டேஞ்சரான பெருங்குடல் கேன்சரை தடுக்கும் கிவி பழம்.. எலும்பு, கண், சருமம் நலம் பெற உதவும் கிவி பழங்கள்
சென்னை: ஆரோக்கியமான வாழ்வுக்கு பழங்களும் அத்தியாவசியமாக உள்ளன.. அந்த வகையில், கிவி பழத்தை சொல்லலாம்.. வைட்டமின் C, K, E, போலேட், பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த பழம்தான் கிவி.. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பிற பழங்களில் இல்லாத சிறப்புகள் இந்த பழத்தில் இருப்பதாக சொல்வது ஏன்? யார் யாரெல்லாம் கிவி பழத்தை சாப்பிடலாம்? இவைகளை பற்றியெல்லாம் இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
கிவி பழங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.. எனவே, அஜீரண குறைபாடுகளை போக்கி, செரிமானத்தை சீராக்குகிறது.. இதனால் உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் வெளியேறி, குடலின் செயல்பாடுகள் சீராகின்றன.. உடல் எடையை குறைக்க வேண்டுமானால் கிவி பழம் பெஸ்ட் சாய்ஸ்..

ஆராய்ச்சிகள் தொடர்கின்றன
கிவி பழங்கள் பற்றின ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.. பெருங்குடல் புற்றுநோயை கிவி பழங்கள் தடுக்கக் கூடியதாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்...
வழக்கமான உணவில் கிவியையும் சேர்த்து கொள்ளும்போது, சில வகையான கேன்சர்கள் செல்கள் உருவாவதை முன்கூட்டியே தடுக்க முடிகிறது.. இதனால் கேன்சர் உயிரணுக்களும் வளர்ச்சி பெற முடியாது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதயத்துக்கு பாதுகாப்பையும், சீரான செயல்பாட்டையும் தரக்கூடியது கிவி பழங்கள்.. அதாவது நாள்தோறும் 3 கிவி பழத்தை சாப்பிட்டு வரும்போது, ரத்தத்திலுள்ள அடர்த்தி குறைந்து, இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது..
கண் கோளாறுகள்
கிவி பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்கள் தொடர்பான கோளாறுகள் நெருங்குவதில்லை.. குறிப்பாக, மாஸ்குலார் சிதைவிலிருந்து கண்ணை பாதுகாக்கும் திறன் கிவி பழங்களுக்கு இருக்கிறதாம்.. குறிப்பாக, பார்வை சிதைவை 36% குறைக்கக்கூடியது கிவி பழங்கள் என்று இன்னொரு ஆய்வு கூறுகிறது.
கிவியில் வைட்டமின் C நிரம்ப உள்ளதால், இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச கோளாறு உள்ளவர்கள், தாராளமாக சாப்பிடலாம்... அதுமட்டுமல்ல, கிவி பழங்கள் ரத்தம் உறைவதையே தடுக்கக் கூடியதாம்.. ரத்த கொழுப்பு காரணமாக உண்டாகும் ஆபத்தையும் போக்குகின்றன..
கிவி பழங்கள்
வைட்டமின் D சத்து நிறைந்த கிவி பழங்கள், தோல் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியவை.. சரும சுருக்கங்கள், தள்ளி போடப்படுகின்றன.. மேலும், ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து செல்களை பாதுகாத்து, சருமம் பொலிவு பெற தூண்டுகோலாகின்றன.
ரத்த நாளங்கள், எலும்பு, பற்களின் ஆரோக்கியம் தழைக்க கிவி உதவுகிறது.. ஏனென்றால், 1 சிறிய கிவி பழத்தில் அதாவது 75 கிராம் கிவி பழத்தில், 42 கலோரிகள், 0.1 கிராம் புரோட்டீன், 10.1 கிராம் கார்போஹைட்ரேட், 0.4 கிராம் கொழுப்பு, வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளதாம்..
நிம்மதியான தூக்கம்
இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், கிவி பழத்தை சாப்பிடலாம்.. ஏனென்றால், கிவியில் உள்ள செரோடோனின் மனதை சாந்தப்படுத்துகிறது..
நிம்மதியான தூக்கத்துக்கு வழி வகுக்க செய்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது: இந்த பழத்தில் உள்ள சில சேர்மங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. இது நம்மை மனதளவில் புத்துணர்ச்சியாகவே வைத்திருக்கிறது. அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் கிவி பழங்களை மிதமாக சாப்பிடுவதே சிறந்தது.
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications