மீனை வாங்கும்போது மத்தியை தூக்குங்க, மத்ததை விடுங்க.. நீரிழிவு, இதய நோயாளிக்கு உதவும் மத்தி மீன்கள்
சென்னை: பல வருட காலமாக பலராலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட மீன்தான் இந்த மத்தி மீன்கள்.. சாளை மீன் என்று சொல்லக்கூடிய இந்த மத்தி மீனுக்கு திடீரென மவுசு எகிறி விற்பனை ஆக என்ன காரணம் தெரியுமா? மத்தி மீன்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன? மத்தி மீனை உணவில் சேர்ப்பதால் தீரக்கூடிய உடல் தொந்தரவுகள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
மனித உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான சத்துக்கள் மத்தி மீனில் உள்ளது. எனவே, இந்த மீனை உணவில் அடிக்கடி சாப்பிடுவதால், நீரிழிவு நோயின் தீவிரம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது..சர்க்கரையை உறிஞ்சி, இன்சுலின் தட்டுப்பாட்டை குறைக்க செய்கிறது.. இதனால் இதய நோய்கள் ஆபத்து குறைக்கப்படுகிறது..

மத்தி மீனின் ஸ்பெஷல்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்தான், இதயத்தை காக்கக்கூடியதில் பெரும் பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் மத்தி மீனை சாப்பிடுவதால், இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவேதான், இந்த மீனுக்கான கிரேஸ் உயர்ந்து வருகிறது. அதனால்தான், தமிழ்நாட்டை விட கேரளாவில், இந்த மீனை அதிகம் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
மத்தி மீனில் புரோட்டீன், வைட்டமின் D, B5, ஒமேகா 3 அமிலங்கள் அதிகமாக உள்ளது.. 100 கிராம் மத்தி மீனில், புரோட்டீன் 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும், கொழுப்பு, வைட்டமின், தாதுச்சத்து அடங்கியிருக்கின்றன.. நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களுக்கு மத்தி மீனை போன்ற சிறந்த மருந்து கிடையாது.
எலும்பு ஆரோக்கியம்
ஃபோலேட், செனிலியம், பாஸ்பரஸ், வைட்டமின் B12 சத்துக்கள் மத்தி மீனில் இருப்பதால், ரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராகும், மேலும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது. கண்பார்வை பாதிப்புகளை தடுக்கவும் மத்தி உதவுகிறது. ஒமேகா - 3 காரணமாக கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
கால்சியம் அவசியம்
கால்சியம் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். மத்தி மீனில் இருக்கும் அயோடின் தாதுசத்து முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளை சாப்பிடுபவர்களுக்கு சருமம் பளிச்சிடும். மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் B 12 உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications