உங்க உதடு கருப்பா இருக்கா? ஒரு துண்டு பீட்ரூட்டை உதட்டில் தேய்த்து பாருங்க.. சூப்பர் பியூட்டி டிப்ஸ்
சென்னை: உதடுகளிலிருக்கும் கருமை நிறத்தை போக்கவும், உதடுகள் வெடிப்புகள் இல்லாமல் பொலிவின்றி காணப்படவும் பீட்ரூட் சாறுகள் பெரும் பங்கினை வகிக்கின்றன.
சிலருக்கு உதடுகள் வறண்டு போய் காணப்படும்.. சிலருக்கு கருமை நிறத்தில் காணப்படும்.. சிலருக்கு ஊட்டச்சத்து குறைந்து காணப்படலாம்.. இதற்கெல்லாம் தீர்வாகவே பீட்ரூட் பரிந்துரைக்கப்படுகிறது.

உதடுகள் நிறம்: காரணம், பீட்ரூட்கள் இளம் சிவப்பு நிறத்தினால் ஆனவை.. இந்த நிறம்தான், நம்முடைய உதடுகளின் நிறமும்கூட.. எனவே, உதடு போலவே, அதே நிறத்தை பீட்ரூட்கள் தருகின்றன.. அந்தவகையில், இயற்கை மாய்ஸ்சுரைசராக பீட்ரூட்கள் செயல்படுகின்றன..
உதடுகளில் நீர்தன்மை இல்லாததால் தான் வறண்டு வெடிப்பு வந்துவிடுகிறது.. அதனால், அதிக நீர்ச்சத்துக் கொண்ட ஒரு உணவுப் பொருளாக இருக்கும் பீட்ரூட் கிழங்குகள் இதற்கு சிறந்த மருந்தாகவும், , சிறந்த நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.. அத்துடன், உதட்டை எப்போதுமே ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளவும் தூண்டுகோலாகிறது.
உதட்டு வெடிப்புகள்: வைட்டமின் C சத்துக்கள் இந்த காயில் அதிகமாக உள்ளதால், உதடுகளிலுள்ள உதட்டில் படர்ந்திருக்கும் கருமை நிறத்தை போக்குகிறது.. இதனால் உதட்டு வெடிப்புகளும் நீங்குகிறது. உதட்டில் உள்ள கோடுகளை நீக்கிவிட்டாலே, வயதான தோற்றமும் நாலடி தள்ளிப்போடப்பட்டு, இளமையும், பொலிவும் காணப்படும்.
இதற்கெல்லாம் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தாலே போதும்.. அதேபோல, பீட்ரூட்டை நன்றாக மசித்து, அதனுடன் சர்க்கரை, சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல குழைத்து, தினமும் உதட்டில் தடவி வந்தால், உதட்டிலிருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.. சிறிது பீட்ரூட் துண்டை, அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு, அதனை அப்படியே உதடுகள் மீது தடவினாலும், உதடுகள் பொலிவாகும்..
ரோஸ் வாட்டர்: அதேபோல, 1 ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ், 1 ஸ்பூன் காய்ச்சாத பால், அரை ஸ்பூன் ரோஸ் வாட்டர் இந்த மூன்றையும் தடவி, உதடுகளில் 20 நிமிடம் ஊறவைத்து கழுவி வந்தால், உதடுகள் பொலிவுடனும், இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறும். அல்லது 1 டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸ், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 ஸ்பூன் பசு நெய் இந்த மூன்றையும் பேஸ்ட் போல கலந்து தினமும் தூங்க செல்வதற்கு முன்பு, இரவில் உதடுகளில் தடவி வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்பட துவங்குமாம்.
அல்லது ஒரு ஸ்பூன் பீட்ரூட் சாறில், எலுமிச்சை சாறு சில துளிகள் சேர்த்து உதடுகள் மீது தேய்த்து வந்தாலும் உதடுகள் மினுமினுப்பாகும்..
சூப்பர் பலன்கள்: காரணம், பீட்ரூட், எலுமிச்சம் பழம் இந்த இரண்டிலுமே வைட்டமின் C அதிகமாக உள்ளதால், உதடுகளை பராமரிக்க உதவுகின்றன.. ஒரு மென்மையான சீரான நிறத்தையும் தருகிறது.. உதடுகளில் படிந்துள்ள கருமை நிறத்தையும் போக்குகிறது. இதில் ஏதாவது ஒரு டிப்ஸை தினமும் பயன்படுத்தி வரும்போது, ஒரு வாரத்திற்குள்ளேயே உதட்டில் நல்ல மாற்றங்களை காணலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications