காராமணியின் ஆரோக்கிய நன்மைகள்.. நீரிழிவு நோயாளியின் வரப்பிரசாதம்! கேன்சரை விரட்டும் ஹெல்த்தி காராமணி
சென்னை: பயிறுகளில் பலவகை இருந்தாலும், காராமணியின் பயன்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.. வலுவான உடலுக்கும், நிம்மதியான தூக்கத்துக்கு உதவும் காராமணியின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பயத்தங்காய் , தட்டைப்பயிறு என்றெல்லாம் அழைக்கப்படும் காராமணி, அவரை வகையை சேர்ந்தது.. அதனால்தான் பார்ப்பதற்கு பீன்ஸ் போலவே இருக்கும்... ஆனால், சற்று நீண்டு, மெலிதாக, உள்ளே பருப்புகளை கொண்டிருக்கும். இந்த பருப்பைதான் காராமணி என்கிறோம்.

சத்துக்கள்: கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரோட்டீன் சத்துக்கள் இந்த காராமணியில் உள்ளதால், கல்லீரல் பிரச்சனைகள் நம்மை நெருங்குவதில்லை... இதனால் மஞ்சள் காமாலை நோய்களும் முளையிலேயே தடுக்கப்படுகின்றன..
காராமணியில் காணப்படும் வைட்டமின் B1 (தயாமின்) இதய நலத்தின் மேம்பட்டிற்கு பெரிதும் துணை புரிகிறது.. இந்த வைட்டமின் இதய செயலிழப்பையும் தடைசெய்கிறது.. அதுமட்டுமல்லாமல், இதிலுள்ள பிளவனாய்டுகள் இதயம் சிறப்பாக செயல்பட தூண்டுகோலாகிறது. உடலில் சேரும் கொலஸ்ட்ராலை, இதிலுள்ள நார்ச்சத்தக்கள் தடுப்பதால், தமனிகளில் அடைப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
இரும்புச்சத்து: ஹீமோகுளோபின் குறைபாட்டால் உள்ளவர்கள் இரும்புச்சத்து நிறைந்த காராமணியை உணவில் சேர்ப்பதால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.. அனீமியையும் விரட்டியடிக்கலாம்.. ரத்த சிவப்பணுக்களின் அதிகரிப்பால் ஆக்ஸிஜனை உடைய ரத்தம் உடல்உறுப்புகளுக்கு பாய்வதால், உறுப்புகளை சிறப்பாக இயங்க செய்கிறது.
ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளை தடுக்கும் சக்தி இந்த காராமணிக்கு உண்டு.. இதனால் செல்களின் பிறழ்சி தடுக்கப்பட்டு கேன்சர் போன்ற ஆபத்தான நோய்கள் நம்மை நெருங்கவிடாமல தடுக்கிறது.. முக்கியமாக வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும் பண்புகளை கொண்டது இந்த காராமணி. இதிலுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.. முக்கியமாக நீர்த்தன்மை நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது...
மிளகுத்தூள்: பெரும்பாலும் பயிர்கள் அனைத்துமே நார்ச்சத்து நிறைந்தவைதான் என்றாலும், இந்த காராமணியில் கூடுதல் நார்ச்சத்து உள்ளது.. இந்த நார்ச்சத்துக்கள் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றக்கூடியக்கூடியது.. எனவே, உடல் பருமன் உள்ளவர்கள் தவறாமல் காராமணியை சாப்பிடலாம்.. ஏனென்றால், அரை கப் காரமணியில் 1 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் காராமணியை அதிக மசாலா, அதிக எண்ணெய் சேர்க்காமல், காராமணியை வேகவைத்து, வெங்காயம், மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே உடல் எடை குறைய துவங்கிவிடும்.
தலைமுடி பிரச்சனை: அதுமட்டுமல்லாமல், காராமணியில் காணப்படும் மெக்னீசியமானது இன்சுலின் சுரப்பினை சீராக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆன்ட்டி ஆக்சிடென்ஸ் அதிகமாக இருப்பதால், சருமத்துக்கு கவசம்போல காராமணி காக்கிறது. இதனால், முதுமை தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது...
தலைமுடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள், காராமணியை அடிக்கடி சாப்பிடலாம்.. உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், காராமணியை சாப்பிட்டு வருவதால், பக்கவாதம், இதய நோய்கள் வராமலேயே தடுக்கப்பட்டுவிடும்.
எலும்புகள் பாதுகாப்பு: கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள், காராமணியை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த காராமணியை சாப்பிடலாம்.. அதிக அளவில் ஃபோலேட் சத்து இருப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பார்கள்.. எனவே டாக்டர்களின் ஆலோசனையை பெற்று கர்ப்பிணிகள் இதனை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
காராமணியில் நிறைந்திருக்கும் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பிலும், பற்களின் உறுதித்தன்மைக்கும் உதவுகிறது.. கோலின் என்ற வைட்டமின் B நிறைந்த இந்த பயிறு, கல்லீரல் கோளாறுகளையும் அண்டவிடாமல் செய்கிறது..
வாயு பிரச்சனை: காராமணியில் டிரிப்தோபன் சத்துக்கள் அடங்கியிருப்பதால், உடல் சோர்வை போக்குவருடன், நன்றாக தூக்கத்தையும் தரச்செய்கிறது. அதனால், தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், தூங்கச்செல்வதற்கு முன்பு, காராமணியை சிறிது சாப்பிட்டுவிட்டு படுத்தால் நிம்மதியான தூக்கம் வருமாம்... ஆனால், வாயுப்பிரச்னை இருப்பவர்கள் இந்த காராமணியை தவிர்க்கலாம்..
இறந்த சரும செல்கள்: காராமணியில் ஃப்ரீ ரேடிகல்களின் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாப்பதால், அனைத்து வயதினருமே இதனை பயன்படுத்தலாம்.. உணவில் அடிக்கடி காராமணி சேர்த்து கொள்பவர்களுக்கு, தோலில் கருந்திட்டுகள், சுருக்கம் போன்ற வயது முதிர்வின் அறிகுறிகள் அவ்வளவாக வருவதில்லை.. அத்துடன், இறந்த சரும செல்களை நீக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
காராமணியிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றன... கூந்தலை பளபளப்பாக வைத்துக்கொள்ள காராமணியை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம் .. இது முடி உதிர்வதையும் குறைப்பதாக சொல்கிறார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications