"அந்த" விஷயத்தில் ஆக்டிவாக இருப்போருக்கு.. இந்த பாதிப்பு கண்டிப்பாக வரும்.. அலர்ட் தரும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: பாலியல் ரீதியாக ஆக்டிவாக இருப்போருக்கு வரக் கூடிய புது வகை பாதிப்பு குறித்து இப்போது மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கர்ப்பப்பை வாய் கேன்சர் குறித்து இப்போது பலருக்கும் தெரிவதே இல்லை. பொதுவாக ஜனவரி மாதம் ஜனவரி மாதம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்றால் என்ன.. அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கேன்சர்: ஹெச்பிவி (HPV) அதாவது மனித பாப்பிலோமா வைரஸ் தான் இது உலகளவில் பரவும் மிகவும் பொதுவான பாலியல் தொற்று ஆகும். இந்த ஹெச்பிவி என்பது ஒரே ஒரு வைரஸ் இல்லை. அவை சுமார் 200 வைரஸ்களை கொண்ட தொகுப்பாகும். அவற்றில் சில குறிப்பிட்ட வைரஸ்கள் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் இருக்கிறது.
உலகெங்கிலும் பெண்கள் மத்தியில் பரவும் கேன்சர்களில் 4ஆவது பொதுவான கேன்சர் இந்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாகும். இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், "கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இளம் பெண்களை அதிகம் பாதிக்கிறது. இதன் விளைவாக, புற்றுநோயால் தாயை இழக்கும் 20% குழந்தைகளுக்கு மீண்டும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது" என்றார்.
பாதிக்கும்: ஹெச்பிவி என்பது தோல், பிறப்புறுப்பு பகுதி மற்றும் தொண்டையைப் பாதிக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த வைரஸ் பாதிப்பு நோயெதிர்ப்பு அமைப்பை முழுமையாக அழிக்கிறது. அதேநேரம் தொடர்ச்சியாக இந்த தொற்று ஏற்படும் போது அது உடலில் அசாதாரண செல்களை உருவாக்கலாம். அது புற்றுநோயாகக் கூட மாறும்.
ஹெச்பிவி என்றால் என்ன: ஹெச்பிவி என்பது வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடலுறவு கொள்வதன் மூலம் பரவுகிறது எந்த வடிவத்தில் உடலுறவு கொண்டாலும் இந்த பாதிப்பு ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2018இல் மட்டும் சுமார் 43 மில்லியன் பேருக்கு இந்த ஹெச்பிவி பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் டீன் ஏஜ் வயதிலும் 20களிலும் உள்ளவர்கள் ஆவர்.
என்ன நடக்கும்: பல வகையான ஹெச்பிவி வைரசால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அதேநேரம் சில குறிப்பிட்ட வகை பாதிப்புகள் மோசமான சிக்கலை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஹெச்பிவி மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு இடையே வலுவான தொடர்பு இருக்கிறது. குறிப்பாக ஹெச்பிவி 16 மற்றும் ஹெச்பிவி 18 ஆகியவை தான் பெரும்பாலான கேன்சருக்கு காரணமாக இருக்கிறது. இது டிஸ்ப்ளாசியாவுக்கும் வழிவகுக்கும். இந்த உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஹெச்பிவி அதன் டிஎன்ஏவை ஹோஸ்ட் செல்களில் செலுத்துவதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. வைரஸால் உற்பத்தி செய்யப்படும் இரண்டு புரதங்கள், E6 மற்றும் E7 உடலில் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுவே கேன்சருக்கு வித்திடும்.
யாருக்கு அதிகம் ஏற்படும்: ஹெச்பிவி தொற்று கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதே நேரம், புகைபிடித்தல், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் கருத்தடை மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்வதும் இந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாலியல் ரீதியாக ஆக்டிவாக இருக்கும் அனைவருக்கும் ஏற்படலாம். இதற்கான வேக்சின்களும் இருக்கிறது. தடுப்பூசிகள் அதைக் கட்டுப்படுத்தும். பாலியல் ரீதியாக ஆக்டிவாக இருப்போர், பாதுகாப்பான உடலுறவு கொள்ளாமல் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் ஆபத்து மிக மிக அதிகம்.












Click it and Unblock the Notifications