டெய்லி காலையில் வெறும் வயிற்றில் "இதை" மட்டும் செய்யுங்க.. உடல் எடை தன்னால குறையும்! நோட் பண்ணுங்க
சென்னை: நீங்கள் எடை குறைக்க வேண்டும் என்று முயன்றும் முடியவில்லையா.. கவலை வேண்டாம்.. ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஒரு விஷயத்தைச் செய்தால் போதும் உடல் எடை தானாகக் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நம்மில் பலரும் ஃபிட்டாக இருக்கவும் உடல் எடையைக் குறைக்கவும் செய்யவும் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி இருப்போம்.. உடற்பயிற்சி எடை குறைப்பில் முக்கியம் என்றாலும்.. அதை எப்போது செய்கிறோம் என்பதும் அதே அளவுக்கு முக்கியமானது.

அல்லு அர்ஜுன் பிட்னஸ் சீக்ரெட்:
சமீபத்தில் புஷ்பா 2 புகழ் அல்லு அர்ஜுன் கூட தான் வெறும் ரன்னிங் செல்வேன் எனக் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தினசரி காலை ஒரே உணவைத் தான் அவர் எடுத்துக் கொள்வாராம். முட்டை அதிகம் இருக்கும் உணவையே அவர் காலை பிரேக் ஃபாஸ்ட்டிற்கு எடுத்துக் கொள்வாராம். அதுவே தனது ஃபிட்னஸின் சீக்ரெட் என்கிறார் 41 வயதான
சரி, அவர் சொன்னது போலவே வெறும் வயிற்றில் ரன்னிங் செய்தால் உடலுக்கு நல்லதா.. காலை உணவுக்கு முட்டை எடுத்துக் கொண்டால் என்ன மாதிரியான நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தினசரி முட்டையைச் சாப்பிடலாமா:
முதலில் முட்டை குறித்துப் பார்க்கலாம். நம்மில் பலரும் தினசரி முட்டையைச் சாப்பிட்டால்.. அதுவும் குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிட்டால் ஏதோ கொழுப்பு தேர்ந்துவிடும் என நினைத்துத் தவிர்த்துவிடுவோம். ஆனால், உண்மையில் தினசரி முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முட்டையில் உயர் ரக புரதம் அதிகமாக இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். நாம் சாப்பிடும் உணவில் புரதம் அதிகமாக இருந்தால்.. அதிக நேரத்திற்கு வயிறு நிரம்பி இருக்கும் உணர்வு ஏற்படும். இதனால் அளவுக்கு மீறிச் சாப்பிடுவது, தேவையில்லாமல் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது குறையும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முட்டையில் வைட்டமின்கள் ஏ, பி2, பி5, பி12 மற்றும் பி9 போன்ற அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் அது காலை உணவுக்கு மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா:
குறிப்பாக ஒமேகா-3 அமிலங்கள், டி.ஹெச்.ஏ மற்றும் இ.பி.ஏ உள்ளிட்டவை இருப்பதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் இது தருகிறது. முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் இருக்கிறது என்ற போதிலும் தினசரி ஓரிரு முட்டைகளைச் சாப்பிடுவதால் எதுவும் ஆகப்போவதில்லை. எனவே, தினசரி முட்டையைக் காலை நேரத்தில் எடுத்துக் கொள்வது உடலுக்கு ரொம்பவே நல்லதுதான்.
அடுத்து காலையில் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வெறும் வயிற்றில் ரன்னிங் செய்வது. இது நமக்கு பல்வேறு வழிகளில் உடலுக்கு நன்மை தரும் என்றே நரம்பியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "காலையில் வெறும் வயிற்றில் ரன்னிங் செல்லும் போது உடலில் இருக்கும் கொழுப்பு எளிதாகக் கரையும். எடை இழப்பு வேகமாக நடக்கும். வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது கொழுப்பு திசுக்களில் லிபோலிசிஸ் அதிகரிக்கிறது. இது கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தையும் தூண்டுகிறது. இதன் மூலம் எடை இழப்பு சற்று வேகமாக நடக்கிறது" என்கிறார்கள்.
எடை இழப்பிற்கு முக்கியம்:
அதாவது நீங்கள் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா என்றால்.. நீங்கள் காலை முதல் எடுத்துக்கொண்ட உணவின் கார்போஹைட்ரேட்டுதான் முதலில் எனர்ஜியாக பயன்படுத்தப்படும். அதேநேரம் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால் நேரடியாக கொழுப்பு பயன்படுத்தப்படும். இதைத்தான் லிபோலிசிஸ் என்று குறிப்பிடுகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications