரான மற்றும் சத்தான உணவைப் பின்பற்றும்போது இது எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
RO நீர் சுத்திகரிப்பு முறையில் பாக்டீரியா, வைரஸ்கள், கரைந்த உப்புகள், நீரில் உள்ள உலோகங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் அசுத்தங்கள் நீக்கப்படும். இதற்காகத் தண்ணீரை semi-permeable membrane வழியாகச் செலுத்துவார்கள். நிலத்தடி நீரில் அதிக அளவு மாசு இருக்கும். அதுபோன்ற இடங்களில் குடிநீர் தரத்தை மேம்படுத்துவதில் இந்த செயல்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
வடிகட்டும் முறை
இந்த semi-permeable membrane தண்ணீரைச் சுத்தமாக வடிக்கட்டிவிடும். ஆனால், அதற்கு மாசு மற்றும் சத்துகளுக்கு இடையே வித்தியாசம் தெரியாது. மாசையும் வடிகட்டும். கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சில இயற்கையான தாதுகளை வடிகட்டும். அதாவது ஆர்ஓ செயல்முறை, தண்ணீரை மாசு இல்லாத ஒன்றாக மட்டும் மாற்றாது. மாறாகச் சத்து இல்லாத ஒன்றாகவும் மாற்றிவிடும்.. இது "அதிகப்படியான தூய்மை" காரணமாகவே RO நீரை ஆரோக்கியமற்றது எனப் பலரும் கருதுகிறார்கள்.. இருப்பினும், வல்லுநர்கள் கருத்து இதில் வேறு விதமாக இருக்கிறது.
RO முறை தாதுகளை நீக்கினாலும் கூட அந்த தாதுகளை நம்மால் பிற உணவுகளில் இருந்து ஈஸியாக எடுத்துக் கொள்ள முடியும். நமது உடலுக்குத் தேவையான தாதுகளில் மிகச் சிறிய பகுதி மட்டுமே குடிநீர் மூலம் கிடைக்கிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் பெரும்பாலானவை நாம் தினமும் உண்ணும் உணவுகளிலிருந்து கிடைக்கின்றன. எனவே, ஆர்ஓ நீரினால் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பது தவறான பார்வை என்கிறார்கள் மருத்துவர்கள்.!
உணவுகள்
தண்ணீர் மூலம் நமக்கு மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுகளை எளிதாக உணவில் இருந்தே பெறலாம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரத ஆதாரங்கள் அடங்கிய சீரான உணவை ஒருவர் எடுத்துக் கொண்டால், அவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
பால், தயிர், பனீர் போன்ற பால் பொருட்கள் மூலம் கால்சியம் சத்து தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.. ராகி (கேழ்வரகு), எள், பாதாம் மற்றும் கீரை வகைகளும் நமக்கு சிறந்த ஆதாரங்களாகும். வலுவான எலும்புகள் மற்றும் பற்களைப் பராமரிப்பதில் கால்சியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்துடன் நரம்பு மற்றும் தசை செயல்பாட்டையும் ஆதரிக்கிறது.
கவலை வேண்டாம்
மெக்னீசியம் நிறைந்த உணவுகளில் பூசனி விதைகள், முந்திரி மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் முக்கியமானவை. ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்கள், பருப்பு மற்றும் கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகள், மற்றும் பச்சைக் கீரை வகைகளும் மெக்னீசியத்தை வழங்குகின்றன. பொட்டாசியம் நிறைந்த உணவுகளாக வாழைப்பழம், இளநீர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பயறு வகைகள், பீன்ஸ் மற்றும் கீரை வகைகள் ஆகியவை உள்ளன. பொட்டாசியம் நீரின் சமநிலையை ஒழுங்குபடுத்தவும், இதயச் செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. எனவே, ஆர்ஓ தண்ணீரால் சத்துக்கள் போகும் என்ற கவலை வேண்டாம்!
எலக்ட்ரோலைட்
அதேபோல உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பாதிக்கக்கூடும் என்ற மற்றொரு கவலையும் இருக்கிறது. இருப்பினும், பெரும்பாலான நபர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை என்று டாக்டர் நந்தா விளக்குகிறார். நமது உடலில் சிறுநீரகங்கள், ஹார்மோன்கள் மற்றும் உணவு எனச் சிக்கலான முறை மூலமாகவே எலக்ட்ரோலைட் பராமரிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்களும் உணவு மூலமாகவே பிரதானமாகக் கிடைப்பதால் ஆர்ஓ தண்ணீர் அதற்குக் காரணமில்லை.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்.. ஆம் ஆர்ஓ முறை தண்ணீரில் இறுக்கும் சத்துகளையும் சேர்த்தே வடிகட்டுகிறது. இருப்பினும், அதனால் நமது உடலுக்கு எந்தவொரு பிரச்சினையும் வந்துவிடாது. அதையும் தாண்டி ஆர்ஓ முறை நமது குடிநீரைப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மாசுக்களை அகற்றுகிறது. இது ஒட்டுமொத்த நலவாழ்வுக்கு அத்தியாவசியமானது. எனவே, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஆர்ஓ வாட்டர் பாதுகாப்பானதாகவே இருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications